Category: இலங்கை செய்திகள்

  • செம்மணியின் சோகம் : நிறைவுறாத எண்களுடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு

    யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நீதிமன்ற அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமையுடன் நிறைவடைந்துள்ளன. இன்றைய  அகழ்வின்போது நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அதன் 56ஆவது மற்றும் இறுதி நாளான இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. இதனடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப்…

  • செம்மணி மனித புதை குழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு

    செம்மணி மனித புதை குழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி 3 ஆம் கட்டத்தின் 56 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதனிடையே, யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. இதன்படி நேற்றைய தினம் புதிதாக 10 என்பு கூடுகள் வெளிப்பட்ட நிலையில், ஏற்கனவே வெளிப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான…

  • கிளிநொச்சியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல்களைப் பரப்பியவர் கைது

    கிளிநொச்சி, பளை பகுதியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதுடைய ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பின் புறநகரான பெல்லன்வில பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  • முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

    முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது செய்யப்பட்டுள்ளார். ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களைத் தனது தனிப்பட்ட பணியாளர் குழாமில் இணைத்துக் கொண்டமை தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருகை தந்தார். இந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.

  • செம்மணியில் இன்றும் புதிதாக அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகள்

    செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(18) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 55ஆவது நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 109 நாள் அகழ்வு பணிகளின்…

  • பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

    கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் என்றழைக்கப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கில், சிவநேசதுரை சந்திரகாந்தன்…

  • பலாலி காணி விடுவிப்பு போராட்டம் தொடர்பில் 5 பேருக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

    யாழ்ப்பாணம் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக பலாலி காவல்துறையால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 16ஆம் திகதி, பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.…

  • கோயில் நகைகள் மாயம் – பிரதம குருவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை

    கொழும்பு 02, கொம்பனி வீதியிலுள்ள கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.267000 இலட்சம் பெறுமதியான நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கோயிலின் பிரதம குருவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்தப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோயிலுக்குச் சொந்தமான நகைகளை அடகு வைத்து, கொட்டாஞ்சேனை புதிய செட்டியார் வீதியில் காணியொன்றை கொள்வனவு செய்வதற்கு அந்தப்…

  • ‘கஞ்சிப்பான இம்ரானின்’ நெருங்கிய உறவினர் கொலை – ஐவர் கைது

    ‘கஞ்சிப்பான இம்ரானின்’ நெருங்கிய உறவினராகக் கருதப்படும் 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொஹிதீன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10ஆம் திகதி மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 25…

  • கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட’சமிட்புர சது’

    ‘சமிட்புர சது’ என்ற கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக பலத்த பாதுகாப்புடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 28 வயதுடைய திமுத்து சதுரங்க எனப்படும் ‘சமிட்புர சத்து’ ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று காலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார். கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர்களில் ஒருவரான இவர், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட ஒருவராகக் கருதப்படுகிறார். ‘சமிட்புர…