Category: இலங்கை செய்திகள்
-
“இதுவே எனது கடைசி உரையாக இருக்கலாம்” – சபையில் இராமநாதன் அர்ச்சுனா நெகிழ்ச்சி
“இதுவே தனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் தன்னிடம், “நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர் யார்?” எனக் கேள்வி எழுப்பியதாக அவர் குறிப்பிட்டார். அப்போது, வேறு எந்தப் பெயரும் தனது நினைவுக்கு வராத நிலையில், “நளிந்த அண்ணா” எனத் தான் பதிலளித்ததாகவும் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். எனினும், நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்த அவர், இனிமேல்…
-
கொழும்பு – கொம்பனித்தெரு ஆலய நகைகள் நன்கொடைகள் மூலம் மீட்பு
கொழும்பு-கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகத்தாக்களின் தனிப்பட்ட நிதியுதவி மூலம் ஆலய தங்க நகைகள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் புனிதத்தையும் பக்தர்களின் நம்பிக்கையையும் காக்கும் நோக்கில், தர்மகத்தாக்களான ஏ.எம்.ரி.தனநாயகம் 12.4 மில்லியன் ரூபாவையும், திருக்குமாரன் நடேசன் 12.4 மில்லியன் ரூபாவையும் தமது சொந்த நிதியிலிருந்து நன்கொடையாக வழங்கி அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை முழுமையாக மீட்டுள்ளனர். ஆலயத்தில் கடமையாற்றிய சதீஸ்குமார குருக்கள் என்பவர் நகைப்பெட்டகத்தின் சாவியைப் பயன்படுத்தி இத்திருட்டில்…
-
கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் மற்றும் கனேடிய முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டின் இன்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். குறித்த சந்திப்பில்,வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆளுநர், உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார். இவ்வலயங்கள் மாகாணத்தின் முதலீட்டு சூழலை விரிவுபடுத்துவதற்கும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும்…
-
பூட்டான் உயர்நீதிமன்றத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சிறப்புரை
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தலைமையிலான பிரதிநிதிகள் குழு பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது. இந்த விஜயத்தின் முக்கிய அம்சமாக, பூட்டான் நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளனர். பூட்டான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட எட்டு நீதிபதிகள் அடங்கிய குழுவினர், இலங்கை பிரதிநிதிகளை உற்சாகமாக வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான சட்ட மற்றும் நீதித்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும்…
-
வவுனியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்
வவுனியா பூவரசன் குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளனர். பூவரசன் குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீ வேகமாகப் பரவுவதை உடனடியாகப் கட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கை விமானப்படை, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், பூவரசன் குளம் பகுதியை விரைவாக அடைந்து தீயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். விமானப்படையின் இந்த உடனடித் நடவடிக்கை காரணமாக, அருகிலுள்ள வனக்காப்பகத்திற்கும் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கும் ஏற்பட…
-
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் குறித்து ரவிகரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களே காணப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இந்நிலையில், குறித்த இரு மாவட்டங்களுக்கும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,”முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென தனியான பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர்…
-
இலங்கை சுங்கத்தின் பாரிய மோசடி – நண்பரை பாதுகாக்கிறாரா ஜனாதிபதி?
“இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மற்றுமொரு பெருவாரியான மோசடி இதுவாகும். சுங்கத் திணைக்களத்திற்குள் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்திய 123 கொள்கலன்களுக்குப் (Containers) புறம்பாகவே இந்த மோசடி இடம்பெற்றுள்ளது” எனக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க நேற்று (19) நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். இது தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி தெளிவான அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் என வலியுறுத்திய அவர், குறித்த விசாரணை அறிக்கையை அரசாங்கம் மறைப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். இது குறித்து மேலும் கருத்து…
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெறும் இன்றைய அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
-
செம்மணியின் சோகம் : நிறைவுறாத எண்களுடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நீதிமன்ற அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமையுடன் நிறைவடைந்துள்ளன. இன்றைய அகழ்வின்போது நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அதன் 56ஆவது மற்றும் இறுதி நாளான இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. இதனடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப்…
-
செம்மணி மனித புதை குழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு
செம்மணி மனித புதை குழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி 3 ஆம் கட்டத்தின் 56 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதனிடையே, யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. இதன்படி நேற்றைய தினம் புதிதாக 10 என்பு கூடுகள் வெளிப்பட்ட நிலையில், ஏற்கனவே வெளிப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான…