Category: இலங்கை செய்திகள்

  • பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய ‘இண்டர்போல்’ ஊடாக ‘நீல அறிவித்தல்’ கோரிக்கை!

    தற்போது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கண்டறிவதற்காக ‘இன்டர்போல் நீல அறிவிப்பு’ (Interpol Blue Notice) ஒன்றைப் பிறப்பிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மாத்தறை, பிரவுன்ஸ்ஹில் பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்தமை மற்றும் ஊவா மாகாண சபை தேர்தல் காலத்தில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 7.8 மில்லியன் ரூபாய் நிதியைச் செலவிட்டு 12,000 டி-ஷர்ட்டுகளை விநியோகித்தமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலான நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டுகள் குறித்தே இந்த…

  • சவூதியில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்தினருக்கு ரிஷாட் பதியுதீன் நேரில் சென்று ஆறுதல்..!

    சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று இரவு (18) கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது…

  • நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

    பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (18) முற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தபோது 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

  • பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிய தாதியர் குடியிருப்பு வளாகம்

    212 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கான தாதியர் குடியிருப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (19) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் போதிய தாதியர் குடியிருப்புகள் இன்மையால் தாதியர் உத்தியோகத்தர்கள் நீண்டகாலமாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அதற்கு தீர்வாக இந்த தாதியர் குடியிருப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின்…

  • சவூதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை – கஜேந்திரகுமார் அவசர கோரிக்கை

    சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் தண்டனையை இரத்து செய்வதற்கும், அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோரிக்கை…

  • வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை- அதிரடி நடவடிக்கைகள்

    கேகாலையின் -புலத்கோஹுபிட்டிய (Bulathkohupitiya) பகுதியிலுள்ள டெடுகல (Dedugala) கிராமத்தின் வீடு ஒன்றுக்குள் நுழைந்த முழு வளர்ச்சியடைந்த சிறுத்தை ஒன்று, எவ்விதப் பாதிப்புமின்றி மீட்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். புலத்கோஹுபிட்டிய அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, கால்நடை மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் அந்த சிறுத்தையை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த இடத்திலிருந்து சிறுத்தையை மீட்ட பிறகு, அதனை அதன் தாயுடன் மீண்டும் இணைக்க வனவிலங்கு அதிகாரிகள் முயற்சித்த போதிலும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதனைத்…

  • நாமல் ராஜபக்ச இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

    கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (18) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வளவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், கையூட்டலாக 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் வரவு…

  • முல்லைத்தீவில் காணிகளை விடுவிக்க களஆய்வு

    முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், வனவளத்திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியிருந்த நிலையில், வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் இணைந்த களஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம், வனவளத் திணைக்களம், பாராளுமன்ற உறுப்பினர் துரைரராசா ரவிகரன், காணிகளுக்குரிய மக்கள் ஆகியோர் இணைந்து குறித்த பகுதிக்கு நேரில் சென்று இணைந்த களஆய்வு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பில் மேலும்…

  • திலீபன் நினைவேந்தலை புறக்கணித்த தவிசாளர் உள்ளிட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்

    வலி. வடக்கு பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில், பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது புறக்கணித்துள்ளனர். வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (17) சபா மண்டபத்தில் நடைபெறவிருந்த நிலையில், கீரிமலை பகுதிகளில் அனுமதியின்றி வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தவிசாளர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கண்டித்து பெரும்பாலான உறுப்பினர்கள் அமர்வை…

  • வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கு : முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

    ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர்,கருத்திற்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை, முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவிட்டது. தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத…