Category: இலங்கை செய்திகள்

  • மட்டக்குளி விபத்து – கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி

    மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த விடயம் உறுதியாகியுள்ளது. மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர்…

  • சீ.வீ.கே.சிவஞானம், சுமந்திரன் உட்பட 5 தரப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

    இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 தரப்பினருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியின் விதிகளை மீறி நீக்கியமைக்கு எதிராக, தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர்…

  • நாமல் ராஜபக்ஷவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

    பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக, சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையிலேயே அவருக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரின் பிணைக் கோரிக்கை தொடர்பான தீர்மானமும் அன்றைய தினமே அறிவிக்கப்படும்…

  • குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணி மீண்டும் ஒத்திவைப்பு

    குருக்கள்மடம் பகுதியில் விடுதலைப் புலிகளால் முஸ்லீம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியானது மீண்டும் மண் படிவ மாதிரி பரிசோதனைகளுக்காக அகழ்வாய்வு நடவடிக்கை மேற்கொள்ளும் முகமாக நேற்று (15) தொடக்கம் ஒரு வாரம் ஒதுக்கப்பட்ட நிலையில் ஆய்வினை மேற்கொள்ளும் நிபுனர்களின் வேண்டுகோளுக்கமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகள் எதிர்வரும் ஐப்பசி மாதம் 06 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னமே கடந்த பங்குனி 30 ஆம் திகதி தொடக்கம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எந்தவித தடயங்களும்…

  • ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்

    ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும்  புறப்பட்டுச் சென்றுள்ளார். இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர். ஷிரந்தி ராஜபக்ஷ வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

    முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் இருவர், 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற தொடர் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நீதிவான் ஏ.தர்ஷினி முன்னிலையில் நேற்று (15) காணொளி தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பலரின் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் மற்றும் வர்த்தகர் ஒருவரை…

  • மட்டக்களப்பு எல்லைப் பிரதேசங்களுக்கு ஞா. ஸ்ரீநேசன் எம்.பி. களவிஜயம்

    மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசங்களான பெரிய புல்லுமலை மற்றும் கித்துள் பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் அவர்கள் இன்று 15.09.2026 களவிஜயம் மேற்கொண்டார். இதன்போது பெரிய புல்லுமலை மற்றும் கித்துள் பகுதிகளில் உள்ள பாடசாலைகள், வைத்தியசாலை மற்றும் வீதிகளை நேரில் பார்வையிட்டார். குறித்த நிறுவனங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைத் தேவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார். பெரிய புல்லுமலை பகுதியில் போக்குவரத்தில் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு…

  • அர்ச்சுனா ராமநாதன் எம்பிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை ஆரம்பம்

    அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த உத்தரவு, பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று, அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை…

  • நீண்ட தூர ஜெட் விமானம் சொந்தமாக வைத்துள்ள இலங்கையர்!

    தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் ஒன்றைச் சொந்தமாக வைத்துள்ள முதலாவது இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே (Dr. Rosh Jalagge), தனது ஜெட் விமானத்தில் நேற்று முன்தினம் (13) ரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தார். கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் கல்வியைப் பயின்றுள்ள ரோஷ் ஜலகே, தற்போது அவுஸ்திரேலியாவில் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பல தொழில்களைச் நடத்தி வரும் ஓர் இலங்கை பில்லியனர் ஆவார். இவர் இலங்கைக்கு வருகை தந்த ‘கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி-5’ (Gulfstream G-V)…

  • முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் சுவர் இடிப்பு

    முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் மிக முக்கியமானதொரு வரலாற்று இடத்தில் அமைந்துள்ள நினைவேந்தல் சுவரே இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல்வாதியும் யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ரத்னம் சதீஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையால்…