Category: இலங்கை செய்திகள்
-
முல்லைத்தீவில் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் – ரவிகரன் எம்.பி.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து ஏற்கனவே விடுவிக்கத் தீர்மானித்த 17,469.58 ஹெக்டயர் காணிகளையும் உடனடியாக விடுவித்து காணிகளுக்குரிய மக்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை யுத்தகாலத்தில் மக்களுக்கு காணி ஆவணங்களை எடுத்துச் செல்லக்கூடிய சூழல் இருக்கவில்லை என இதன்போது சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், அவ்வாறு ஏற்கனவே விடுவிப்பதெனத் தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போது மக்களிடமிருந்து ஆவணங்களைக் கோருவதை ஏற்றுக்கொள்ளமுடியாதெனவுந் தெரிவித்துள்ளார். குறிப்பாக இன்று (14) இடம்பெற்ற…
-
அலரி மாளிகை வளாகத்தில் விழுந்து கிடந்த றக்பி வீரர் தாஜுதீன்!
அலரி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவே இந்த சம்பவத்தை விபத்தாக மாற்றுவதற்கு உதவி செய்தார் என்ற திடுக்கிடும் தகவலை புலனாய்வு ஆதரங்களை மேற்கோள் காட்டி இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் லண்டனில் அமைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2015ஆம் ஆண்டு…
-
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்
கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இக்குழு அண்மையில் கூடியபோதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்போது 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி ஆகிய தொகுதிகளை (Modular) உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இங்கு 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள…
-
புஷ்பிகாவின் கிரீடத்தைப் பறித்த விவகாரம்: கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரன் விடுதலை!
கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற Mrs. Sri Lanka அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில், வெற்றி பெற்ற புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தைப் பலவந்தமாக அகற்றி, அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் Mrs. Sri Lanka கரோலின் ஜூரி மற்றும் ஆடை வடிவமைப்பு கலைஞர் சூலா பத்மேந்திரன் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரம இந்தத்…
-
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி யாழில் பேரணி
செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது, இன்று(13.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும் , சான்று பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்றது இன படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனித புதைகுழி காணப்படுகிறது. அதனால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என போராட்டக்காரர்களால் கோரிக்கைகள்…
-
தள்ளாடிய நிலையில் அனுராதபுர பேரணியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த
கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகை தந்திருந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு எதிரான பேரணி அனுராதபுரத்தில் ஆரம்பமாகியது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த குறித்த பேரணியானது, அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் தந்தை தலைமை தாங்குவார் என அக்கட்சி தெரிவித்திருந்தது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று குறித்த பேரணியில்…
-
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு இரக்கமற்ற தண்டனை! பகிரங்கமாக அறிவித்தார் ஜனாதிபதி அநுர
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் கருணை காட்டாது அனைவருமே கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற மக்கள் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில், முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மக்கள் நலன் சார்ந்த அரசாங்கங்களாக இருக்கவில்லை. ஊழல் நிறைந்த அந்த அரசாங்கங்கள் திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளையே பாதுகாத்தன. நாட்டில் வேரூன்றி இருக்கும் பாதாள உலகக்…
-
விஜித ஹேரத் தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம்
தாய்லாந்து தொழில் அமைச்சரின் அழைப்பிற்கமைய, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் நாளை (14) முதல் 16 ஆம் திகதி வரை தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது தாய்லாந்தின் தொழில் அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் பதில் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன், தொழில் ஒத்துழைப்பு…
-
மாரவில கடலில் சோகம்: 5 பேரை இழுத்துச் சென்ற இராட்சத அலைகள்
மாரவில கடல் பகுதியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். நேற்று (12) பிற்பகல் இச்சம்பவத்தில் காணாமல் போனவர், உயர்தர கணிதப் பிரிவில் பயின்று பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்ற குளியாபிட்டிய, அனுக்கனையைச் சேர்ந்த வித்தானகே ஷாலித தனுர்தர மதுஷான் என்ற 21 வயது இளைஞராவார். இவர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் குளியாபிட்டியவிலிருந்து மாரவில கடற்கரைக்குச் சுற்றுலா…
-
யாழில் விரிவுரையாளரின் அநாகரிகப் பேச்சு: தற்கொலைக்கு முயன்ற மாணவி
யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரியர் மாணவி ஒருவர், அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகப் பேச்சினால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: குறித்த மாணவி, கல்லூரியின் கழகச் செயற்பாடு ஒன்றுக்காகச் சென்று திரும்பியுள்ளார். அப்போது, விடுதிக்குப் பொறுப்பான பெண் விரிவுரையாளர், மாணவியைப் பார்த்து “எங்கு சென்று வருகிறாய்?” எனக் கேட்டுள்ளார். அதற்கு அம்மாணவி, “கழகச்…