Category: இலங்கை செய்திகள்
-
தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சல்லேவுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி தலைமையிலான அரசே முழுப் பொறுப்பு!
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லேக்கு எதிராக மூன்றாவது தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன்,அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவமாறு, தேசிய அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது. “சல்லேவுக்கான நீதி – கலந்துரையாடல் மன்றம்” என்ற கருப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் பிரதிநிதிகள், இந்த வலியுறுத்தலை விடுத்தனர். தொடர்ந்து தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் வைத்திருக்கப்படும் சுரேஷ் சல்லேக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ஜனாதிபதி…
-
நீதிமன்றத்தை அவமதிப்பு: 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பு
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சஇ உதய கம்மன்பிலஇ சுகீஸ்வர பண்டாரஇ திலித் ஜயவீரஇ அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண ஆகியோருக்கு எதிராகவே இந்த நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் தகவல்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு…
-
யாழில் பல வீடுகளில் பதிவான திருட்டுச் சம்பவங்கள் – மூவர் கைது
யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…
-
வலி.வடக்கில் தொடரும் காணி விடுவிப்பு போராட்டம் – சுமந்திரன், சாணக்கியன் நேரில் பங்கேற்பு
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி, மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலிச் சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பலாலிச் சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்று வரும் காணி விடுவிப்புப் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர். இதற்கமைய, இன்றைய போராட்டத்திலும் எம்.ஏ.சுமந்திரன்…
-
அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லேயின் மனைவி, ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை!
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீ;டிக்க வேண்டாம் என அவரது மனைவி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆகஸ்ட் 20ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில், சல்லேவை நீதிமன்றக் கண்காணிப்பில் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்குத் தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து வழங்குமாறு அவரது மனைவி கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த பின்னர், சல்லேவின் உடல்நிலை மோசமடைந்ததாகவும்,…
-
கொழும்பு போர்ட் சிட்டி கடத்தல், : 3 சீனர்களை தேடும் இலங்கை காவல்துறை
கொழும்பு துறைமுக நகர் என்று கூறப்படும் போர்ட் சிட்டி பகுதியில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேலும் 3 சீன சந்தேகநபர்களை இலங்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர். முன்னதாக, கடந்த ஜூலை 23ஆம் திகதியன்று கொழும்பு துறைமுக நகரில் வைத்து, இரண்டு சீனர்கள் மீது மற்றுமொரு சீனக்குழுவினர் தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவர் கடத்தி, உயிரிழந்ததாக காவலர்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்…
-
பண்டத்தரிப்பு சம்பவம்! கண் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்வு
பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக பலரின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் அதிகளவான சிறுவர்களும் பெண்கள் அடங்குவதாக…
-
நாமல் ராஜபக்ஷ FCID யில் முன்னிலை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். குறித்த விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக, அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமையவே நாமல் ராஜபக்ஷ அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வீட்டு மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்
கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை பொலிஸார் கடந்த 19 ஆம் திகதி அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டனர். அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களான ஜவாத், இஸ்மத் ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கல்முனை நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த…
-
அரச நிறுவனங்களில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்
தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாட்களும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார். பாடகி நந்தா மாலினியின் மறைவையடுத்து ஓகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக, இன்று (21),…