இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தலைமையிலான பிரதிநிதிகள் குழு பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.
இந்த விஜயத்தின் முக்கிய அம்சமாக, பூட்டான் நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளனர்.
பூட்டான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட எட்டு நீதிபதிகள் அடங்கிய குழுவினர், இலங்கை பிரதிநிதிகளை உற்சாகமாக வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின்போது தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான சட்ட மற்றும் நீதித்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply