கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட’சமிட்புர சது’

‘சமிட்புர சது’ என்ற கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக பலத்த பாதுகாப்புடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 28 வயதுடைய திமுத்து சதுரங்க எனப்படும் ‘சமிட்புர சத்து’ ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று காலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர்களில் ஒருவரான இவர், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட ஒருவராகக் கருதப்படுகிறார்.

‘சமிட்புர சத்து’ 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *