‘கஞ்சிப்பான இம்ரானின்’ நெருங்கிய உறவினர் கொலை – ஐவர் கைது

‘கஞ்சிப்பான இம்ரானின்’ நெருங்கிய உறவினராகக் கருதப்படும் 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொஹிதீன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 25 கிராம் 840 மில்லிகிராம் மற்றும் 12 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்போது பிரான்ஸில் வசிக்கும் ‘குடு அஞ்சு’ என்பவரே கொலையின் பின்னணியில் இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இரத்மலானை பகுதியில் இடம்பெற்ற சம்பவமொன்றுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.