Category: இலங்கை செய்திகள்

  • ஆண்டின் இறுதிக்குள் ‘எல் நினோ’ தீவிரமடைய 90% வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    நடப்பு ஆண்டில் நிலவும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றம் ஆண்டின் இறுதிக்குள் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறுவதற்கு 90 சதவீத வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல் நினோ நிகழ்வுகளை விட இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என கணிப்புகள் காட்டுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வாழும் மக்களின் உடல் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க…

  • குமாரபுரம் படுகொலை – மீள விசாரிக்க உத்தரவு!

    1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி திருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரம் கிராமத்தில் 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் அறுவருக்கு எதிராகவும் மறுவிசாரணை நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 24 தமிழ் பொதுமக்களைக் கொலை செய்தனர் எனவும் மேலும் 25 பேருக்குக் காயம் ஏற்படுத்தினர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யக்கோரி சட்ட மா அதிபர்…

  • ஹிருணிகா உள்ளிட்டோரின் வழக்கு ஒத்திவைப்பு

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகள் தொடர்பான வழக்கை நவம்பர் 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளை மறித்து, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு இன்று (17) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது,…

  • நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவடைந்த பேரணி

    ‘சர்வதேச விசாரணை தேவை’ என்ற கோரிக்கையை முன்வைத்து, தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ‘நீதியின் ஓலம்’ போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. இன்று காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணியாக ஆரம்பமான போராட்டம், வடக்கு–கிழக்கைச் சேர்ந்த மக்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி பேரணி சென்றடைந்தது. இதன்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல்…

  • இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் தகவல்

    வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஸிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபருக்கு சொந்தமான சொத்துக்கள் உட்பட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள ஐந்து விடுதிகள் தனக்குச் சொந்தமானவை என அவர் விசாரணையின் போது தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஷிரானுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணைக்குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷிரானை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தேக…

  • வடபுலத்தின் தொன்மைமிகு நல்லைக்கந்தனின் கொடியேற்றம் இன்று

    வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை 8.15 அளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர். தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் இம்மகோற்சவத்தில் ஆகஸ்ட் 26 ஆம் திகதி மஞ்சம் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் திகதி மாம்பழத்…

  • நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்

    நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் இன்று(16) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

  • மறைந்த ஊடகர் சபேஸ்வரனுக்கு வடமராட்சியில் அஞ்சலி

    யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரான மறைந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம்,  மற்றும் மைக்கல் விளையாட்டு கழகத்தின்  ஏற்பாட்டில் மைக்கல்  நேசக்கரம் அலுவலகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, மறைந்த ஊடகவியலாளர் ஆ. சபேஸ்வரனின் திருவுருவ படத்திற்கு அக வணக்கம் செலுத்தப்பட்டு, ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து  நினைவுரைகளை மூத்த ஊடகவியலாளர்  தயாபரன்,  யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பிருந்தாபன் பொன்ராசா ஊடகவியலாளர்களான…

  • வவுனியாவில் வீடு உடைத்து பெண் கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் : ஐவர் கைது!

    வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கடந்த 08 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பின்னர், வீட்டு உரிமையாளரான 51 வயது பெண் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்து விட்டு மூவரும்…

  • ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

    கொழும்பு மற்றும் வொஷிங்டன் இடையிலான ஆழமான இராஜதந்திர உறவுகள் நீடித்து வரும் பின்னணியில், சீனா இலங்கையுடனான தனது உறவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள தீவிர வியூகங்களை வகுத்து வருகிறது. கடந்த காலங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ கோருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேரடியாகப் பல உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். வர்த்தகப் போரில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சீனாவுடன் இலங்கை சற்று இடைவெளியைப் பேணியதற்கும், சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய விதிக்கப்பட்ட…