Author: Yalarasan
-
வைத்தியரை தாக்கியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் : வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் வி.பி.எஸ்.டி பத்திரன தெரிவித்தார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று(06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். முறைப்பாடு பதிவு குறித்த ஊடக சந்திப்பில், சுகாதார பணிப்பாளரிடம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அத்துமீறி நுழைந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்க வைத்தியர்கள் சிலர்…
-
யாழில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை
யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவம் கொழும்புத்துறை ஏவீ வீதி மூன்றாம் ஒழுங்கையில் உள்ள வீட்டில் இன்று(06.07.2024) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், திவிகரன் நிஷானி என்ற 29 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது
-
கனடாவில் பேரதிஸ்டம் அடித்த பெண்
கனடாவில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர் பணப்பரிசில் வென்றுள்ளார். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 49 வயதான பெட்ரிசியா வோர்டன் என்ற பெண் இவ்வாறு பரிசு வென்றுள்ளார். கடந்த மே மாதம் 31ம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த பெண் இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார். வோர்டன் கடந்த பல ஆண்டுகளாகவே லொத்தர் சீட்டிலுப்புக்களில் பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இடது உள்ளங்கை அரிப்பு எடுத்ததாகவும் அதனால் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு…
-
கொழும்பில் உயிரிழந்த மாணவர்கள் தொடர்பில் மர்மமான திடுக்கிடும் தகவல்கள்
அண்மையில் கொழும்பில் உயிரிழந்த சர்வதேச பாடசாலை மாணவர்கள், இருவர் தொடர்பில் பல்வேறுபட்ட, முன்பின்னான முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் தற்போதைய தகவல்களின்படி உயிரிழந்த மாணவனின் தந்தை மிகப்பெரும் பணக்காரர் என்பது தெரியவந்துள்ளது. உலகளாவிய ரீதியில் செயற்படும் சிகையலங்கார தொழில்துறையில் தந்தை ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு உலகின் பல நாடுகளில் அதற்கான கிளைகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் டெல்லியை தளமாக கொண்டு செயற்படும் குறித்த சலூன் இலங்கையிலும் மிகவும் பிரபல்யம் அடைந்த ஒன்றாகும். அத்துடன்…
-
சம்பந்தன் எப்போதோ இறந்துவிட்டார்: சி.அ.யோதிலிங்கம்
உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை, இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்ற படி ஏறியபோதே இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது வாராந்த அரசியல் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 15 வருடங்கள் தமிழரசியலுக்கு தலைமை தாங்கி வழி நடாத்திய சம்பந்தன் காலமாகிவிட்டார். சம்பந்தனைப் போல பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான தமிழ்த்தலைவர் வேறு எவரும் இல்லை என்று…
-
வெளிநாட்டவர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. நாட்டில் தங்கியிருக்கும் குறுகிய காலத்திற்காக இந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிபத்திரங்களை பெறுவதற்கு இதுவரை வெரஹெர வரை செல்ல வேண்டியிருந்தது. இது தொடர்பாக சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினரும், சுற்றுலாப் பயணிகளும் அவ்வப்போது விழிப்புணர்வு…
-
பிரித்தானியாவில் 11 பெண்கள் அடங்களாக 25 பேர் கொண்ட அமைச்சரவை!
பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழில் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் பிரித்தானியாவில் 11 பெண்கள் அடங்களாக 25 பேர் கொண்ட அமைச்சரவை நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழில் கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியப் பாரம்பரிய முறைக்கு அமைய மன்னர் சாள்ஸ்ஸை சந்தித்து தமது வெற்றியினை அறிவித்தார். பெக்கிங்ஹாம் மாளிகையில் மன்னரைச் சந்தித்து விட்டு கெய்ர் ஸ்டார்மர் நேரடியாகப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான இலக்கம் 10 டௌனிங் வீதிக்குச் சென்று…
-
2 குழந்தைகள் உட்பட 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்!
தலைமன்னாரில் இருந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அகதிகளாக நேற்று (05) வெள்ளிக்கிழமை காலை தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.என அறியப்படுகிறது தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோக வள்ளி (வயது 34), அவரது பிள்ளைகளான அனுஜா (வயது 08), மிஷால் (வயது 05) ஆகியோர் தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்தனர். தகவல் அறிந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்து விசாரணைக்காக 3 பேரையும்…
-
விசேட அதிரடி படை சுற்றிவளைத்து பிடிக்கப்பட்ட சிங்கள யுவதி
மொரட்டுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மொரட்டுவ படை முகாமின் மோட்டார் சைக்கிள் அணி அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுவின் அதிகாரிகள் குழு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை லுனாவ பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த யுவதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த வீட்டில்…
-
வரலாற்றை புரட்டிப்போட்ட பிரிட்டன் பொதுத் தேர்தல் ; புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர்!
2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் 14 ஆண்டுகளின் பின்னர் அந்நாட்டு தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer)பதவியேற்கவுள்ளார். 2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தொழிலாளர் கட்சி 386 இடங்களிலும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 94 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளமை இந்நிலையில் பிரிட்டனின் தோள்களில் இருந்த பெருஞ்சுமை…