Author: Yalarasan
-
மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கி சூடு இருவர் பலி இருவர்காயம்
மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி-இருவர் படுகாயம். விரிவான செய்தி மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் போது வைத்தியசாலைக்கு…
-
அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற உறுப்புரிமை! நீதிமன்றத்தின் தீர்மானம்
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மனுமீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மனுமீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அபிநவ நிவஹல் பெரமுண அமைப்பின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். விபத்தில் பலியான விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி! வாகனத்தை கைவிட்டு தப்பி ஓடிய நபர் விபத்தில் பலியான விடுதலைப் புலிகளின் முன்னாள்…
-
சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கிய கருணா!
கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகினார். கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர், கொழும்பில் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் மட்டக்களப்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த…
-
அநுரவின் ஆட்சிக்கு பெரும் சவாலாகும் திருகோணமலை துறைமுகம்!
இலங்கையின் முக்கிய சொத்துக்களின் புவிசார் மூலோபாய மகுடமாகும் திருகோணமலை துறைமுகத்தின் மீதான சர்வதேசத்தின் கண்ணோட்டமானது பரந்த பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்தே நகர்ந்து செல்கிறது. இந்த துறைமுகத்திற்குள் நிலையான தடமொன்றை பதிக்க அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. மேலும், கடந்த காலங்களில் திருகோணமலை கடற்படை தளத்தில் இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேசம் முழு கவணத்தையும் செலுத்தியமையை காணக்கூடியதாய் இருந்தது. இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு சென்று இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில்…
-
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (15) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்த அமைப்பு மெதுவாக உருவாகி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு வடக்கே தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும், ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.…
-
யாழில் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்ட இளம் குடும்பப் பெண்
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் – தொட்டிலடி பகுதியில் வசிக்கும் இளம் குடும்பப் பெண்ணொருவர் தனது கழுத்தினை தானே கூரிய ஆயுதத்தால் அறுத்துக் கொண்டுள்ளார். இன்றையதினம்(15) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த பெண்ணின் கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தனது கழுத்தினை தானே வெட்டிக் கொண்ட பெண் அராலிப் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும்…
-
கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய மர்மம் – சிக்கப்போகும் வவுனியா நபர்
கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய மர்மம் – சிக்கப்போகும் வவுனியா நபர் கனடாவில் இருந்து கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் கஞ்சா அடங்கிய 20 டின்களை இலங்கை சுங்க அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கடந்த 4ஆம் திகதி கப்பலில் வந்த கொள்கலன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடக செயலாளர் மேலதிக பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார். இந்த கஞ்சா கையிருப்பு…
-
தென்னிலங்கையில் கோர விபத்தில் சிக்கி பலியான பிள்ளைகள்! பெற்றோர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களது பெற்றோரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த தாய் மற்றும் தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 100 கிலோமீற்றர் தொலைவில், கொட்டாவையில் இருந்து பாலட்டுவ நோக்கி சென்ற காரின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக அதே திசையில் பயணித்த லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளது.…
-
சுழற்றி அடிக்கப்போகும் பெங்கால் புயல் – எப்போது கரையை கடக்கும், இன்றைய நிலவரம் என்ன?
சுழற்றி அடிக்கப்போகும் பெங்கால் புயல் – எப்போது கரையை கடக்கும், இன்றைய நிலவரம் என்ன? பெங்கால் புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை அதிகரித்து வருவதோடு, பெங்கால் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் எனவும் இந்திய ஆய்வு மையும் தெரிவித்துள்ளது. புயல் எப்போது கரையை கடக்கும்? சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று 21 செ.மீ வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும்…
-
கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் நனைந்த கனகபுரம் துயிலுமில்லம்
வடக்கு – கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மழைக்கு மத்தியிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகி உள்ளன. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மரணித்த உறவுகளுக்காக வருடாந்தம் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. நவம்பர் 21 முதல் மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 27 துயிலும் இல்லங்களில் மாலை 6.05 இடம்பெறும் சுடர் ஏற்றும்…