Category: இந்திய செய்திகள்

  • 3 மணி நேரம் நடந்தே கணவர் வீட்டுக்கு சென்ற மணப்பெண்.. சாலை வசதி இல்லாமல் சிரமப்படும் கிராமவாசிகள்

    இந்தியா பல்வேறு நிலைகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் ஒரு சில கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலம் புல்கார் என்ற கிராமத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஷர்மிளா என்ற இளம் பெண்ணிற்கு அணில் என்பவருடன் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த பிறகு ஷர்மிளா கணவர் வீடு அமைந்து இருக்க கூடிய உண்டாவா என்ற கிராமத்திற்கு உறவினர்களுடன் சென்றார். அந்த நேரத்தில்…

  • சட்டை கசங்காமல் 500 கோடி அடிப்பது ரஜினி சாரால் மட்டும்தான் முடியும்! அல்லு அர்ஜுன்

    ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஜெயிலர் 2 திரைப்படம் ரஜினிகாந்தின் நட்சத்திர அந்தஸ்து, ஸ்டைல் மற்றும் திரை ஆளுமையை வெளிப்படுத்தும் படமாக உள்ளது. ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வணிக ரீதியான பொழுதுபோக்குத் திரைப்படம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சட்டை கசங்காமல் 500 கோடி அடிப்பது ரஜினி சாரால் மட்டும்தான் முடியும் என்று தெலுங்கில் பதிவிட்டுள்ளார். இசையமைப்பாளர்…

  • `தாயார் குணமடைவதற்கு சிவனிடம் கொடுத்த வாக்குறுதி இது…’ – தினமும் 50 கிலோமீட்டர் ஓடும் இளைஞர்!

      பிச்சைக்காரன் படத்தில் தனது தாயார் குணமடைய வேண்டும் என்பதற்காக படத்தின் ஹீரோ ஒரு மண்டலத்திற்கு யாசகம் செய்து பிழைப்பு நடத்துவார். அது போன்று அதேசமயம் சற்று வித்தியாசமாக பீகாரைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது தாயார் உடல் நலம் தேறியதற்காக நேர்த்திக்கடனை செலுத்தி இருக்கிறார். பீகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞர், தனது தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இந்தியா முழுவதும் நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளார். அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த மோனு…

  • பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!

    பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் தனது 75ஆவது வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். 1989ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர், 300 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக, ‘பொற்காலம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ என்ற பாடல் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. சென்னையின் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

  • ‘இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்’ – ட்ரம்ப் தெரிவிப்பு

    அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,”இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளத் தாங்கள் தயாராக இருகின்றோம். ஒரு வருடத்திற்கும் மேலான நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது வழக்கமான ஒப்பந்தங்களை விட மிகவும் வித்தியாசமானதொரு ஒப்பந்தமாக இருக்கும்.”என தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்க்கோ ரூபியோ இந்தியாவுக்கு…

  • கண் இமைக்கு மேல் பற்கள் – இந்தியாவில் பதிவான அதிர்ச்சி சம்பவம்

    சிறுவனின் கண் இமைக்கு மேல் 2 பற்கள் வளர்ந்திருந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் போஸ்ட் இதழில் வெளியான கட்டுரை மூலம் இந்த அரிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அக்கட்டுரைப்படி, இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் கண் இமைக்கு மேலே இவ்வாறு 2 பற்கள் வளர்ந்திருந்ததாக அந்நாட்டு மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்தியாவை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு இடது கண்ணுக்கு மேலே வீக்கம் ஏற்பட்டுள்ளது. அது வலிக்கவில்லை என்பதால் ஆரம்பத்தில் அது ஒரு சாதாரண…

  • இந்தியா-நியூசிலாந்து இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு!

    இந்தியா-நியூசிலாந்து இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இன்று (20) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், நியூசிலாந்து அனைத்து இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளையும் நீக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 17வது செயல்பாட்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான, இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்கள், மாணவர்கள் மற்றும் திறன்மிக்க பணியாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுத்துள்ளதாக குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த ஒப்பந்தம், ஜவுளி, ஆடைகள், தோல்…

  • ‘இப்போது அடிவார முகாம்; அடுத்து எவரெஸ்ட் சிகரம்!’ – சவாலான மலையேற்றத்தில் சாதித்த கரூர் சிறுவன்

    கரூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் துருவ், தனது தந்தையும், கரூர் ரன்னர்ஸ் அமைப்பின் நிறுவனருமான அருண் ராஜேந்திரனுடன் இணைந்து இந்தச் சவாலான மலையேற்றப் பயணத்தை மேற்கொண்டார். கடல் மட்டத்திலிருந்து 5,364 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் அடிவார முகாமைச் சென்றடைவதற்காக, கடந்த அக்டோபர் 10-ம் தேதி நேபாளத்தின் லுக்லா பகுதியில் இருந்து இவர்களது பயணம் தொடங்கியது. தொடர்ந்து, ஏழு நாட்கள் நடைபெற்ற இந்தப் பயணத்தின் முடிவில், அக்டோபர் 16-ம் தேதி இருவரும் எவரெஸ்ட் அடிவார முகாமைச்…

  • நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

    பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரான மறைந்த சபேஷின் மகனும், திரைப்பட நடிகருமான கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். கடந்த ஆண்டு இசையமைப்பாளர் சபேஷ் மற்றும் கடந்த சனிக்கிழமை இசையமைப்பாளர் தேவா ஆகியோர் மறைந்த நிலையில், தற்போது ஒரே குடும்பத்தில் மீண்டும் நடிகர் கார்த்திக் சபேஷ் உயிரிழந்துள்ளார். இவர் ‘உதயம் NH4’, ‘பர்மா’, ‘பட்டத்து யானை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில்…

  • நொய்டா: நூடுல்ஸ் சாப்பிட்ட 3 குழந்தைகள், பெற்றோர் இறந்ததில் திருப்பம்; சொத்து பிரச்னையில் தற்கொலையா?

    உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வந்த மகேஷ் என்பவரும், அவரது மனைவி லலிதா மற்றும் மூன்று குழந்தைகளும் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு படுத்தனர். காலையில் அவர்கள் இறந்து போனார்கள். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். நூடுல்ஸ் சாப்பிட்டு எப்படி இறக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து வீட்டில் இருந்த உணவு மாதிரிகளை எடுத்துச்சென்றனர். போலீஸாரின் விசாரணையில் 5 பேரும் உள்ளூர் கண்காட்சிக்குச் சென்றுவிட்டு…