Author: Yalarasan
-
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் குழப்ப நிலை! வைத்தியர் அர்ச்சுனா அம்பலப்படுத்தும் உண்மைகள்
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் தோன்றியுள்ள பெரும் குழப்பநிலைக்கு மத்தியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வாக்குமூலமொன்றை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். வைத்தியசாலை நடவடிக்கையில் இருந்து இடை விலகிய வைத்தியர்கள் சிலர் யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு பயந்து செயற்படுவதாகவும் கூறியுள்ளார். வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அதனை மனிதஉரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் சாவகச்சேரி ஆதார…
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் தம்மிக்க!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.see
-
பாரியளவிலான உலை எண்ணெய் மோசடி சிக்கியது!
கெரவலபிட்டிய – யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உலை எண்ணெய் திருடப்பட்டு, அவற்றை வேறு நிறுவனங்களுக்கு விற்கும் மோசடியொன்றை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் புலனாய்வுப் பிரிவு நேற்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றிவளைப்பின் போது, திருடப்பட்ட 33,000 லீற்றர் உலை எண்ணெயுடன் பவுசர் வாகனம் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது பெரிய அனல் மின் நிலையமான கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம்…
-
கொட்டும் மழைக்கு மத்தியிலும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
கொட்டும் மழைக்கு மத்தியிலும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மூன்றாம் கட்டமாக இன்று (04.07.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது . முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியானது 2023 ஆம் ஆண்டு ஆணி மாதம் தொடக்கம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது இந்நிலையில் கொக்குத் தொடுவாய் பகுதியில்…
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கார் – சிக்கிய பெண்
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உரிமையாளர் இன்றி பல வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் எல்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் குறித்த கார் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் SPKM- 8179 Nissan Bluebird கார் கட்டுநாயக்க விமான நிலைய வருகை தரமுனைய வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கார் அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த வெலேகே மாயா சுதேசிகா என்ற பெண்ணுக்கு சொந்தமானதாகும்.…
-
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிட்னர்
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் இன்றையதினம் (04-07-2024) விறுவிறுப்பாக நடைபெறுகிறது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை 8 தமிழர்கள் களம் காண்கின்றனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளில்…
-
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவோம் சஜித் கட்சியினர்!
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்களாக கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்ந்த போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு மிகக்குறைவான மட்டத்திலயே அமைந்து காணப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 42% பங்களிப்பை வழங்கி வருகிறது. மீதமுள்ள 58% பங்களிப்பை ஏனைய 8 மாகாணங்களும் வழங்கி வருகின்றன. கிழக்கு மாகாணம் 5% க்கும் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். உலகில் பல நாடுகள் யுத்தம் முடிவடைந்து…
-
பிரிட்டனில் இன்று தேர்தல்; அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி? உலக நாடுகள் ஆவல்!
இன்று பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. பிரிட்டனின் தற்போதைய பிரதமராக ரிஷி சுனக் இருந்து வருகின்றார். இவருடைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடியவுள்ளது. பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சியே போட்டிப்போடும். கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியே பிரிட்டனை ஆண்டு வருகிறது. ஒரு காலத்தில் தன் செல்வாக்கினால், உலகையே கைக்குள் போட நினைத்த பிரிட்டன்,…
-
யாழ். தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனுக்கு அஞ்சலி!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இன்று (04) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த முடியும் கட்சியினர் அறிவித்துள்ளனர். சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
காஸாவில் அச்சமடையும் பொது மக்கள் ; குழந்தைகளிடையே பரவும் தோல் நோய்
காஸாவில் குழந்தைகளிடையே பரவும் ஆபத்தான தோல் நோய்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இஸ்ரேலின் குண்டு மழையிலும் விமானத் தாக்குதலிலும் அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்தவர்கள், கண்ணுக்குப் புலப்படாத உயிர்க்கொல்லி நோய்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். போதுமான உணவு இல்லை. தூய்மையான தண்ணீர் இல்லை. தங்குமிடம் இல்லை. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் சோர்வடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களிலும் கைவிடப்பட்ட கட்டடங்களிலும் பள்ளிக் கூடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். ஏராளமானோர் திறந்தவெளியில் படுத்துறங்குகின்றனர். கழிவறை, தண்ணீர், குளியல் அறை இல்லாமல்…