Author: Yalarasan
-
வடக்கில் ஆளுணரால் இரண்டு திணைக்களங்களுக்கான புதிய அதிகாரிகள் நியமிப்பு
வடக்கில் இரண்டு திணைக்களங்களுக்கான புதிய அதிகாரிகள் நியமிப்பு வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் இந்த நியமனக் கடிதங்கள் இன்று (03) வழங்கி வைக்கப்பட்டன. வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக சி.சுஜீவாவும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராக கு.காஞ்சனாவும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம…
-
எட்டு ஜனாதிபதிகளை சம்பந்தன் நம்பி ஏமாந்தார்
இலங்கையின் 09 ஆவது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அவர்கள் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். வடகிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தரப்படவேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவினை பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். மறைந்த தமிழ் தேசிய பெருந்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஐயா அவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி அஞ்சலி…
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட மறைமாவட்ட ஆயர்
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இன்றைய தினம் புதன்கிழமை(03/07/2024 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா அவர்களை சந்தித்து வைத்தியசாலையின் தேவைகள் குறித்து கலந்துரையாடினார். மேலும் வைத்தியாசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியதுடன் மன்னார் வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது
-
இந்தியாவில் மத நிகழ்வு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 121 பேர்! ரஷ்ய அதிபர் இரங்கல்
உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர். ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…
-
கொழும்பில் உயிரிழந்த மாணவன், மாணவி தொடர்பில் -தகவல்கள் வெளியிட்ட போலீஸ்
logo Desktop Home Business Notice Events More கொழும்பில் உயிரிழந்த மாணவன், மாணவி – பொலிஸார் வெளியிட்ட தகவல்கள் கொழும்பில் நேற்று உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 15 வயதான குறித்த இருவரும் காதல் தொடர்பில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொம்பனிவீதி அல்டைர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து நேற்றிரவு (02/07/2024) விழுந்து 15 வயதுடையவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக பொலிஸார்…
-
சம்பந்தன் அவர்களின் உடலம் பாராளுமன்றில் வைக்கப்பட்டு யாழ் எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் உடல் : ஏற்பாடுகள் தீவிரம்
இன்று மூன்று மணியளவில் பாராளுமன்றில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இரா.சம்பந்தனின் உடல் நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும் உடல் அங்கு தந்தை செல்வா அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக அங்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக சம்பந்தனின் உடல் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க சம்பந்தனின் குடும்பத்தார் அவரது உடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு…
-
எலான் மஸ்க்கின் தவறை சீன சிறுமிசுட்டிக்காட்டியுள்ளார்
சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான் விரும்பியதை படமாக வரைந்துள்ளார். அப்போது திடீர் திடீரென வரைந்த படங்கள் காணாமல் போகிறது. இதனால் அந்த சிறுமி கவலை அடைந்தார். அத்துடன் இதை டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார். தன்னுடைய செயலை ஒரு வீடியோவை எடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு எலாஸ் மஸ்க் டேச் செய்துள்ளார். அதில் ஹலோ மிஸ்டர் மஸ்க், நான் சீனாவின் மோலியில்…
-
அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் வருவதற்கான வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்
தற்போது அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் , அமெரிக்க அதிபராக மாற்றுவதற்கன வாய்ப்புக்கள் உள்ளதாக கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களம் காண்கின்றனர். எனினும் , பைடனின் உலநிலை மற்றும் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில் , பைடன் அதிபர்…
-
தேர்தலில் போட்டியிடுவது குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல் – செய்தி வெளியானது
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு பதவியேற்றதை தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தான் இந்த விடயத்தை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் தான் வேட்பாளராக களமிறங்காவிட்டாலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான…
-
தேசிய அரசாங்கத்துக்கு உடன்பாடு இல்லை என:தீர்மானம் சஜித் கட்சி
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவினால் இன்று (02) முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு கட்சியின் நாடாளுமன்றக் குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் நடத்தப்படவேண்டும் என்பது அரசியலமைப்பின் நியதியாகும். இருந்தபோதும், யார் போட்டியிட்டாலும் 51 வீத வாக்குகளை பெறமுடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அரசியலமைப்பில்…