Author: Yalarasan
-
இந்திய அணிக்கு மிகப்பெரிய பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ
ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் உலக கிண்ண தொடரில் இந்தியாவுக்கு இலங்கை மதிப்பில் 45.6 மில்லியன் ரூபாவை பரிசாக வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது. பார்படொஸ், ப்றிஜ்டவுனில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மிகவும் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்தியா 7 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டி 17 வருடங்களின் பின்னர் மீண்டும் உலக செம்பியனானது. இதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றைத் தொடர்ந்து இரண்டு தடவைகள் ரி20…
-
நாடு முழுவதும் ஆயுதப்படைகளை களமிறக்க உத்தரவிட்டார் ஜனாதிபதி
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (02.07.2024) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என சபாநாயகர் கூறியுள்ளார். மேலும், பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி,…
-
பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது ஹிஸ்புல்லா அமைப்பு
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிலிருந்து அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் நீக்கியுள்ளது. ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதால் அவா்களுடன் தகவல் தொடா்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாத நிலை உள்ளதாக, அரபு நாடுகளின் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஹோஸம் ஸாகி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினரை நீக்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்னதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹிஸ்புல்லா படையை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சோ்த்திருந்ததாகவும், இது…
-
இஸ்ரேல் பிடியில் இருந்து 7 மாதங்களின் பின் விடுதலைசெய்யப்பட்ட அல்-ஷிஃபா மருத்துவமனை தலைவர்!
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் ஏழு மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகளின் தற்போதைய நிலை முன்னெப்போதையும் விட மோசமாக இருப்பதாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரது கட்டுப்பாட்டில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை ஹமாஸ் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக…
-
ஹிருணிகா சார்பில் பிணை மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை சவால் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார். இந்த பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்…
-
கனடாவில் வானில் திடீரென தோன்றிய ஒளி! வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா?
கனடாவில் மானிடோபா மாகாணத்தில் காரில் பயணித்துக்கொண்டிருந்த தம்பதியினர், வானில் திடீரென ஒரு ஒளியை கண்டுள்ளனர். இந்த நிலையில் இரண்டு கோளங்களாக நெருப்பு பிழம்பு போல அது பிரகாசமாக ஒளிர்ந்துள்ளது. இன்னும் அருகில் சென்று பார்த்தபோது மேலும் இரண்டு கோள உருண்டைகள் ஒளிர ஆரம்பித்துள்ளது. மொத்தமாக 4 சூரியன்கள் ஒளிர்வதைப் போல் காட்சியளித்துள்ளன. மேலும் ஒரு வேளை அந்த தம்பதி பார்த்தது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா இருக்குமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. குறித்த இந்த நிகழ்வை வீடியோ…
-
என்னிடம் ஒப்படைக்கப்பட்டது டைட்டானிக் கப்பல்!
இன்று தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டிற்காக மௌனமாக பாரிய பணிகளை செய்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த புதிய அரசியல் பயணத்தை பாதுகாத்து அதனை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கி செல்லும் வழிகள்…
-
புதிய பேருந்து கட்டண பட்டியல் இதோ வெளிவந்துள்ளது
இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கையின்படி, 12 நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் திகதி பேருந்துக் கட்டணத் திருத்தம் செய்யப்படுகிறது. இவ்வருட கட்டண திருத்தத்தில் பேருந்து கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதுடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணமான 30 ரூபாய் கட்டணம் 28 ரூபாய் வரை இரண்டு ரூபாவால் குறைக்கப்படவுள்ளளது. இதன்படி அதிவேக வீதிகள்…
-
கனடாவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
கனடாவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். எட்மாண்டனின் ப்ரேசர் பகுதியின் என்தனி ஹென்டே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்தவர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது. விபத்தினை மேற்கொண்ட நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. 28 வயதான நபரே இவ்வாறு தப்பிச் சென்றதாக…
-
சம்பந்தனின் வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினர் தெரிவாம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று (30.06.2024) இரவு 9:10 மணியளவில் கொழும்பில் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை சண்முகம் குகதாசன் நிரப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத்…