Author: Yalarasan

  • ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

    கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஸ்காப்ரோவின் வோர்டன் அவன்யூவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபர் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

  • யாழ். சாவகச்சேரி மக்கள் போராட்டத்தை குழப்ப சதி

    சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக, தென்மராட்சி மக்களால் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தை குழப்பம் வகையில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை யாழ்ப்பாண பிராந்திக்க சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தூண்டி விட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என தென்மராட்சி மக்களினால் நாளை திங்கட்கிழமை போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தை குழப்பும் வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள…

  • பூமியின் சுழற்சியில் மாற்றமாம் விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்

    பூமியின் மையமானது எதிர்புறமாக சுற்றத்தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் திகதி வெளியான ஆய்வு இதழின் கட்டுரை ஒன்றிலேயே இது உறுதி செய்யப்பட்டுள்ளது Crust, mantle, வெளிப்புற மையம் மற்றும் உள்புற மையம் ஆகிய 4 அடுக்குகளாக பூமி அமைத்துள்ளது. உலகம் அதன் சுழற்றிச் பாதையில் சுற்றும் வேலையில் பூமியின் மையத்தில் உள்ள திடமான மெட்டல் மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆன INNER CORE என அழைக்கப்படும் பந்து போன்ற அமைப்பு தனிச்சையாக சுற்றி…

  • சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்த பொலிஸார்: பதற்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்

    சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை பலாத்காரமாக கைது செய்வதற்கு பொலிஸார் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் சென்றிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், வைத்தியசாலையின் பிரதான மின் கட்டமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வைத்தியசாலையில் இருந்த ஊடகவியலாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன் எந்நேரமும் பதற்றநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

  • நாளையும் நாளை மறுதினமும் அரச சேவை முடங்கும் அபாயம்!

    200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் நாளை 08 தாக்கியும் மற்றும் நாளை மறுதினமும் 09 திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரிகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவை அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அஞ்சல் ஊழியர்கள் உட்பட பல அரச சேவை…

  • உக்ரைன் அதிரடி… ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை பிரகடனம்!

    உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவில் உள்ள பல பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் உள்ள வோரோனேஜ் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன, மேலும் தாக்குதல்களில் ஒன்று இராணுவ உபகரணக் கிடங்கில் தீயை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரஷ்யாவில் அபாயப் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிகமாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத்…

  • கனடியர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சியான தகவல்

    கனடியர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட அறிக்கையானது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. Desjardins என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கனடியர்கள் அதிக அளவில் கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு கடன் பெற்றுக் கொண்டவர்களில் அதிகமானவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது கனடியர்கள் அதிக அளவில் கடன் பெற்றமை யினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கனடாவில் வங்கி வட்டி வீதம் சிறிது அளவு குறைக்கப்பட்டு இருக்கும் நிலையில் கடன் பிரச்சனைக்கு தீர்வாக அமையவில்லை என…

  • சாவகச்சேரி வைத்தியருக்கு கடும் தொனியில் பதில் வழங்கிய சட்டவைத்திய அதிகாரி

    சாவகச்சேரி வைத்தியசாலையின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் பிரணவனுக்கும், வைத்தியர் அர்ச்சுனாவிற்கும் இடையிலான தொலைபேசி உரையாடலானது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியாசகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவின் கேள்விகளுக்கு கடும் தொனியில் பதில் வழங்கும் விதமாக வைத்தியர் பிரணவனின் பதில்கள் அமையப்பெற்றுள்ளன. வைத்தியசாலை நடவடிக்கை தொடர்பில் அதிகாரபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லையா? என வைத்தியர் அர்ச்சுனா உரையாடலின் போது கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் வழங்கும் வைத்தியர்…

  • இலங்கையில் எதிர்வரும் ஜனவரி முதல் புதிய வரி

    முட்டை விலையில் 15 சதவீத வற் வரி விதிக்கப்பட உள்ளதென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.டி.ஆர். அழககோன் தெரிவித்துள்ளார். இதனால் நுகர்வோர் அதிகாரசபை நிர்ணயித்த விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 02 செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் அதிகாரசபை மீண்டும் முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. அதற்கமைய, வெள்ளை முட்டை 43-47 ரூபாய்க்கும், பழுப்பு நிற முட்டை 45-49 ரூபாய்க்கும் விற்கப்பட வேண்டும்.…

  • சுவிற்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கைகளை கட்டுப்படுத்த புதிய திட்டமிடல்

    சுவிற்சர்லாந்தில் அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக, சுவிஸ் பெடரல் அரசு, மாகாணங்கள், சுவிஸ் நகரங்கள் மற்றும் நகராட்சிகள் இணைந்து புதிய புகலிட யுக்தி ஒன்றை உருவாக்கி வருதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் (SEM), புகலிடப் பகுதியில் தகவல் தொடர்பு, அகதிகளை அவர்களுடைய சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புதல் மற்றும் சுவிஸ் புகலிட அமைப்பை வலிமையாக்குதல் ஆகியவை இந்த புதிய புகலிட யுக்தியில் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.…