Author: Yalarasan

  • கனடாவில் ஒரே நாளில் பாரியளவு உணவு பொருள் சேகரித்த உணவு வங்கி

    கனடாவில் ஒரே நாளில் பெருந்தொகை உணவுப் பொருட்கள் நன்கொடையாக சேகரிக்கப்பட்டுள்ளது. சர்ரே பகுதியில் அமைந்துள்ள குரு நானாக் உணவு வங்கி இவ்வாறு பாரியளவு உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது. நான்காம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு இவ்வாறு உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டுள்ளன. ஒரே நாளில் குறித்த உணவு வங்கி 384.5 தொன் எடையுடைய உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது. வட அமெரிக்காவில் இவ்வாறு ஒரே நாளில் அதிகளவில் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது. சுமார் 11 மணித்தியாலங்களில்…

  • சாவகச்சேரி வைத்தியாலை சர்ச்சை தொடர்பில் அமைச்சரவை கலந்துரையாடல்! அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

    சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (09.07.2024) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு…

  • கனடாவில் காணாமல்போன மூவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    கனடாவில் காணாமல் போன மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் ஸ்குவாமிஷ் பகுதியில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மலையேறிகள் மூவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Atwell Peak மலையுச்சியில் ஏறும் நோக்கில் கடந்த மே மாதம் குறித்த பகுதிக்கு இந்த மூன்று பேரும் சென்றுள்ளனர். எனினும் சில தினங்களின் பின்னர் குறித்த நபர்குள் பற்றிய அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. பனிப்பாறைகளைக் கொண்ட குறித்த மலைத் தொடரின் உச்சியை அடையும் முயற்சியின்…

  • அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு – 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

    அதுருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்குமூலங்களை அதுருகிரிய பொலிஸார் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உட்பட 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுருகிரிய பிரதேசத்தில் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் “கிளப்…

  • ஜெர்மனியில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு அதிக தாமதம்

    ஜேர்மனியில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு வழக்கத்தைவிட அதிக தாமதம் ஏற்படுவதால், சுற்றுலா செல்லும் திட்டத்திலிருப்போர் விரக்தியடைந்துள்ளார்கள். வழக்கமாக, பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், தற்போது இரண்டு மாதங்கள் ஆவதாக ஜேர்மன் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இப்படி பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு தாமதம் ஏற்படுவதற்குக் காரணம், தேசிய அச்சடிப்பு சேவைதான் என்று பாஸ்போர்ட் அலுவலக மூத்த அதிகாரியான Helmut Dedy என்பவர் தெரிவித்துள்ளார். அவர்களுடைய தவறுக்கு, தங்கள் அலுவலக ஊழியர்கள் மக்களுடைய கோபத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…

  • நான் இறந்தால் இப்படிச் செய்யுங்கள்! வைத்தியர் அர்ச்சுனாவின் மற்றொரு அதிர்ச்சி தகவல்

    நான் இறந்தால் இப்படிச் செய்யுங்கள்! வைத்தியர் அர்ச்சுனாவின் மற்றொரு அதிர்ச்சி தகவல் நான் இறந்தால் கூட வைத்தியசாலையில் எனது விடுதியின் நடுவில் வைத்து எரிக்குமாறு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸார் என்னிடம் யார் உங்களுக்கு பாதுகாப்பு என வினவிய போது, எனது தமிழ் சமூகமும் என்னை…

  • பிரான்ஸ் பிரதமரின் ராஜினாமாவை நிராகரித்த ஜனாதிபதி மேக்ரான்!

    பிரான்ஸ் நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மையைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து, பிரதமர் கேப்ரியல் அட்டலின் Gabriel Attal ராஜினாமாவை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் நிராகரித்ததாக அந்நாட்டு செய்தி சேனல் தெரிவித்துள்ளது. பிரான்ஸின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக “தற்போதைக்கு” பிரதம மந்திரியாக இருக்குமாறு கேப்ரியல் அட்டலை மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார் என்று ஜனாதிபதி அலுவலகமான எலிஸீயை மேற்கோள் காட்டி குறித்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய…

  • ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

    ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று காலை 5.02 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பில் விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது

  • கரையொதுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

    மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (08) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொதுமக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர். எவ்வாறாயினும், சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு…

  • பலத்த பாதுகாப்பின் மத்தியில் வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா!

    சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனா தற்போது வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் விசேட பேச்சுவார்த்தைக்காக அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், சுகயீன விடுமுறையின் காரணமாகவும் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரியில் கூடும் பொதுமக்களை அடித்து விரட்ட பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி செயற்பட்டு வருவதாக தெரிவித்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி்ன்றன. இன்றைய தினம் குறித்த வைத்திய…