Author: Yalarasan
-
சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் வைத்தியர் அர்ச்சுனா! வெளியகிய குடும்பப் பின்னணி
இராமநாதன் அர்ச்சுனா.. அண்மைய நாட்களாக ஊடகங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் பெயர். ஒரு வைத்தியரான இவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக பொறுப்பேற்ற ஒரு சில நாட்களில் வைத்தியசாலை நிர்வாகத்தில் நடந்த ஊழல்கள், குறைபாடுகள் போன்றவற்றை அம்பலப்படுத்தியதன் காரணமாக ஆதரவானதும், எதிரானதுமான பல விமர்சனங்களை சந்தித்தவர்.தமிழனின் துனிச்சலை நிரூபித்தவர் அர்ச்சுனா வைத்தியர் அர்ச்சுனாவின் வெளிப்படுத்தல்களின் பின்னர் குறித்த வைத்தியசாலை தொடர்பில் பொதுமக்களும் கூட பல குறைபாடுகளை வெளியிட்டிருந்தனர். வைத்தியசாலையில்…
-
ஒன்றாரியோவில் காணாமல் போன பெண் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் காணாமல் போன பெண் ஒருவர் ஐந்து நாட்களின் பின் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளார். ஜெனிதா டா சில்வா என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார். ஒன்றாரியோவின் வுட்ஸ்டொக் பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் ஐந்து நாட்களுக்கு முன்னதாக பணி முடிந்து வீடு திரும்ப வில்லை என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் போலீசில் முறைப்பாடு செய்திருந்தனர். சில்வா கடந்த வெள்ளிக்கிழமை ஐந்து மணிக்கு, குட் ஸ்ட்ரோக்…
-
துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி
அனுராதபுரம் – ருவன்வெலிசாய பொலிஸ் காவல் அரனில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அனுராதபுரத்தை சேர்ந்த 55 வயதான பொலிஸ் அதிகாரியே சம்பவத்தில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
-
நுவரெலியாவில் பேருந்து விபத்து – 42 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி
நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்தில் – 42 இற்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே, வீதியை விட்டு விலகி…
-
கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த விளையாட்டு வீரருக்கு இறுதி நொடியில் நற்செய்தி
கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த விளையாட்டு வீரர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓராண்டு காலம் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜமெய்க்காவைச் சேர்ந்த தமாரி லிண்டோ மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு கடத்தப்படவிருந்தனர். தாமரி யோர்க் பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமாரி மிகச் சிறந்த தடைதாண்டி ஓட்டவீரர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு வெற்றிகளை தமாரி ஈட்டியுள்ளார் என்பது தெரிவிக்க வேண்டியவிடயம் கடந்த மாதம் மொன்றியலில் நடைபெற்ற கனடிய தடகளப் போட்டியில் 110 மீற்றர் தடை…
-
கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: பாடகி சுஜீவாவின் கணவரின் உடல் அடக்கம்
கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: பாடகி சுஜீவாவின் கணவரின் உடல் அடக்கம் அதுருகிரியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த பாடகி கே. சுஜீவாவின் கணவர் நயன வசுல விஜேசூரியவின் இறுதிக் கிரியைகள் இன்று (10) தலஹேன பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அதுருகிரிய…
-
ஜனாதிபதியின் பதவிக்கால சட்டத்தில் திருத்தம்
ஜனாதிபதியின் பதவிக்கால சட்டத்தில் திருத்தம் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் தொடர்பாக அரசியலமைப்பின் இரண்டு சரத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள வருடங்களின் எண்ணிக்கையை திருத்துவதற்கான அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நேற்று (09.07.2024) முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசியலமைப்பின் 30 (11)ஆவது பிரிவின் படி, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். அதேவேளை, அரசியலமைப்பின் உறுப்புரை 62 (11)இன் படி, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து…
-
நீண்ட நேரம் டிவியை பார்த்த சிறுமிக்கு வினோதமான தண்டனை வழங்கிய தந்தை!
நீண்ட நேரம் டிவியை பார்த்த 3 வயது மகளின் கையில் கிண்ணத்தை கொடுத்து, அதனை கண்ணீரால் நிரப்புமாறு தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர். இஇரவு உணவு தயாரித்தபோது, தந்தை தனது மகள் ஜியாஜியாவை சாப்பாட்டு மேஜைக்கு அழைத்தார். ஆனால் டிவி பார்ப்பதில் மூழ்கியிருந்ததால் அவள் பதிலளிக்கவில்லை. விரக்தியடைந்த அவர் தொலைக்காட்சியை ஆஃப் செய்தார். இதனால் குறித்த சிறுமி அழத் தொடங்கினாள். இதைக்கண்ட ஜியாஜியா தந்தை ஒரு கிண்ணத்தை அவளிடம் கொடுத்து,…
-
சாவகச்சேரி வைத்தியசாலையில் நடக்கும் பகல் கொள்ளை ! சிக்கியது மற்றொரு பெரும் ஆதாரம்
யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் தன்னை வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்யச் சொன்னதாக பாதிக்கப்பட்ட நோயளியொருவர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நேற்று முன்தினம் தென்மராட்சி மக்களால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் அவர் இதனை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். இதன்போது பாதிக்கப்பட்ட நோயாளி அதிக பணம் செலவளித்து குறித்த பரிசோதனையினை மேற்கொண்டதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
-
கனடிய பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் ராஜினாமா
கனடிய பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் ஜொனதன் பெட்னிலன்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜொனதன், கட்சியின் மற்றுமொரு இணைத் தலைவரான எலிசபெத் மேயுடன் இணைந்து இந்தப் பதவியை வகித்து வந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜொனதன் அறிவித்துள்ளார். எலிசெபத் மே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மோரிஸ் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டதனை கௌரவமாக கருதுவதாகத் தெரிவித்துள்ளார். கட்சியை மறுசீரமைப்பதற்கு பங்களிப்பு வழங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜொனதனின் தீர்மானம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும்…