Author: Yalarasan

  • ஜனாதிபதி ரணிலுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவிற்கும் இடையே முக்கிய சந்திப்பு

    சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த சந்திப்பானது நாளைய தினம்(14.07.2024) இடம்பெறவுள்ளது. வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா வடக்கு சுகாதாரத் துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்த நிலையில், அது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அத்துடன், இன்றையதினம்(13) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை வைத்தியர் அர்ச்சுனா சந்தித்து பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர் மேலும்,…

  • வைர மோதிரம் கொள்வனவு செய்த கனடிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

    கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மெக்சிகோவில் கொள்வனவு செய்த வைர மோதிரம் போலியானது என தெரியவந்துள்ளது. இந்த மோதிரத்தை குறித்த பெண்ணும் அவரது காதலரும் 4176 டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளனர். எனினும் நாடு திரும்பியதன் பின்னர் இந்த வைர மோதிரத்தின் பெறுமதி வெறும் 50 டாலர்கள் என தெரிய வந்துள்ளது. தாம் ஏமாற்றப்பட்டது பெரும் வருத்தமளிப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். போலியான முறையில் மெக்சிகோவில் வைர மோதிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த…

  • யாழில் கோவில் நகைகள் மாயமாம் போராட்டத்தில் குதித்த மக்கள்

    யாழில் மாயமான கோவில் நகைகள்: போராட்டத்தில் குதித்த மக்கள் யாழ். ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புளியங்கூடல் சந்தியில் இருந்து ஆரம்பமான குறித்த மக்கள் பேரணி, பிரதான வழியாக இன்று (12.07.2024) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் முத்து விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது. ஆலயத்தின் முகவாயிலில்,…

  • புதிதாக 75,000 வேலை வாய்ப்புகள்!

    ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத் துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும் என்றும், அதற்கு அவசியமான அடித்தளத்தை அரசாங்கம் இட்டுள்ளதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதி வலயமாக 1000 ஏக்கர் பரப்பளவில் பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் இரண்டாம், மூன்றாம் கட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் இன்று (12) நடைபெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டில் புதிய ஏற்றுமதிப்…

  • கொழும்பில் நடந்த படுகொலையை நேரலையில் பார்வையிட்ட கும்பல்: வெளிநாட்டிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை

    கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியலில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களை அடுத்து பாதாள உலகக் குழுவினரின் அட்டகாசம் தீவிரம் அடைந்துள்ளது. கிளப் வசந்த படுகொலை செய்யப்படுவதை, கொலைத் திட்டத்தை செயல்படுத்தியதாக கூறப்படும் சஞ்சீவ புஸ்பகுமார அல்லது லொக்கு பெட்டி நேரலையில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை அவர் தனது கைப்பேசி மூலம் நேரலையில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கிளப் வசந்த குறித்த நிலையத்தை திறக்க வந்ததில் இருந்து சுட்டுக் கொல்லப்படும் வரை நேரலையாக காட்சிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

  • உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்க ஜனாதிபதி உறுதி

    உக்ரைனுக்கு மேலும், ஆயுதங்களை வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் 75 ஆவது ஆண்டு விழாவையொட்டி, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு நேற்று ஆரம்பமானது. இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் ஜனாதிபதி வொளாடிமிர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றிருந்தார். இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றுகையில், எதிர்வரும் மாதங்களில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு அதிகளவான…

  • கனடாவில் நபர் ஒருவரின் மோசமான செயல்

    கனடாவின் ஹமில்டன் பகுதியில் நபர் ஒருவர் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பிலான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். சுமார் 36 வாகனங்களை குறித்த நபர் வாள் ஒன்றின் மூலம் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியதுடன் மக்களை தம்முடன் சண்டைக்கு வருமாறு இந்த நபர் அழைத்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • அர்ச்சுனா தொடர்பில் கொழும்பு சென்ற பிழையான தகவல்!

    அர்ச்சுனா தொடர்பில் கொழும்பு சென்ற பிழையான தகவல்! யாழ்ப்பாணத்தில் நடைபெறும் விடயங்கள் கொழும்பிலுள்ள மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு பிழையாக திரிபுப் படுத்தப்பட்டு சொல்லப்படுவதாக வைத்தியர் அர்ச்சுனா(Dr.Archuna) தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் வைத்தியர்களான வைத்தியர் சமன் பத்திரணவாக இருக்கட்டும், வைத்தியர் கேதீஸ்வரனாக இருக்கட்டும் வடக்கில் தற்போது நடைபெறும் விடயங்களை பிழையாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். எனது பக்கம் உள்ள பிரச்சினை கொழும்பிலுள்ள அதிகாரிகளுக்கு தெரியாது. முக்கியமாக யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக இவர்களுக்கு தெளிவான விளக்கம் இல்லை.…

  • பணிக்கு சமூகமளிக்காத ரயில்வே ஊழியர்களுக்கு சிவப்பு கடிதம்

    பணிப்பகிஷ்கரிப்பின் போது பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் “சேவையில் இருந்து விலகியதாக கருதம்” கடிதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை கடைப்பிடிக்காது பணிப்புறக்கணிப்பில் ஈடும் ரயில் நிலைய அதிபர்களுக்கு இந்த கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இன்று (11) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்களுக்கு ரயில்வே பொது முகாமையாளரால் அந்த கடிதங்கள்…

  • திருமுறிகண்டியில் கோர விபத்து – ஒருவர் பலி

    முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் திருமுறிகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடு ஒன்றில் இருந்து வருகை தந்தவர்களை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து பயணித்துக்கொண்டிருந்த தனியார் வாகனம் ஒன்று ஏ9 வீதியின் 241 ஆவது கிலோ மீற்றருக்கும் 242 ஆவது கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் முன்னே சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றுடன்…