Author: Yalarasan

  • வைத்தியர் அர்ச்சுனா!! இனி யாழ்ப்பாணம் வரமாட்டேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

    இனி யாழ்ப்பாணம் திரும்பி வரமாட்டேன்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டுள்ளார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா. இனிமேல் யாழ்ப்பாணம் வரக்கூடாது என்று நிறைத்து யாழ்பாணத்தை விட்டு வெளியேறிய இரண்டாவது சந்தர்ப்பம் இது என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இதேபோன்ற நிர்வாகச் சீர்கேடு காரணமாக தான் வெளியேறியிருந்ததாகவும் அவர் சுட்டிக் காண்பித்துள்ளார். குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களை ‘பொறுக்கிகள்’ என்று சாடியிருந்த வைத்தியர் அர்ச்சுனா, அடுத்த தேர்தலில் உண்மையுள்ள படித்த…

  • யாழ் போதனா வைத்தியசாலையில் ரமேஷ் பத்திரணவின் கலந்துரையாடலில் ஒருவர் அதிரடியாக கைது

    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட நபர் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று(17.07.2024) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு…

  • ஈழமுரசின் இன்றைய ராசிபலன்

    மேஷ ராசி அன்பர்களே! இன்று மனதில் அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். மாலையில் உறவினர் ஒருவர் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். விநாயகப்பெருமானை வழிபட காரியங்கள் அனுகூலமாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் செலவுகள் உண்டாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு…

  • இலங்கையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

    அம்பலாங்கொட, கந்த மாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அணியின் தலைவராக இருந்த தம்மிக்க நிரோஷன என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவர் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் சுரங்க மானவடுவின் உதவியாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்மிக்க நிரோஷன வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது…

  • அனுராதபுரத்தில் நிலநடுக்கம்!

    அனுராதபுரம் மற்றும் கந்தளாய்க்கு இடைப்பட்ட பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

  • முகநூல் நேரலைக்கு தடை; ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள் அதிரடியான உத்தரவு

    முகநூல் நேரலைக்கு தடை; ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடியான உத்தரவு வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, சமூக ஊடகங்களில் ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களிற்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம்…

  • ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை பெற்ற தர்ஷன் செல்வராஜா!

    ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் என்ற பெருமையை பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழரான வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா பெற்றுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பரிஸில் நடைபெறுகிறது. தர்ஷன் செல்வராஜாவிடம் ஒலிம்பிக் தீபம் நேற்று முன் தினம் (15) வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் அதை ஏந்தி 2.5 2.5 கிலோமீற்றர் வலம் வந்துள்ளார். ஒலிம்பிக் தொடக்க விழா தொடங்குவதற்கு முன்னதாக ஒலிம்பிக் ஜோதியானது, மார்சேயில் தொடங்கி பிரான்ஸின் பல்வேறு நகரங்கள் வழியாக ஒலிம்பிக்…

  • கிளப் வசந்தவின் மனைவியின் நிலைமை கவலைக்கிடம் – மலர் வலையம் அனுப்பிய மர்ம நபர்கள் – பொலிஸார் குவிப்பு

    அத்துருகிரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்த சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்தாவின் மனைவி நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென களுபோவில வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கிளப் வசந்தவின் மனைவிக்கு அடையாளம் தெரியாத நபர் மலர் வலையம் ஒன்றை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலையை சுற்றி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டின் போது எட்டு தோட்டாக்கள் அவரது உடலில் பாய்ந்துள்ளதாகவும், அவை அறுவை சிகிச்சை மூலம்…

  • டொனால்ட் ட்ரம்ப் துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் தப்பினார்

    அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்கு முன் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலையை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் தோட்டா காதடியால் சிராய்த்துக் கொண்டு சென்றதால் ட்ரம்ப் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு காதடியில் பட்டதும் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றிக் கொண்டு நின்ற இடத்திலேயே அமர்ந்துவிட்டார் . அதன்பின்னர் அவருடைய…

  • சம்பளம், வீடு, காணி எதுவும் இல்லை மனோ

    சம்பளம் 1,700 என்றார்கள் அது இன்னமும் இழுபறி. ரூ.1,000 சம்பளமே முழுமையாக கிடைப்பது இல்லை. சில இடங்களில் அரை பேர் போட்டு ரூ. 500 தரப்படுகிறது. அப்புறம், இவர்களின் ஏகப்பட்ட முறை கேடுகள், தில்லு முல்லுகள், மோசடிகள் காரணமாக இந்திய வீட்டு திட்டம் தாமதம் ஆகி விட்டது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்கிய 10,000 வீட்டு திட்ட உறுதி மொழியை நாம் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றி வைப்போம். அப்புறம், 10 பேர்ச்…