Category: இலங்கை செய்திகள்

  • யாழ். அரசாங்க அதிபருடன் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சந்திப்பு

    தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனை இன்று (08) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் தற்போதைய வேட்புமனு கையேற்றல் தொடர்பாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளார் எஸ். அச்சுதன் கலந்து கொண்டார்.

  • நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் களமிறங்கும் இ.தொ.கா

    எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் மற்றும் தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் கடந்த செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்று, 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவாகியிருந்தார். இதன்பின்னர், ஜனாதிபதி தனது அரசியல் அமைப்பின் அதிகாரத்திற்கு அமைவாக கடந்த…

  • ராஜபக்சக்களின் ஊழல்! அடுத்தக் கட்ட நடவடிக்கையை ஆரம்பித்த அநுர அரசு

    கடந்த கால அரசாங்கங்களின் போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்சக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன இது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்பட வேண்டும். விசாரணைகளின்…

  • யாழ். நோக்கி சென்ற பயணிகள் பேருந்துகள் மீது தாக்குதல்

    கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில், அதன் சாரதி காயமடைந்துள்ளார். வெவ்வேறு பகுதிகளில் வைத்து மூன்று பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து யாழ் சென்ற தனியார் அதிசொகுசு பேருந்து மீதும், பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து மீது கிளிநொச்சியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பதுளை – யாழ்ப்பாணம்…

  • நான் மதுபானசாலை அனுமதி பெறவில்லை ரெலோ தலைவர் தெரிவிப்பு

    நான் மதுபானசாலை அனுமதி பெறவில்லை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு அண்மைக்காலமாக ஜே வி பி அரசாங்கம் வந்தபின்பு ஊழல் சம்பந்தமாக நாடாளுமன்ற உறப்பினர்கள் சம்பந்தமாக பல கேள்விகள் கேட்கப்பட்டுவருகிறது என்னைப் பொறுத்தமட்டில் தேசியத்தை தொடர்ச்சியாக நேசிக்கின்றவன் என்றவகையிலே நான் ஒரு எங்களுடைய தமிழீழ விடுதலை இயக்கம் போராடத்திலே இனப்பிரச்சிணை மக்களுடை பிரச்சிணையை தீர்ப்பதற்க்காக ஆயதம் ஏந்தி போராடியவர்கள் அந்தவகையிலே இப்பொழுது பொதுவாக சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்களால் இந்த பார் போர்மீற் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது…

  • தமிழரசுக் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகும் மாவை..!

    இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதற்கு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவில்லை என மாவை சேனாதிராஜா முடிவெடுத்திருந்த, நிலையிலேயே கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலக திட்டமிட்டுள்ளதாக அவரது மகன் கலை அமுதன் குறிப்பிட்டுள்ளார். எனினும் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில்…

  • ராஜபக்சக்கள் மறைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான டொலர்கள்! அநுர தரப்பை சீண்டும் நாமல்

    உகண்டாவில் ராஜபக்சக்கள் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படும் கோடிக்கணக்கான டொலர்களை மீட்பதற்காக அரசாங்கத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்க தமது கட்சி தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். உகண்டாவில் நாங்கள் பணத்தை மறைத்து வைத்துள்ளோம் என்று யாரேனும் கூறினால், அந்த பணத்தை நாட்டுக்கு கொண்டு வந்து வெளிநாடுகளின் கடனை அடைத்து விடலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் இருந்து சீஷெல்ஸ் மற்றும் உகண்டாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் பணத்தை…

  • மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்திய மேலும் இருவர் கைது

    மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்தி சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) பிற்பகல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் களனி மற்றும் தெஹிவளை பகுதிகளில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த 03 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27 மற்றும் 41 வயதுடைய அம்பகோட்டே மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இன்று (03) கொழும்பு…

  • 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி

    அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு பின்னர் நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியானது 300 ரூபாவிற்கும் கீழ் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், இன்றைய தினம் அந்த பெறுமதி மீண்டும் 300 ரூபாவை அடைந்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணயமாற்று விகிதங்களுக்கு அமைவாக அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 291.94 ரூபாவாகவும், 301.16 ரூபாவாகவும்…

  • குறைக்க வேண்டிய எரிபொருளின் விலை! புதிய அரசாங்கத்திடம் முன்வைக்கப்படும் கேள்வி

    தேர்தல் மேடைகளில் எரிபொருளின் விலையை குறைப்போம், மின் கட்டணத்தை குறைப்போம், அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவோம் என கூறினார்கள். இப்போது புதிய அரசாங்கம் ஒன்று அமையப் பெற்றுள்ளது. அப்படியானால் தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகள் எங்கே என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் வைத்து நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒக்டேன் 92 ஒரு லீட்டர் துறைமுகத்திற்கு வந்திறங்கும் போது…