Category: இலங்கை செய்திகள்

  • கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் குடியிருப்புகளில் மறைக்கப்பட்டுள்ள இரகசியங்கள்

    கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் குடியிருப்புகளில் மறைக்கப்பட்டுள்ள இரகசியங்கள் கொழும்பு 07 இல் அமைந்துள்ள 34 அமைச்சர் குடியிருப்புகளில் 29 வீடுகளின் சாவிகள் அரச பொது நிர்வாக அமைச்சிடம் கையளிக்கப்படவில்லை என்பதுடன், அந்த குடியிருப்புகளில் உள்ள பொருட்கள் தொடர்பில் அமைச்சிடம் எவ்வித தகவலும் இல்லை என தெரியவந்துள்ளது. இதுவரை காலமும் இந்த குடியிருப்புகளில் இருந்த அமைச்சர்கள் உரிய சாவியை அந்த குடியிருப்புக்கு வரும் அடுத்த அமைச்சரிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் அமைச்சர்கள், தாம் பதவி…

  • யாழ். தனியார் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜா

    உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று(19.10.2024) மாலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்ப்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் எமது ஊடகம் அவரது உறவினர்களை தொடர்புகொண்டு கேட்டப்போது சிகிச்சையின் பின்னர் தற்போது அவரது உடல்நிலை சீராகிவருவதாக உறுதிப்படுத்தப்பட்டது.

  • ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் – நீதியின்றி 24 வருடங்கள்

    ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் – நீதியின்றி 24 வருடங்கள் தமிழ் ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 24 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனாலும், நீதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது. அவரது படுகொலை, இன்னும் பல படுகொலைகளுடன் சேர்ந்து, தீர்க்கப்படாமல் உள்ளமை, இலங்கையில் தொடரும் தண்டனையின்மை கலாச்சாரத்தை நிலைநிறுத்துகிறது; இது குற்றவாளிகள் பின்விளைவுகளுக்கு பயப்படாமல் செயல்பட அனுமதிக்கிறது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் புதிய அரசாங்கம், ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் கொலை செய்யப்பட்டமை உட்பட பல உயர்மட்ட வழக்குகளை மீள…

  • இலங்கையில் ஆபத்தான வெளிநாட்டவர்கள் – இன்டர்போலை நாடும் அரசு

    இலங்கையில் கைது செய்யப்பட்ட 450 வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர்களின் தகவல்களை சர்வதேச பொலிஸாருக்கு (Interpol) இலங்கை பொலிஸார் வழங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் சர்வதேச பொலிஸாரின் சைபர் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிப்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும். அண்மையில் கைது செய்யப்பட்ட 218 வெளிநாட்டு இணையக் குற்றவாளிகளைத் தவிர, சுமார் 300 பேர் நாட்டின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களால் இலங்கை மக்களின் வங்கி கணக்குகளில்…

  • வியாழேந்திரன் வீட்டுக்குள் நடந்த படுகொலை! வெளிவரும் பல அதிரச்சித் தகவல்கள்

    மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்ட இளைஞன் தொடர்பான உண்மையான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொலை செய்யப்பட்ட இளைஞனின் உறவினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த இளைஞன், படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலான விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மன்றேசா வீதியில் 2021-06-21ஆம் திகதியன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊறணியை சேர்ந்த ம.பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்திருந்தார். இது தொடர்பில் குறித்த இராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைதுசெய்யப்பட்டு…

  • பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்! அதிரடி காட்டிய பொலிஸார்

    பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் மடிக்கணினிகளை திருடிய நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை பிரதான பஸ் நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை குற்றப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து அளுத்கம, களுத்துறை மற்றும் பாணந்துறையிலிருந்து இரத்தினபுரிக்கு செல்லும் பேருந்துகளிலும் கரையோர ரயிலில் பயணிக்கும் ரயில்களிலும் பயணித்த பயணிகளின் மடிக்கணினிகளை சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. திருட்டு சம்பவங்கள் இவ்வாறு பல மடிக்கணினிகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்…

  • ஜனாதிபதி அநுரவை சந்தித்த seeஅமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி

    அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், (Admiral Steve Koehler) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது, இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் போன்ற சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுவதில்…

  • ஐரோப்பா செல்ல முற்பட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

    கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலியான ஆவணங்கள் மூலம் சேர்பியா செல்ல முற்பட்ட 7 பேரும் அவர்களுக்கு உதவிய ஒருவருமாக மொத்தம் எட்டு பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 08.20 மணியளவில், இந்தக் குழுவின் முதலாவது…

  • பலமிழக்கும் தமிழரசுக் கட்சி! தேர்தல் களத்தில் இருந்து வெளியேறிய மற்றுமொரு முக்கியஸ்தர்

    நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உறுதி செய்யப்பட்டுள்ள வேட்பாளர்.. நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்ட களத்தில் வேட்பாளராக மன்னார் தொகுதியில் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் மாத்திரமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளார். மேலும் இரு வேட்பாளர்கள் தெரிவில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆரம்பத்தில் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்தார். விலகும்…

  • முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி

    முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து தற்போது அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது