Category: இலங்கை செய்திகள்

  • பொதுத்தேர்தலுக்கான 21ஆயிரம் அஞ்சல் மூல வாக்குகள் நிராகரிப்பு

    2024 பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் மொத்தம் 21,160 அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 759,210 அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அஞ்சல் வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட 759,210 விண்ணப்பங்களில் 738,050 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அண்மைய ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் 25,731 அஞ்சல் மூல வாக்குகள் இந்த தேர்தலில் அதிகரித்துள்ளதாக…

  • இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

    இஸ்ரேலில் வேலை தேடுபவர்களிடம் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பணமோசடி செய்யும் நடவடிக்கை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேற்று (21) பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் வேலை எதிர்ப்பார்த்துள்ளவர்களுக்கு பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது பணியகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பணம் செலுத்தியுள்ள இஸ்ரேலில் தொழில் எதிர்ப்பார்த்துள்ளவர்கள் எவரும் மீண்டும் பணம் செலுத்தத் தேவையில்லை என சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப்…

  • வெளிநாட்டு கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்

    பல மாதங்களாக நீடித்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நேற்று (21) முதல் புதிய கடவுச்சீட்டுகளை வழங்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய கடவுச்சீட்டின் நிறம் மாற்றப்பட்டு நீல நிறத்தில் உள்ளது. மேலும் பழைய கடவுச்சீட்டில் 64 பக்கங்களும், புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்களும் உள்ளன. முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்தநிலையில் புதிய கடவுச்சீட்டில் P எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய கடவுச்சீட்டின் அனைத்து பக்கங்களிலும் அழகான புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…

  • சிலாபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வௌியான தகவல்

    சிலாபம், சிங்கபுர பகுதியில் இரண்டு மாடி வீட்டில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மரணங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (21) நடைபெற்றது. இறந்த பெண்ணையும், அவரது மகளையும் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, பின்னர் உடல்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டமை தெரியவந்தது. சிலாபம் பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி ஐ.எம். இளங்கரத்ன பண்டா இன்று (21) பிற்பகல் சிலாபம் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த பெண் மற்றும் மகளின் சடலங்களின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.…

  • உகண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை கொண்டு வர மறந்த அநுர! நினைவூட்டும் கம்மன்பில

    ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தான் தற்போது கோமா நிலையில் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி கோமா நிலையில் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டில் இருந்து ஊழல்வாதிகள் கொள்ளையடித்து உகண்டாவில் மறைத்து வைத்திருக்கும் பணத்தை கொண்டு வருவேன், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வேன், சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களை திருத்துவேன் என தேர்தல் மேடையில் ஜனாதிபதி அநுரகுமார கூறியிருந்தார். ஆனால்…

  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! மறைக்கப்பட்ட அறிக்கையை அம்பலப்படுத்திய கம்மன்பில

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும், பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பிலும், அப்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு 2019 ஜனவரி மாதம் முதல் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி வரை 13 புலனாய்வு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகைளை வெளியிடும் இன்றைய விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,…

  • விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிக்க விசேட சலுகை – போக்குவரத்து வசதி பெறுவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

    எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் விசேட தேவையுடையவர்களுக்கு வாக்குச்சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதிகளைப் பெற உள்ளூராட்சித் தேர்தல் அதிகாரியின் அனுமதியைப் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான விண்ணப்பம் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகம் அல்லது http://www.election.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். என் குறிப்பிடப்பட்டுள்ளது

  • மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

    மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3 பிள்ளைகளின் தயாரான வி.விஜயராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த பெண்ணிற்கு எற்பட்டுள்ள சக்கரை வியாதி காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சம்பவதினமான இன்று பிற்பகல் வீட்டின் முற்றத்தில் தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்ததையடுத்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார்…

  • நாட்டில் இடம்பெற்ற அகிம்சைப் போராட்டம், 30 வருட ஆயுதப் போராட்டமும் எதற்காக ஏற்பட்டதோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது- அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்-மன்னார் ஆயர்.

    நாட்டில் இடம்பெற்ற அகிம்சைப் போராட்டம், 30 வருட ஆயுதப் போராட்டமும் எதற்காக ஏற்பட்டதோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது- அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்-மன்னார் ஆயர். (20-10-2024) நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் அவற்றை மட்டும் கருத்திற் கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க…

  • பிரபல உணவகத்தில் குடிநீரை அருந்திய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

    கொழும்பு, கொத்தடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உணவு அருந்திய பின்னர் குடிநீர் போத்தலில் உள்ள நீரை குடித்த யுவதி நோய்வாய்ப்பட்டுள்ளார். குறித்த யுவதி 250 மில்லி குடிநீர் போத்தலில் இருந்த குடிநீரை அருந்தியதாகவும், அதன் போது தொண்டையில் கடுமையான அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவர் குடித்த தண்ணீரை வாந்தி எடுத்ததாகவும், தொண்டையில் எரிவது போல் உணர்ந்ததாகவும் அவர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், surgical spirit இருந்ததாக கூறப்படும் குடிநீர் போத்தல் பொலிஸாரால்…