Category: இலங்கை செய்திகள்

  • IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்!

    சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதன்படி, நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4-ஆம் திகதி வரை நாட்டில் தங்க உள்ளனர். அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர். இந்த விஜயத்தின் போது, இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்…

  • ரூபவாஹினி மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய திட்டங்கள் வி​ரைவில்

    ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி யாமோடா டெட்சூயா (YAMADA TETSUYA) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தனர். ஜயிக்கா நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் தொலைக்காட்சி ஔிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஜயிக்கா (JICA) நிறுவனத்தின்…

  • அநுரவின் அடுத்தக் கட்ட நகர்வுகள்! தமிழர்களிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

    ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அநுர குமார திஸாநாயக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களை இலகுவாகச் சென்றடைவதன் காரணமாக தேசிய மக்கள் சக்தி மீதும், ஜனாதிபதி மீதுமான நம்பிக்கை பொதுமக்களிடத்தில் வலுத்து வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஐன்ஸ்டின் தெரிவித்தார். ஊடககங்களுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் அவர்கள் சார்ந்திருந்த கட்சியின் தலைவர்களது வழிகாட்டலின் கீழ் தங்களது வாக்குகளை…

  • புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய முடிவு

    அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள்கள் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இறுதி தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும் வினாத்தாளில், சம்பந்தப்பட்ட மூன்று கேள்விகளுக்கு மாத்திரம் , அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பரீட்சையை மீண்டும் நடத்துவது 10 வயதேயான பிள்ளைகளின் மன நிலையில்…

  • நீதிக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் துணிந்து குரல் கொடுத்தவர் குமார வெல்கம: ரிஷாட் பதியுதீன்

    நீதிக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் என்றும் துணிந்து குரல் கொடுத்த ஒரு அரசியல்வாதி குமார வெல்கம என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் இழப்பு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். குமார வெல்கம மேலும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை அரசியலில் துணிந்து, கருத்துக்களால் எதனையும் எதிர்கொள்ளக்கூடிய அரசியல்வாதியான குமார வெல்கமவின் இழப்பு குறித்து எனது ஆழ்ந்த அனுதாபத்தினை…

  • உடன் நடைமுறைக்கு வரும் வகையில் யுக்திய கடமைகளில் இருந்து விடுவிக்கப்படும் பொலிஸார்

    யுக்திய நடவடிக்கைகளுக்காக விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிசார் அனைவரையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். மேலும், யுக்திய விசேட நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை அவதானித்து, அவற்றை சரிசெய்து, சட்டத்தின் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய பணிகளில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளை வழிநடத்துவதன்…

  • அனைத்து பாடசாலைகளுக்குமான சுற்றறிக்கை வௌியானது

    பாடசாலைகளில் நடத்தப்படும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். உலக சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் வசூலிப்பது தொடர்பாக அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான சம்பவங்களினால் பெற்றோர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுவதுடன் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக…

  • முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் தொடர்பில் வெளியான தகவல்

    இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பிட்டளவில் சீரமைக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய சலுகைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார். சட்டத்தின்படி,ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும் அவரின் வாழ்நாளில் வாடகையின்றி பொருத்தமான குடியிருப்பைப் பயன்படுத்த உரிமை உண்டு. பொருத்தமான குடியிருப்பு வழங்கப்படாவிட்டால், மாதாந்த ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு இணையான மாதாந்த கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதியின் பிரத்தியேக…

  • கோழி இறைச்சி விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

    கோழி இறைச்சியின் விலை நூறு ரூபா தொடக்கம் நூற்றைம்பது ரூபா வரை குறையலாம் என அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்து வருவதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் விலைகளில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,000 முதல் 1,100 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார். அடுத்த பதினைந்து நாட்களில்…

  • ஜனாதிபதி அநுரவின் உடனடி உத்தரவு! மீளப்பெறப்படும் மெய்ப்பாதுகாவலர்கள்

    [9/27, 6:30 PM] tamil: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த மெய்ப்பாதுகாவலர்களை மீளப்பெறுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். [9/27, 6:30 PM] tamil: உடன் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த மெய்ப் பாதுகாவலர்களை மீளப்பெறுமாறு ஜனாதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. [9/27, 6:31 PM] tamil: முன்னாள் சபாநாயகர், பிரதி சபாநாகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மெய் பாதுகாவலர்கள் தவிர, இதர முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலர்கள் இவ்வாறு மீளப் பெறப்படவுள்ளனர். இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள்…