Category: இலங்கை செய்திகள்

  • விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு

    இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. விசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இதனை அடுத்து அந்தச் செய்முறையை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • புதிய ஜனாதிபதி அநுரவுக்கு உலக வங்கியிடம் இருந்து கிடைத்துள்ள செய்தி

    இந்நாட்டில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர், சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உப தலைவர் ரிகார்டோ புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர். தற்போது இலங்கையின் பொருளாதாரம் மீளக் கட்டமைப்பதற்கு தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் அவசியம் என்பதை அறிந்துகொண்டுள்ளதோடு,…

  • புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானமை குறித்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு

    புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானமை குறித்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு அண்மையில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியான விடயம் குறித்து முழுமையானதும் சுதந்திரமானதுமான விசாரணையொனறை நடத்துமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கல்வி அமைச்சின் முக்கிய அதிகாரிகள் மற்றும் இலங்கை பரீட்சைத் திணைக்கள உயரதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் இன்று(26) மாலை நடைபெற்றுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடலுக்குத் தலைமை வகித்து கருத்து வெளியிடும்போது மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து…

  • புதிய அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு ஜோசப் ஸ்டாலின்

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு வாக்களித்த ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதற்கு தயங்க போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அமைச்சு செயலாளர்களை நியமிக்கும் போது திறமையற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட…

  • ஜனாதிபதியால் புதிய ஆளுநர்கள் நியமனம்

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் புதிய அளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி வட மாகாண ஆளுநராக யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய மாகாண ஆளுநராக பேராதனைப் பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சரத் ​​அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநராக சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தென் மாகாண ஆளுநராக முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்…

  • குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, உயர் நீதிமன்ற வளாகத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவு

    இன்று மாலை நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் வரை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, நீதிமன்ற வளாக சிறையில் தடுத்து வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, இன்று (25.09.2024) காலையில், நீதிமன்றத்தை அவமதித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய மீது குற்றம் சுமத்துவதற்கான விதியை, இலங்கை உயர் நீதிமன்றம் வெளியிட்டது. அதேவேளை, இலங்கையில் இணையம் மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தும் வகையில், நீதிமன்றம் ஏற்கனவே…

  • ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை!

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட உரையானது நாளை இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

  • 65 கோடி மோசடியில் நடக்கப்போகும் அதிரடி கைது

    65 கோடி மோசடியில் நடக்கப்போகும் அதிரடி கைது அநுரவின் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஊழல் தொடர்பான கைது நடவடிக்கைகளை மத்திய வங்கி விடயத்தில் இருந்து ஆரம்பிக்க போகின்றாரா அல்லது மகிந்தவில் இருந்து ஆரம்பிக்க போகின்றாரா என்பது தெரியவில்லை என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார் ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஆனால், முன்னாள் ஜனாதிபதிகள் என்ற விடயத்தைக் கொண்டு ரணில், மகிந்த, கோட்டாபயவை தவிர்த்து அதற்கு அடுத்து…

  • புதிய பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமனம்

    பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். முதலாம் இணைப்பு ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதிய பாதுகாப்பு செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி இந்த பதவிக்கு எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம்

    இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அவர் தனது விசேட உரையை நிகழ்த்தியுள்ளார். இந்த நிலையில் அநுரகுமார திசாநாயக்கவின் ஆதரவாளர்கள் பலர் காலிமுகத்திடல் பகுதியில் திரண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்னும் சில நிமிடங்களில் இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட…