Category: இந்திய செய்திகள்

  • சுழற்றி அடிக்கப்போகும் பெங்கால் புயல் – எப்போது கரையை கடக்கும், இன்றைய நிலவரம் என்ன?

    சுழற்றி அடிக்கப்போகும் பெங்கால் புயல் – எப்போது கரையை கடக்கும், இன்றைய நிலவரம் என்ன? பெங்கால் புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை அதிகரித்து வருவதோடு, பெங்கால் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் எனவும் இந்திய ஆய்வு மையும் தெரிவித்துள்ளது. புயல் எப்போது கரையை கடக்கும்? சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று 21 செ.மீ வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும்…

  • இந்திய ராஜதந்திரிகள் வெளியேற்றப்பட்டதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு ஆபத்து குறைவு

    இந்திய ராஜதந்திரிகள் தொடர்பில் கனடிய போலீஸ்மா அதிபர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். கனடிய போலீஸ் மா அதிபர் மைக் டுஹிம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அண்மையில் கனடாவில் கடமையாற்றி வந்த ஆறு இந்திய ராஜதந்திரிகள் நாடு கடத்தப்பட்டிருந்தனர். இவ்வாறு இந்திய ராஜதந்திரிகள் நாடு கடத்தப்பட்டதனை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சாத்தியங்கள் குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார் அச்சுறுத்தல்கள் வெகுவாக குறைந்துள்ளது என தம்மால் உறுதிப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு…

  • சொல்ல முடியாத அளவுக்கு அட்டூழியம்.. இலங்கை புதிய அதிபர் அநுரவுக்கு மயிலாடுதுறை எம்.பி கடிதம்!

    மயிலாடுதுறை: மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேர் உள்பட அனைத்து இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மயிலாடுதுறை எம்.பி ஆர்.சுதா, இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசநாயகவுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, 4 ஃபைபர் படகுகளில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி 43 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் சிலர்…

  • திருச்சி என்ஐடியில் மத்திய பிரதேச மாணவி 5-வது நாளாக மாயம்! போலீஸில் சிக்கிய கடிதம்! நடந்தது என்ன?

    திருச்சி: திருச்சி என்ஐடியில் படித்து வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவி கடந்த 15 ஆம் தேதி முதல் காணவில்லை என புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர், திருச்சி என்ஐடியில் எம்சிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி விடுதியை விட்டு வெளியே…

  • 10 வயது சிறுமிக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை! 10 வயது சிறுமிக்கு ஒரு வருடம் பாலியல் தொல்லை!

    பத்து வயது சிறுமிக்கு ஒராண்டுக்கு மேலாக பாலியல் தொந்தரவு அளித்து வந்த சிறுமியின தாத்தாவை பொலிசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியில் அறுபத்து ஏழு வயது மீனவரின் மகன் கடந்த சில வருடங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மருமகள் தனது பெண் குழந்தையை மாமனாரிடம் ஒப்படைத்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பெண் குழந்தையை வளர்த்து வந்த தாத்தா, கடந்த ஒராண்டுக்கும் மேலாக 10 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்து இருக்கிறார்.

  • ஜம்மு காஷ்மீர் கோர விபத்தில் சிக்கி 08 பேர் பலி

    இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தக்சும் பகுதியில் மோட்டார் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 05 பிள்ளைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து பிள்ளைகளும் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மோட்டார் வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • பற்றி எரியும் வங்கதேசம்.. இடஒதுக்கீடு எதிர்ப்பால் கடும் வன்முறை.. 32 பேர் பலி.. பிரதமர் தான் காரணமா?

    இந்தியா டாக்கா: வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்துக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. இதில் 32 பேர் பலியான நிலையில், 2,500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டத்தில் வங்கதேசத்தில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில் போராட்டத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். தமிழகத்தின் அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. வங்கேதசத்தின் பிரதமராக இருப்பவர் ஷேக் ஹசீனா. இவர் அவாமி லீக் கட்சியை…

  • 2 குழந்தைகள் உட்பட 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்!

    தலைமன்னாரில் இருந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அகதிகளாக நேற்று (05) வெள்ளிக்கிழமை காலை தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.என அறியப்படுகிறது தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோக வள்ளி (வயது 34), அவரது பிள்ளைகளான அனுஜா (வயது 08), மிஷால் (வயது 05) ஆகியோர் தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்தனர். தகவல் அறிந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்து விசாரணைக்காக 3 பேரையும்…

  • ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்த மோடி!

    ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்த மோடி!

    மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு  (NDA) ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு வழங்கியமைக்கு பிரதமர் நரேந்திர மோடி (Narendira Modi) நன்றி தெரிவித்துள்ளார்.தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்திய வரலாற்றில் இது ஒரு சாதனை எனவும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை, கடந்த பத்தாண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

  • திருகோணமலையில் விபத்து: பாடசாலை மாணவி படுகாயம்!

    திருகோணமலையில் விபத்து: பாடசாலை மாணவி படுகாயம்!

    திருகோணமலை (Trincomalee) தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்றையதினம் (23.04.2024) குறித்த மாணவி வீதியை கடக்க முற்பட்ட போது வான் ஒன்று மோதியதால் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, சம்பவம் தொடர்பாக கண்டியை (Kandy) சேர்ந்த 32 வயதுடைய வான் சாரதி திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.