Author: yalarasan canada

  • இலங்கை வரும் முக்கிய நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு!

    இலங்கை வரும் முக்கிய நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு!

    வர்த்தகம், கடல் துறைமுகங்களுக்கு இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.  இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய பொருளாதார முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையிலேயே உயர்மட்ட பிரதிநிதிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்வதாக தெரிவித்தள்ள சீன தரப்பு,  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர்…

  • அழிந்தவர்கள், அழிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள்! அழித்தவர்கள், படுகொலை செய்தவர்கள் சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள்!

    அழிந்தவர்கள், அழிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள்! அழித்தவர்கள், படுகொலை செய்தவர்கள் சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள்!

    கடந்த 18ஆம் தேதியும் 19 ஆம் தேதியும் இலங்கைத் தீவில் இரண்டு மக்கள் கூட்டங்கள் இருப்பதனை மீண்டும் உணர்த்திய அடுத்தடுத்த நாட்கள். 18 ஆம் திகதி தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள். 19ஆம் திகதி சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள். பதினெட்டாம் திகதியை நோக்கி அந்த வாரம் முழுவதும் தமிழ் மக்கள் ஊர் ஊராக, சந்தி சந்தியாக கஞ்சி காய்ச்சிக் கொடுத்தார்கள். 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் கூடினார்கள்; உருகி அழுதார்கள்.…

  • நியூசிலாந்தின் துணைப் பிரதமர் இலங்கை விஜயம்

    நியூசிலாந்தின் துணைப் பிரதமர் இலங்கை விஜயம்

    நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.  நேற்று (24) இரவு நாட்டுக்கு விஜயம் செய்த அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார்.  2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.  இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நியூசிலாந்தின் ​​வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர்…

  • ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தும் மலையாளத்து வேடன்!

    ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தும் மலையாளத்து வேடன்!

    ஊர் மாறி பிறந்தாலும், பேர் மாறி வளர்ந்தாலும், உள்ளுக்குள் இருக்கும் உணர்வு, அவன் உதிரத்தில் கலந்தது தமிழின துடிப்பு, வேடன் அம்மா, அப்பா, அன்பு, அறிவு, அழகு, அரசியல், அஞ்சாமை…. மலையாளத்து ராப்பர் வேடன் அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார். ஊர் மாறி…

  • உக்ரேன் மோதல்: இருளில் தெரியும் ஒளிக்கீற்று

    உக்ரேன் மோதல்: இருளில் தெரியும் ஒளிக்கீற்று

    பதவியேற்றதும் 24 மணி நேரத்தில் உக்ரேன் போர் முடிவுக்கு வரும் என அறிவித்த ட்ரம்பினால் 24 நாட்களில் கூட போரை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ரஷ்ய-உக்ரேன் மோதலில் ஒரு திருப்பமாக போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான திடமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்றான, ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் நிறுத்தமானது தான் எதிர்பார்த்ததைப் போன்று இலகுவான ஒரு விடயமல்ல என்பதை பதவியில்…

  • உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முடிவுகள் குறித்த ஒரு ஆய்வு!

    உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முடிவுகள் குறித்த ஒரு ஆய்வு!

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முடிவுகள்,அதிகாரப் பகிர்வு மற்றும் சமரசப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒரு சூழலை உருவாக்கக்கூடும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முடிவுகள் குறித்த ஒரு ஆய்வு! I.  2025 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், நாட்டின் அரசியல் களத்தில் முக்கியமான மாற்றங்களையும் போக்குகளையும் வெளிப்படுத்தியுள்ளன. இத்தேர்தல் முடிவுகள், தமிழ்…

  • கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?

    கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?

    இலங்கை தமிழ் அரசியல்  களத்தில்  தலைமைத்துவம் தொடர்பான அக்கறைகள் அண்மைக்காலமாக உத்வேகம் பெறும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் யார் எதிர்கால தமிழ் அரசியல் தலைவராக மேன்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார் என்பது உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு விவாதத்துக்குரிய ஒரு விடயமாக இருக்கும். வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு கட்டங்களில் செல்வாக்குமிக்க தலைவர்கள் வெளிக்கிளம்பி ஆதிக்கம் செய்த தோற்றப்பாடு இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றின்  எடுத்துக்காட்டான ஒரு அம்சமாகும். பொன்னம்பலம் சகோதரர்கள் இராமநாதனும் அருணாச்சலமும், அருணாச்சலம்…

  • புதிய திருத்தந்தை பதின்நான்காம் லியோ (14ம் சிங்கராயர்).

    புதிய திருத்தந்தை பதின்நான்காம் லியோ (14ம் சிங்கராயர்).

    புதிய திருத்தந்தை பதின்நான்காம் லியோ அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் பிறந்து அகஸ்தீன் சபையில் சேர்ந்து …தென்னமெரிக்க ஆயர்களுடைய தலைமை ஆயராக பணியாற்றி, 2023 செப்டம்பர் மாதம் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக தகுதி உயர்த்தப்பட்ட கருதினால் மேதகு ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் அவர்கள், திருத்தந்தை 14 ஆம் லியோ(14ம் சிங்கராயர்)என்ற பெயர் தேர்வோடு திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார் …புதிய திருத்தந்தைக்காக நாம் ஜெபிப்போம்.  

  • டொரண்டோவுக்கு வந்த விமானத்தில் தட்டம்மை நோயாளி

    டொரண்டோவுக்கு வந்த விமானத்தில் தட்டம்மை நோயாளி

    அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உடனடி மருத்துவ ஆலோசனை தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த வாரம் டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானத்தில் ஒரு தட்டம்மை நோயாளி கண்டறியப்பட்டதைக் கருத்தில் கொண்டு, பீல் பொது சுகாதாரத்துறை (PPH) விசாரணை நடத்தி வருகிறது. இதன் மூலம், இந்த ஆண்டில் அந்த பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி சீடலிலிருந்து டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானம் AC540-ல் பயணித்தவர்கள், அல்லது அதே நாளில்…

  • தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேருக்கு தடையுத்தரவு

    தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேருக்கு தடையுத்தரவு மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய சுதந்திர தினமான நாளை (4) ஆர்ப்பாட்டங்களை, சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழுபேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இதற்கான தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. இலங்கை குடியரசின் தேசிய தினம் 04-02-2025 அன்று கொண்டாடப்பட வேண்டியது என இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பில் 08ஆவது சரத்தில் கூறப்பட்டுள்ளது.…