Category: முக்கிய செய்தி
-
ஊரடங்குச் சட்ட காலம் தொடர்பில் பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு
ஊரடங்குச் சட்ட காலம் தொடர்பில் பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம். பொலிஸ் ஊடக பிரிவு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதேவேளை வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை ஊரடங்கு வேளையில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கின்ற…
-
ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தேர்தல் முடிவுகள் மொத்தமாக வெளியானதன் பின்னர் தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் ஞாயிறு மாலை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முதற்கட்டமாக ஊரடங்குச் சட்டத்தை…
-
டியேற்றி மக்கோணால் “தமிழர் மனித உரிமைகள் மையத்தின் – TCHR” சர்வதேச இயங்குனர் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து
“தமிழ் ஜனதிபதி வேட்பாளரின்” முக்கியத்துவம், வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளி யேற்றப்பட வேண்டும் போன்ற விடயங்கள், தற்பொழுது நடைபெறும், ஐ.நா.மனித உரிமை சபையின் 57வது கூட்டத் தொடரில், திருமதி டியேற்றி மக்கோணால், இன்று 20 செப்டம்பர் 2024ல், சர்வதேச சர்வநம்பிக்கை என்ற அமைப்பு சார்பாக ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். டியேற்றி மக்கோணால் “தமிழர் மனித உரிமைகள் மையத்தின் – TCHR” சர்வதேச இயங்குனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
-
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்தில் கனடா
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து சறுக்கிய கனடா, இந்த ஆண்டு, நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. Us wold & repport என்னும் அமைப்பு ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. பட்டியலில் கனடா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஜப்பானும், மூன்றாவது இடத்தை அமெரிக்காவும் பிடித்துள்ளன. விடயம் என்னவென்றால், கனடா இதற்கு முன் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது, தற்போது நான்காவது…
-
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு!
நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் நேற்று (18) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்ததோடு, தேர்தல் நடைபெறும் நேரம் வரையான காலப்பகுதி அமைதி காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் எவ்விதமான பிரச்சார…
-
தேர்தல் முடிவுகளை நேரடி ஒளிபரப்பு தடை!
வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் போது அந்த முடிவுகளை தொலைக்காட்சிகள் அல்லது பெரிய திரைகளை பயன்படுத்தி வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்ப்பது சட்டவிரோதம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதுபோன்ற கூட்டங்களை பாதுகாப்பு தரப்பினர் கலைக்கவோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (19) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக்…
-
பதற்றமடைய வேண்டாம் : நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை!!
ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மதத்தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். நாங்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றம். அனைத்து பிரஜைகளும்…
-
கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை
கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என பொலியேவ் தெரிவித்துள்ளார். லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த என்.டி.பி கட்சி ஆதரவு வழங்குவதை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் லிபரல் அரசாங்கம்…
-
ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாகும் சர்வதேசத்தின் பார்வை
ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாகும் சர்வதேசத்தின் பார்வை இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சர்வதேசத்தின் அவதானம் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில் சர்வதேச நாடுகள் பல ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தமது ஆதவினை வெளியிட்டு வருவதுடன், இந்தியா நேரடியாக களமிறங்கியுள்ளது. தென்னிலங்கை அரசியல் இவ்வாறு சூடுபிடித்துள்ள நிலையில் மறுபக்கம் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளை…
-
கனடா வறுமை நிலைக்கு செல்கிறதா?
கனடா வறுமை நிலைக்கு செல்கிறதா? கனடாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செல்வந்த நிலை தொடர்பான இடைவெளி தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சனத்தொகை வளர்ச்சியுடன் ஒப்பீடு செய்யும் போது கனடாவின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக செல்வந்த நாடுகளில் கனடாவின் பொருளாதார வளர்ச்சி நிலைமை போதுமானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.