Category: உலக செய்திகள்

  • ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% தீர்வை வரி

    உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசரச் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இந்தச் சட்டமானது ரஷ்யாவின் வலுசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளை இலக்கு வைப்பதுடன், ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் மூத்த அதிகாரிகளையும் குறிவைக்கிறது. மேற்கத்திய நாடுகளின் தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் ‘நிழற்படைக் கப்பல்களை’ (shadow fleet) இலக்கு வைக்கும் இச்சட்டம்,…

  • ஒருவேளை உணவுக்காக தெருவில் கையேந்தி நின்ற நான்கு வயது சிறுமி… இன்று ஸ்டெதஸ்கோப்பை ஏந்தி நூற்றுக்கணக்கான மனிதர்களின் உயிரைக் காக்கும் மருத்துவர்!

    இது ஏதோ ஒரு திரைப்படத்தின் கதை அல்ல… தர்மசாலாவின் தெருக்களில் பிறந்து வளர்ந்த பிங்கி ஹர்யன் என்ற பெண்ணின் நிஜ வாழ்க்கைக் கதை! 2004-ஆம் ஆண்டு ஒரு நாள், மெக்லியோட் கஞ்சில் உள்ள ‘சரண் காட்’ குடிசைப் பகுதியின் சாலையோரத்தில் பிச்சை கேட்டுக்கொண்டிருந்த சிறுமி பிங்கியை, லோப்சாங் ஜம்யாங் என்ற திபெத்திய புத்த துறவி பார்த்தார். ஒரு கணத்தில் அந்த மனிதரின் மனதில் ஏற்பட்ட இரக்கம், அந்தச் சிறுமியின் வாழ்க்கையையே மாற்றியது. பிங்கியின் பெற்றோரிடம் தொடர்ந்து பேசி…

  • ஈரான் போர் | இதுவரை ரூ.3.2 லட்சம் கோடி செலவு.. காலியாகும் அமெரிக்காவின் கஜானா!

    ஈரானுடன் அமெரிக்கா நடத்திவரும் போர் 7ஆவது மாதத்தைக் கடந்துள்ளது. இந்த, 200 நாட்களில் 3 லட்சத்து 20ஆயிரம் கோடி ரூபாயை அமெரிக்கா செலவிட்டுள்ளது. இதில் செயல்பாட்டுச்செலவுகள், எரிபொருள் செலவுகளுடன் ஏராளமான போர் விமானங்கள், ட்ரோன்கள் இழப்பும் அடங்கும். இது, அமெரிக்காவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-ஈரான் மோதல் 200 நாட்களைக் கடந்து 7-ஆவது மாதத்தில் அடிஎடுத்து வைத்துள்ளது. அமெரிக்கா இப்போருக்காகத் தினமும் சராசரியாகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவிட்டு வரும் நிலையில், இதுவரை…

  • பாகிஸ்தான் நாட்டில் புனித மசூதி ஒன்றில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள கோஹாட் என்ற பகுதியில், இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்காக மசூதி ஒன்று அமைந்துள்ளது. இந்த மசூதியில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில், பல்வேறு இஸ்லாமியர்கள் தொழுகைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், காவல்துறை தலைமையகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள அந்த மசூதிக்கு, வெள்ளிக்கிழமையான இன்று அதிக அளவிலான இஸ்லாமியர்கள் தொழுகைக்கு வந்துள்ளனர். அப்போது, வெடிமருந்துகள் முழுமையாக நிரப்பப்பட்ட கார் ஒன்றை ஒருவர் ஓட்டிவந்து, மசூதியின் நுழைவு வாயிலில் மோதியுள்ளார். இதன்காரணமாக, காரில் இருந்த…

  • முன்னாள் அதிபருக்கு 25 ஆண்டு சிறை.. கொசோவோவை அதிரவைத்த நீதிமன்ற தீர்ப்பு!

    கொசோவோ நாட்டின் முன்னாள் அதிபர் ஹாசிம் தாசிக்கு (HashimThaci) போர்க்குற்ற வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நெதர்லாந்தின் தி ஹேக் (The Hague) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.1990களில் செர்பியாவிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக நடைபெற்றபோரின்போது அரசியல் எதிரிகள்,பொதுமக்கள் என 96 பேரை படுகொலைசெய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 1990-களின் இறுதியில் செர்பியாவிற்கு எதிராக நடந்த சுதந்திரப் போரின்போது, கொசோவோ விடுதலைப் படையின் (KLA) அரசியல் பிரிவின் தலைவராக ஹாசிம் தாசி செயல்பட்டார். KLA…

  • 35 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. ஆபத்தில் பூமியின் நன்னீர்.. உலக ஆறுகள் குறித்து WMO அதிர்ச்சி அறிக்கை!

    கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகின் ஆறுகளில் நீர்வரத்து மிகக் தீவிரமாகக் குறைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குடிநீர் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள ‘மாநில உலகளாவிய நீர் வளங்கள் 2025’ (State of Global…

  • நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மம்!

    நிலவை நாம் வானத்தில் பார்க்கும்போது, அதன் மேற்பரப்பு முழுவதும் ஏராளமான பள்ளங்களுடன் இருப்பதாகச் சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால், அந்த நிலவில் 141 அடி ஆழத்திற்கு பள்ளம் ஒன்று இருப்பதாகச் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படியொரு புதிய பள்ளத்தைத்தான் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA-வின் Lunar Reconnaissance Orbiter எனப்படும் LRO கண்டுபிடித்துள்ளது. பல ஆண்டுகளாக நிலவைச் சுற்றி வந்து அதன் மேற்பரப்பை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து வரும் இந்த விண்கலம், பழைய மற்றும்…

  • ஈரானில் அமெரிக்க தாக்குதல்கள்: போர்க்குற்றம் நிகழ்ந்திருக்கலாம் – ஐ.நா. தெரிவிப்பு

    ஈரானில் அமெரிக்கா நடத்திய இருவேறு வான்வழித் தாக்குதல்களில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதுவதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சுயாதீன நிபுணர் குழு தெரிவித்துள்ளது. மினாப் நகரிலுள்ள பாடசாலை மீதான தாக்குதலில் 168 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. லாமர்ட் நகரில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஈரான் அரசுப் படைகள் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொண்ட வன்முறை மற்றும் ஒடுக்குமுறைகள் மனிதகுலத்துக்கு…

  • ட்ரம்பின் மகன்களுடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் ட்ரோன் ஒப்பந்தம்

    அமெரிக்க ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Powerus, பாகிஸ்தான் இராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ட்ரோன் தொடர்பான ஆரம்பகட்ட ஓர்டரையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் மதிப்பு மற்றும் ட்ரோன்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. Powerus, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன்களான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ரம்ப் முதலீடு செய்துள்ள Aureus Greenway Holdings நிறுவனத்துடன் அக்டோபரில் இணையத் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் ட்ரோன் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் எதிர்காலத்தில் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து…

  • மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு வீட்டுக் காவல் அனுமதி

    மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு, மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் வகையில் மன்னிப்பு வழங்க மலேசிய மன்னர் சுல்தான் இப்ராகிம் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமரின் சட்டத் துறை அறிவித்துள்ளது. 1MDB நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நஜீப் ரசாக்கிற்கு, முன்பு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை 2024ஆம் ஆண்டு ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. புதிய முடிவின்படி, அவரது தண்டனைக் காலம் 2028 ஓகஸ்ட் 23ஆம் திகதி வரை தொடரும்.…