கொசோவோ நாட்டின் முன்னாள் அதிபர் ஹாசிம் தாசிக்கு (HashimThaci) போர்க்குற்ற வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நெதர்லாந்தின் தி ஹேக் (The Hague) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.1990களில் செர்பியாவிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக நடைபெற்றபோரின்போது அரசியல் எதிரிகள்,பொதுமக்கள் என 96 பேரை படுகொலைசெய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
1990-களின் இறுதியில் செர்பியாவிற்கு எதிராக நடந்த சுதந்திரப் போரின்போது, கொசோவோ விடுதலைப் படையின் (KLA) அரசியல் பிரிவின் தலைவராக ஹாசிம் தாசி செயல்பட்டார். KLA அமைப்பின் தலைவராக அவர் இருந்த காலத்தில், அரசியல் எதிரிகள் மற்றும் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்ட பொதுமக்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல்களை நடத்தத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக நீதிமன்றம் உறுதிசெய்தது. இந்தப் போர்க்குற்ற வழக்கில், கொசோவோ நாட்டின் முன்னாள் அதிபர் ஹாசிம் தாசிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நெதர்லாந்தின் தி ஹேக் (The Hague) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Leave a Reply