Category: இலங்கை செய்திகள்

  • சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறை தெரிவிப்பு

    இலங்கையின் முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மாலபே, தலஹேனமாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை அவர் உடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது உயிர்மாய்ப்பு என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 63 வயதான சி.டி. விக்ரமரத்ன, இரு பிள்ளைகளின் தந்தையாவார். இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவரது குடும்ப உறுப்பினர்களும் வீட்டிலேயே இருந்துள்ளனர். அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவருக்குச் சொந்தமான…

  • இலங்கையில் ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவரிற்கு ஜூலை 28 வரை விளக்கமறியலில்

    இலங்கையின் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகிய மூவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று (17) முற்பகல் குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 28ஆம்…

  • சுரேஷ் சலே வழக்கு : இடைக்கால மனுக்களை பரிசீலிக்க நீதிமன்றம் திகதி நிர்ணயம்

    இலங்கை: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தன்னைக் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்குமாறு கோரி அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனுவில், தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுக்களை பரிசீலிப்பதற்காக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 மற்றும் 6 ஆம் திகதிகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து…

  • லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் ஜஃப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது

      லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் Jaffna Kings அணியின் உரிமையாளர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை பொலிஸின் விளையாட்டுத் துறை தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவினரால் (SIU) இந்த அதிரடிக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போட்டி ஒத்திவைப்பு, ஸ்பாட்-பிக்ஸிங் மற்றும் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான விசாரணைகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர்…

  • இலங்கையில் வீடுகளுக்களிற்குள்ளேயே நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

    இலங்கையில் நுளம்பு குடம்பிகள் தற்போது அதிகளவில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கும் இடங்களிலேயே கண்டறியப்படுவதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வெளிப்புற சுற்றாடலுடன் ஒப்பிடும்போது வீடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ள பூச்சாடிகளிலும் குளிரூட்டிகளில் நீர் தேங்கும் இடங்களிலும் அதிகளவிலான நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்தார். அதற்கமைய வீட்டு உரிமையாளர்கள் தமது வீடுகளை தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.நுளம்பு குடம்பிகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருக்கும் வீடுகள் மற்றும் வளாகங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கைகளும்…

  • ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகையான ஆடிப்பிறப்பு இன்று

    ஆடிப்பிறப்பு என்பது தமிழ் ஆடி மாதத்தின் முதல் நாளைக் குறிக்கும் ஒரு விசேட பண்டிகையாகும் (பொதுவாக ஜூலை 16 அல்லது 17 ஆம் திகதிகளில் இது கொண்டாடப்படும்). இப்பண்டிகை குறிப்பாக ஈழத்துத் தமிழர்களின் (இலங்கைத் தமிழர்கள்) வாழ்வியலோடும் பண்பாட்டோடும் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஒரு முக்கிய திருநாளாகும். சித்திரை முதல் ஆனி வரை நீடிக்கும் கோடை காலத்தின் வெப்பம் தணிந்து, குளுமையான காற்றுடன் கூடிய தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கும் காலமே ஆடி மாதமாகும். ஆடி மாதத்தில்…

  • முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார்

    முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் .துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 1986ம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக, பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி.விக்ரமரத்ன், 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித்…

  • அமெரிக்காவினால் இலங்கைக்கு கிடைத்துள்ள அன்பளிப்பு

    அமெரிக்காவினால் இலங்கைக்கு கிடைத்துள்ள அன்பளிப்பு

    விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான இரண்டு வண்டிகள் இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. குறித்த இரண்டு வண்டிகளும் பாரிய கொள்ளளவு மற்றும் விலை உயர்ந்த வண்டிகளாகும். அமெரிக்கா -இலங்கை நட்புறவை வலுப்படுத்தும் செயற்பாடுகளின் ஒரு கட்டமாக இந்த வண்டிகளை அமெரிக்கா அரசாங்கம் அன்பளிப்புச்செய்துள்ளது. இதன் மூலம் இலங்கை விமானப்படையின் ஆற்றல் அதிகரிப்பதுடன் மிகவும் வினைத்திறனுடன் எரிபொருள் நிரப்புதல், விமானப்படையின் நடவடிக்கைகளை மேம்படுத்தல் மற்றும் நீண்ட கால போர் நடவடிக்கைகளுக்கு தயார்படுத்தல் போன்றவற்றில் பயன்மிக்க பங்களிப்பை குறித்த வண்டிகள்…

  • பலாங்கொடையில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உலங்குவானுர்தி அனுப்பி வைப்பு

    பலாங்கொடையில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உலங்குவானுர்தி அனுப்பி வைப்பு

    பலாங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இலங்கை விமானப் படையின் உலங்குவானுர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்புல்பே – பலாங்கொடை, ரத்தனகொல்லவில் பெரும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்கும் செயற்பாடுகளில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பலாங்கொடையின் ரத்தனகொல்ல-இம்புல்பே பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்த, பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக, இலங்கை விமானப்படையின் பெல் 412ரக ஹெலிகொப்டர்  ஈடுபடுத்தப்பட்டது. விரைவாகச் செயற்பட்ட…

  • தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த முனையும் அரசாங்கம்! மறுக்கும் ஜனாதிபதி அநுர..

    தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த முனையும் அரசாங்கம்! மறுக்கும் ஜனாதிபதி அநுர..

    தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே முன்னாள் கடற்படை தளபதி நிசாந்த உலுகேதென்னவை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கும் கருத்து முற்றிலும் தவறானது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நேற்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்த போது புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக அவர் கைது செய்யப்பட்டதாக ஊடக மாநாடுகளை…