Category: இலங்கை செய்திகள்
-

பலாங்கொடையில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உலங்குவானுர்தி அனுப்பி வைப்பு
பலாங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இலங்கை விமானப் படையின் உலங்குவானுர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்புல்பே – பலாங்கொடை, ரத்தனகொல்லவில் பெரும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்கும் செயற்பாடுகளில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பலாங்கொடையின் ரத்தனகொல்ல-இம்புல்பே பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்த, பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக, இலங்கை விமானப்படையின் பெல் 412ரக ஹெலிகொப்டர் ஈடுபடுத்தப்பட்டது. விரைவாகச் செயற்பட்ட…
-

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த முனையும் அரசாங்கம்! மறுக்கும் ஜனாதிபதி அநுர..
தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே முன்னாள் கடற்படை தளபதி நிசாந்த உலுகேதென்னவை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கும் கருத்து முற்றிலும் தவறானது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நேற்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்த போது புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக அவர் கைது செய்யப்பட்டதாக ஊடக மாநாடுகளை…
-

இலங்கை கடற்கரையை அண்டிய கட்டடங்களுக்கு அபராதம்
இலங்கையின் கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றாமல் இருப்பதற்கு கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அத்தோடு,அந்தக் கட்டடங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் அறவிடத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் அபராதம் அறவிடுவதன் மூலம் ஆண்டுதோறும் அனுமதியை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதற்குத் தேவையான சட்ட விதிகளை தயாரிப்பதற்காக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார். கடலோரப் பகுதி என்பது சராசரி…
-

நுவரெலியா மாவட்டத்தில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் திறந்து வைப்பு
தற்போது நாட்டில் அதிகரிக்கும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்காக நுவரெலியாவில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் ஒன்றினை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் திறந்து வைத்தார். இதன்போது நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் (29) மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போது, நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கிற…
-

ஜயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவர் நியமனம்
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவராக வைத்தியர் தமரா கலுபோவில நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் தலைவராக நியமித்துள்ளதையடுத்து, வைத்தியர் தமரா கலுபோவில இன்று (30) காலை ஸ்ரீஜெயவர்தனபுர வைத்தியசாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (29) புதிய தலைவருக்கான நியமனக் கடிதத்தை வைத்தியர் தமரா கலுபோவிலவிடம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் வழங்கி வைத்தார்.
-

வட்ஸ்அப் நிதி மோசடி குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
நிதி மோசடி செய்வதற்காக வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் தளத்தைப் பயன்படுத்தி போலி செய்திகள் மற்றும் இணைப்புகளை அனுப்பி, பயனர்களின் தனிப்பட்ட கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் குற்றப் புலனாய்வுத் துறை (CID) கண்டறிந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் பயனரிடமிருந்து வாட்ஸ்அப் OTP (ஒரு முறை கடவுச்சொல்) பெற்று கணக்கைக்…
-

கம்பளையில் பிரபல குடை உற்பத்தித் தொழிற்சாலை தீயில் எரிந்து முற்றாக நாசம்
கண்டி, கம்பளையில் பிரபல குடை உற்பத்தித் தொழிற்சாலையொன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கம்பளை வைத்தியசாலை வீதியில் அமைந்திருந்த கந்துரட்ட குடை உற்பத்தித் தெழிற்சாலையே இவ்வாறு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இன்று(28) மாலை குறித்த தீ அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. தீயை அணைக்க பல்வேறு தரப்புகளும் கடுமையாக போராடிய நிலையில் குடை உற்பத்தித்தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா இயற்கை எய்தினார்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று(27) காலை இயற்கை எய்தினார். அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்று(28)காலை அஞ்சலிக்காக கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் அன்னாரின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு மாலை 4 மணிக்கு மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறவுள்ளது. வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு…
-

தென் அதிவேக வீதியில் கோர விபத்து: இரண்டு பெண்கள் பலி
தென் அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(26) பிற்பகல் நடந்த வாகன விபத்தில் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளதுடன் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தளயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வானின் டயர், அங்குணகொலபெலஸ்ஸ பகுதியின்; 175வது கிலோமீட்டர் தூண் பகுதியில் வைத்து வெடித்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனையடுத்து வாகனம் கவிழ்ந்து விபத்துள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் குறித்த சிற்றூர்தியில் ஆறு பேர் இருந்ததுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இதுபோன்ற துயரங்களைத் தடுக்க…
-

சர்ச்சைக்குள்ளான ரணிலின் தீர்மானத்தை வரவேற்கும் அரசியல்வாதி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் சரியான தீர்மானமாகும். அரசியல்வாதியென்ற வகையில் நான் அதை ஏற்றுக்கொள்கின்றேன் என முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அன்றைய காலகட்டத்தில் நாடு ஸ்தம்பிதமடைந்திருந்தது. நாடாளுமன்றத்தை கைப்பற்றும் நோக்கில் போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்திருந்தனர். ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் விநியோகம் முழுவதும் தடைப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் அத்தியாவசிய…