Category: இலங்கை செய்திகள்
-
இலங்கையில் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் மோசடி
கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாயிஸ் மொஹமட் நப்டிகா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பகுதியில் மறைந்திருந்த நிலையில்…
-
7ஆவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!
தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ‘முடிவுக்கு வந்துவிட்டது’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது நாளாக தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் படைகள் ஈரானின் ‘கண்காணிப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்களை’ தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இத்தாக்குதல்களுக்குப் பதிலடியாக, குவைத் உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை…
-
ஒன்லைன் விளையாட்டுக்காக கடையை உடைத்து திருடிய சிறுவர்கள்
ஆன்லைன் விளையாட்டுக்காக கடையை உடைத்து, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மொபைல் போன்களைத் திருடிய 14 வயதுடைய இரண்டு மாணவர்கள் இலங்கையின் தம்புத்தேகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 4ஆம் திகதி குறித்த இரு மாணவர்களும், எப்பாவல நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள கைபேசிக் கடையை அதிகாலை நேரத்தில் உடைத்து தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், தலவ நபாதவெவ மற்றும் எப்பாவல ரொட்டவெவ பகுதிகளில் வசிக்கும் 14…
-
இலங்கையின் முன்னாள் காவல்துறை மா அதிபரின் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரம்
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கியை, மேலதிக விசாரணைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக, மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் சமந்த விஜேசேகர தெரிவித்தார். நீதிமன்றத்துக்கு விடயங்களை அறிக்கைப்படுத்தியதன் பின்னர், குறித்த துப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை பகுப்பாய்வாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகளை எதிர்வரும்…
-
ஜனாதிபதி மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்: செல்வம் அடைக்கலநாதன்
தமிழ் இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் ஆதரவு இருப்பதாக டெலோ (Telo) அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், தமிழ் இனத்தை ஒழிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவதற்கான ஒரு சாதகமான சூழல் உருவாகி…
-
இலங்கையில் தீவிரமாகும் டெங்குவின் தாக்கம்: இதுவரை 53 பேர் பலி
நாட்டில் டெங்கு நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 74,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, நோயாளர்களின் எண்ணிக்கை 74,000-ஐத் தாண்டியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
படுகொலைகள் தற்கொலையாக மாறும் கலாசாரம் தற்போது காணப்படுகிறது – மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே!
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்று யார் உறுதிப்படுத்தியது. படுகொலைகள் தற்கொலையாக மாறும் கலாசாரம் தற்போது காணப்படுகிறது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சர்ச்சைக்குரிய வழக்குகளின்…
-
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷிதவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
நிதிச் சலவை தடுப்பு சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் முன்னிலையாகி சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். இதனையடுத்து மேலதிக சாட்சி விசாரணைகளுக்கென வழக்கு இம்மாதம் 24ம் தகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதியில் 730 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித்…
-
இலங்கையில் சவர்க்காரங்களுக்கு புதிய கட்டுப்பாடு
இலங்கையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான சவக்கார உற்பத்திகளுக்கான கட்டாய பெயரிடல் தேவைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஒழுங்கு விதிகள் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியசாலையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியின் பெயர், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அல்லது ஏதேனும் இரு மொழிகளில் தடித்த எழுத்துக்களில் பிரதான பக்கத்தில் அச்சிடப்பட வேண்டும். மூன்றாவது மொழி ஏதேனும் ஒரு பக்கத்தில் இடம்பெற…
-
சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறை தெரிவிப்பு
இலங்கையின் முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மாலபே, தலஹேனமாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை அவர் உடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது உயிர்மாய்ப்பு என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 63 வயதான சி.டி. விக்ரமரத்ன, இரு பிள்ளைகளின் தந்தையாவார். இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவரது குடும்ப உறுப்பினர்களும் வீட்டிலேயே இருந்துள்ளனர். அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவருக்குச் சொந்தமான…