Category: இலங்கை செய்திகள்

  • யாழில் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் கோடி கணக்கில் திருட்டு நகைகள் பொலீசாரால் மீட்ப்பு

    யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன…

  • அடுத்த மூன்று நாட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

    அடுத்த மூன்று நாட்களில் நாட்டின் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 23ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஒரு இலட்சம் ரூபாய் செலவிட்டு நாடாளுமன்றம் சென்ற பெண் சட்டத்தரணி ஒரு இலட்சம் ரூபாய் செலவிட்டு நாடாளுமன்றம் சென்ற பெண் சட்டத்தரணி அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென்மேற்கு…

  • பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

    இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று(22) முதல் விடுமுறை வழங்கப்படுகின்றது. அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுவதுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி…

  • கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் மர்மமான முறையில் கொலை

    கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த 70 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று பிற்பகல் கிருலப்பனை, காலிங்க மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதியில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் இருந்து சுமார் 8 பவுண் தங்கம் திருடப்பட்டுள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட பெண் கொலை செய்யப்பட்ட பெண் தனது கணவர், மகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வந்துள்ளார்.…

  • பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

    அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் அடுத்த மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்று…

  • டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

    இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலை மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த பிடியாணை இன்றையதினம் (21) பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால்…

  • வடக்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமை குறித்து அதிருப்தியடைந்துள்ள நாமல்

    வடக்கு மாகாணத்தில் இராணுவ முகாம் ஒன்று அண்மையில் அகற்றப்பட்டமை குறித்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் மாதங்களில் மேலும் பல முகாம்களை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ள அவர், குடிமக்களுக்கு நிலத்தை மீள விடுவிப்பதில் பிரச்சினை இல்லை. எனினும், இந்த விடயத்தில் தேசிய பாதுகாப்பில் சமரசம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப் படைகளுடன் கலந்தாலோசித்து…

  • சீனாவால் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்காக 12 மில்லியன் ரூபா நிதி உதவி

    வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் நேற்று (20.11.2024) கையளித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று காலை இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். இதன்போது, அவர் இந்தக் காசோலையைக் கையளித்ததுடன் வடக்கு மாகாண…

  • கொழும்பில் சமூக பிறழ்வான முறையில் இயங்கிய விடுதிகள்: வியட்நாம் பெண்கள் கைது

    வாடிக்கையாளர்களிடம் இருந்து 35,000 ரூபாய் முதல் 50,000 வரை கட்டணம் வசூலித்து, கொழும்பில் சமூக பிறழ்வான முறையில் இயங்கிய இரண்டு விடுதிகளை நடத்திய, வியட்நாமியப் பெண்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினர் இந்த கைது நடவடிக்கையை இன்று (20) மேற்கொண்டுள்ளனர். இதன்படி, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வோர்ட் பிளேஸில் உள்ள வீடு ஆகியவற்றில் இருந்து, குடிவரவு திணைக்களத்தினர், ஏழு பெண்கள் உட்பட ஒன்பது வியட்நாம் நாட்டவர்களை கைது செய்தனர்.…

  • அநுரவிற்கு சவாலாகும் அமெரிக்க இராணுவ தரையிறக்கம் தொடர்பான ஒப்பந்தம்

    இலங்கை, அமெரிக்காவுடன் மேற்கொண்டு நிலுவையில் உள்ள சோஃபா ஒப்பந்தத்தினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசிற்கு சிக்கல் நிலைய ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “மைக் போம்பியோ, அமெரிக்காவினுடைய வெளியுறவு துறை செயலாளராக இருந்த போது, அதாவது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது ஆட்சி காலத்தின் இறுதி கட்டத்தின்போது போம்பியோ இலங்கைக்கு விஜயம்…