Category: இலங்கை செய்திகள்

  • பொலிஸ் அரசியலுக்கு முடிவு கட்டப்படும் : புதிய அமைச்சரின் உறுதிமொழி

    பொலிஸ் அரசியல் மயமாக்கலுக்கு முடிவு கட்டுவதற்கு, இலங்கையின் புதிய பொது பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளதுடன், இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். பொலிஸின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் புதிய பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால நேற்று (20) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கங்களின் கீழ் பொலிஸ்துறை அரசியல் மயமாக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை பொலிஸாரை அரசியல் செல்வாக்கிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி…

  • ஜனாதிபதியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் சட்டம்! இந்தியா தீவிர நாட்டம்

    புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 21 உறுப்பினர்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது உண்மையில் வரவேற்கத் தக்க விடயம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன்(A.Sarveshwaran) தெரிவித்தார். இதன் மூலமாக பல்வேறு நிதி வீண் விரயங்களைத் தடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை, ஜனாதிபதியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் சட்டம் தொடர்பிலும், இலங்கை குறித்து இந்தியாவின் அடுத்தக் கட்ட நகர்வு தொடர்பிலும் பேராசிரியர் இதன்போது தெளிவுபடுத்தினார் என்பது…

  • புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அதிரடி மாற்றம்! அநுர நினைத்தாலும் செயற்படுத்த முடியாத சிக்கல்

    கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் மக்கள் கொண்டிருந்த உச்சக்கட்ட துன்பத்தின் வெளிப்பாடு தான் இந்த ஆட்சி மாற்றம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம்(K.Amirthalingam) தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக 150 புதிய முகங்கள் நாடாளுமன்றத்திற்குள் வரப்போகின்றார்கள். அதற்கு இணையாக பல மூத்த அரசியல் தலைவர்கள் அனைவரும் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள் என்றும் அவர்…

  • புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம்

    அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளது. ஜனாதிபதி முன்னிலையில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு குறித்த பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதுடன், அமைச்சரவை அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாணமும் இடம்பெறவுள்ளது. இதேவேளை, 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் (21) காலை. புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 11.30க்கு வழங்குவார் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்…

  • சத்தியலிங்கம் – சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி…

    சத்தியலிங்கம் – சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி… தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பிலான சர்ச்சை நிலைகள் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தற்போது வலுப்பெற்று வருகிறது. எனினும் தமது கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அந்த நியமனங்களில் ஒருவராக கருதப்படும் பா. சத்தியலிங்கத்தினது உள்வருகையானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் திட்டமிடலின் ஒரு அங்கம் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அந்த வகையில் ஊடகம்…

  • ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பேர் கைது

    மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று (16) இரவு ரோந்து பணியின் போது. கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் வசிக்கும் சந்தேகநபர்கள் இருவரும் வடகிழக்கு…

  • நாளை பதவியேற்கும் புதிய அமைச்சரவை! அநுர மற்றும் விஜிதவிற்கு பலமான அமைச்சுக்கள்

    தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளைய(18) தினம் பதவியேற்கவுள்ளது. நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உள்ளடங்களாக தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவை 50 பேரைக் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், புதிய அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய பதவியேற்கவுள்ளதாகவும், விஜித ஹேரத்திற்கு ஒரு பலமான அமைச்சுப்…

  • சத்தியலிங்கத்தின் இறுதிக் கையொப்பம் : காத்திருக்கும் அதிர்ச்சி

    சத்தியலிங்கத்தின் இறுதிக் கையொப்பம் : காத்திருக்கும் அதிர்ச்சி தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் ப. சத்தியலிங்கம் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளதாக சுமந்திரனால் வெளியிடப்பட்ட கருத்து பலர் தரப்பிலும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், “முன்னதாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகாத யாரும் இந்த தேர்தலில் போட்டியிட கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்தார். அது மாத்திரமின்றி, இத்தேர்தலில் சிறீதரன் போட்டியிட கூடாது என்றும்…

  • தேசிய பட்டியலுக்கான அளவுகோல்களை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு

    தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதற்கான அளவுகோல்களை, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் அல்லது 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படாத வேட்பாளர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட முடியும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் தேசிய பட்டியல் மூலம் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

  • தமிழரசுக் கட்சிக்கு முக்கியஸ்தர்கள் தெரிவு..!

    தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக ப.சத்தியலிங்கமமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட கூட்டம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் பல கருத்து ரீதியான வேறுபாடுகளை கடந்து எல்லோரது விருப்பங்களுடன் மன்னார், வவுனியா ஆகிய இடங்களின் இடைவெளியை கருத்தில்…