Category: இலங்கை செய்திகள்
-
சுமந்திரனின் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார்..!
சுமந்திரனின் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார்..! நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய அரசமைப்பு வரைபை அநுர அரசு மீளக் கொண்டு வரப் போவதாகவும், தான் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் அந்தச் செயற்பாட்டைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையாளுவார் என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அந்த வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (16) நடத்திய ஊடக…
-
தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் கருத்து
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சியின் அரசியல் குழுவே இறுதி முடிவு எடுக்கும் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (16.11.2024) சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு முடிவும் கட்சியால் எடுக்கப்படவில்லலை. இதனால் கட்சியின் அரசியல் குழு கூடி ஒரு முடிவு எடுக்கும்…
-
வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு
வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் வவுனியா மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்றையதினம் (16) சம்பவித்துள்ளது. முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மணிவேல் பிள்ளை சஞ்சீவ் பிரதீபன் என்ற 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் முள்ளிவளை பொலிஸாரால் கடந்த (16.10.24) அன்று கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இரு குற்றவாளிகளுக்கு பிணை வைத்துள்ளதுடன் மற்றும் ஒரு குற்றச்செயல்…
-
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 2 முக்கியஸ்தர்கள் விரைவில் கைது
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் இரண்டு முக்கியஸ்தர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு பிரதானி ஒருவரும், அரசியல் கட்சியொன்றின் தலைவரும் கைது செய்யப்பட உள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. செனல்4 ஊடகத்திற்கு தகவல்களை வழங்கிய அசாத் மௌலானவிடம் இணைய வழியில் சாட்சியங்கள் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சாட்சியங்களின் அடிப்படையில் நீதிமன்றில் உத்தரவு பெற்றுக்கொண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட உள்ளனர். செனல்4 காணொளி…
-
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் விபரம்!
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பது தொடர்பில் உள்ளக பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. புதிய ஜனநாயக முன்னணி சார்பில் நடைபெற்று முடிந்த பொது தேர்தலில், தெரிவுசெய்யப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு மொத்தமான 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள்(இரண்டு பேர் தேசிய பட்டியலிலிருந்து) நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர். இதன்படி கட்சியின் நாடாளுமன்ற…
-
மாவட்ட ரீதியாக விருப்பு வாக்குகளின் விபரங்கள்
கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தியில் (NPP) சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியும் கொழும்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை வென்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி – 14 1. ஹரினி அமரசூரிய -655,289 2. சதுரங்க அபேசிங்க -127,166 3. சுனில் வட்டகல -125,700 4. லக்ஸ்மன்…
-
மகிந்தவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் பிரதமர் ஹரிணி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சாதனையை முறியடித்துள்ளார். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, 655,289 என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். வரலாற்றில் இடம்பிடித்த வாக்கு எண்ணிக்கை இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக பிரதமர் ஹரிணி பெற்ற வாக்குகள் இடம்பிடித்துள்ளன இதற்கு…
-
முள்ளிவாய்க்கால் நினைவு தூபில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய புதிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்
முள்ளிவாய்க்கால் நினைவு தூபில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய புதிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்றைய தினம் (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம்(15) முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார் நேற்றைய தினம் (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தாெகுதியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
-
மன்னாரில் வாக்காளர்களுக்கு என வழங்க கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் பொலிஸாரால் மீட்பு-3 நபர்கள் கைது-அடம்பன் பொலிஸார் நடவடிக்கை.
மன்னாரில் வாக்காளர்களுக்கு என வழங்க கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் பொலிஸாரால் மீட்பு-3 நபர்கள் கைது-அடம்பன் பொலிஸார் நடவடிக்கை. மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால் வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் இன்று புதன்கிழமை(13) மாலை மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார்-யாழ் பிரதான வீதியில்…
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி மாவட்ட அரசாங்க அதிபர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி மாவட்ட அரசாங்க அதிபர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் நாளையதினம் (14) இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் தாெடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அனைத்து தேர்தல் பணிகளும் பூர்த்தியாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில்…