Author: Yalarasan
-
இணைந்த 22 மாணவர்கள் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த விபரீதம்
தனமல்வில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஒரு வருடமாக குழுவாக இணைந்து, தன்னை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுத்தியதாக தனமல்வில பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவி வாக்குமூலம் வழங்கியுள்ளார். தனமல்வில பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய 22 மாணவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது…
-
மன்னார் சதோச மனித புதை குழி பகுதியை Scan பரிசோதனை செய்ய தீர்மானம்.
மன்னார் சதோச மனித புதை குழி பகுதியை Scan பரிசோதனை செய்ய தீர்மானம். (08/08/2024) மன்னார் “சதோச” மனித புதை குழி தொடர்பிலான வழக்கு நேற்றய தினம் புதன் கிழமை (7)மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் கலந்துரையாடல் வடிவில் குறித்த வழக்கு விவாதிக்கப்பட்டது. இதன் போது அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ,பேராசிரியர் ராஜ்சோம தேவ்,காணாமல் போனோர் சங்க பிரதிநிதிகள்,OMP அலுவளக பிரதிநிதிகள் உள்ளடங்கியோர் கலந்து கொண்டனர். இதன் போது…
-
சீதுவை பொலிஸ் பிரிவில் துப்பாக்கி வெடித்தது ஒருவர் பலி
சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடுகொட பொலிஸ் வீதி சோதனை சாவடியில் காரை சோதனையிடச் சென்று போது நபர் ஒருவர் பொலிஸ் சார்ஜன்ட்டின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார். சீதுவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சீதுவை திசையிலிருந்து வந்த காரை சோதனையிட முற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அப்போது, காரின் இடது ஆசனத்தில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் சார்ஜன்ட்டின் கடமை துப்பாக்கியை பறிக்க முற்பட்ட போது, துப்பாக்கி வெடித்ததில் அந்த அதிகாரியின் காலிலும், பறிக்க முற்பட்ட நபரின் வயிற்றிலும்…
-
மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலையான வைத்திய அர்ச்சுனாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அமோக வரவேற்பு.
மன்னார் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் புதன் (7) நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ஜுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை வழங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை(2) இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் அத்து மீறி நுழைந்து கடமைக்கு இடையூரை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் மன்னார் போலீஸ் நிலையத்தில் வைத்தியசாலை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வைத்தியர் அர்ச்சுனா மன்னா போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வைத்தியர் சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்…
-
வடக்கு கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கையை ஜனாதிபதியிடம் வழங்க விடாது தடுத்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு
வடக்கு கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கையை ஜனாதிபதியிடம் வழங்க விடாது தடுத்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சந்தித்து கலந்துரையாடிய நிகழ்வு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் சில தமது கடுமையான எதிர்ப்பையும் இந்த கலந்துரையாடலை புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தன இதற்கான நியாயமான காரணங்களையும் அவை வெளிப்படுத்தி இருந்தன இந்நிலையில் ஏற்ப்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு அமைய…
-
இலங்கைக்கு அருகில் இந்து சமுத்திரத்தில் பல கோடி பெறுமதியான பெரும் புதையல்
இந்து சமுத்திர பிராந்திய கடற்படுக்கையில் இலங்கைக்கும் – மாலைத்தீவுக்கும் அருகில் பல கனிமங்கள் நிறைந்த ஒரு மலைத்தொடர் காணப்படுகின்றது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்தார். இதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நாடு மிகப்பெரிய செல்வந்த நாடாக மாறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
-
10 வயது சிறுமிக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை! 10 வயது சிறுமிக்கு ஒரு வருடம் பாலியல் தொல்லை!
பத்து வயது சிறுமிக்கு ஒராண்டுக்கு மேலாக பாலியல் தொந்தரவு அளித்து வந்த சிறுமியின தாத்தாவை பொலிசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியில் அறுபத்து ஏழு வயது மீனவரின் மகன் கடந்த சில வருடங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மருமகள் தனது பெண் குழந்தையை மாமனாரிடம் ஒப்படைத்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பெண் குழந்தையை வளர்த்து வந்த தாத்தா, கடந்த ஒராண்டுக்கும் மேலாக 10 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்து இருக்கிறார்.
-
கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது!
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, கே. ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர் மற்றும் அக்மீமன தயாரதன தேரர்…
-
வெளிநாடு செல்ல தயாராக இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு
பலாங்கொடையில் இளைஞர் குழுவொன்று நீரில் மூழ்கியமையால் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனையவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கொரியா நாட்டிற்கு செல்வதற்கான பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர் குழுவொன்றே தமது சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்றையதினம் பலாங்கொடை பம்பஹின்ன சமனலவெவ வாவியிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய யூ.எம்.கமல் பிரசங்க நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சுமார் ஒன்பது பேர் கொண்ட குழுவொன்று சுற்றுலா சென்றுள்ளது வெளிநாடு செல்ல தயாராக இருந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு பலாங்கொடையில்…
-
திணறும் ரணில் அரசாங்கம் நாட்டில் உருவாக்கவுள்ள மாபெரும் கூட்டணி!
எதிர்க்கட்சி தலைவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் கொள்கை அடித்தளத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி மாபெரும் கூட்டணி உருவாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், ”தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் இன்னும் 46 நாட்களில் முடிவடையும். அரசாங்கம் தற்போது தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் 134 வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தற்போது தமக்கு 92 நாடாளுமன்ற…