Author: Yalarasan
-
இலங்கையர்கள் உள்ளிட்டவர்களுடன் பிரித்தானியா நோக்கி சென்ற படகு கடலில் மூழ்கி விபத்து – ஒருவர் மரணம்
பிரித்தானியா நோக்கி சென்ற சொகுசு படகொன்று கடலில் மூழ்கி விபத்துள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த படகில் இலங்கையர்கள் உட்பட 22 வெளிநாட்டவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தின் போது, படகில் பயணித்த பிரித்தானியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் உட்பட 06 பேர் காணாமல் போயுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
-
பிரம்டனில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி; ஹரி ஆனந்தசங்கரி என்ன கூறினார்?
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு வியாழக்கிழமை (15) அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி, இலங்கையின் கடந்தகால மீறல்கள் ஒருபோதும் மறக்கப்படமுடியாதவை என்பதற்கும், எமது மீண்டெழும் தன்மைக்குமான நிலையான சின்னமாக திகழும் என கனடாவின் சுதேசிய உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேமாதம் 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை அதேவேளை நினைவு தூபி தொடர்பில் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ்…
-
கனடா பிரம்டனில் இலங்கை படுகொலையை பிரதிபலிப்பு நினைவு தூபி
கனடாவின் பிரம்டனில் இலங்கை தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். நினைவுத்தூபி கட்டுவதை தடுத்துநிறுத்தவேண்டும் கனடாவின் வாக்குவங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த பொய்யான கதையை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார். பிராம்டன் நகரசபையின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலான செயற்பாடு இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும்…
-
22 பேரால் தவறான செயற்பாட்டிற்கு உள்ளான மாணவிக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு
22 பேரால் தவறான செயற்பாட்டிற்கு உள்ளான மாணவிக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு மொனராகல, தனமல்வில பிரதேசத்தில் தகாத முறைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 16 வயது மாணவிக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அத்தியட்சகர் தாம் என கூறி மாணவியை அழைத்து வாக்குமூலம் பெற முயற்சிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரது பெற்றோர் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டெல்லிக்கு சென்ற முக்கிய செய்தி
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலானது தற்போது அண்டை நாடுகளின் கவனத்தை ஈர்த்தது இலங்கையில் பொருளாதார முதலீடுகளை செய்துள்ள இந்தியா மற்றும் சீனாவிற்கான எதிர்கால நகர்வுகள் எவ்வாறு அமைய போகும் என்பதை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாக இது பார்க்கப்படுகின்றது. இந்த தேர்தலில், ரணில், சஜித் மற்றும் அனுர தரப்புக்கள் மும்முரமான போட்டியினை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இங்கு இந்தியாவின் உற்றுநோக்கலானது ரணிலை எதிர்பார்க்கும் ஒரு எதிர்கால அரசியல் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறான அரசியல் நகர்வுகளையும் இந்தியாவின் நோட்டமிடல்கள் தொடர்பிலும் விசேட…
-
கிபிர் தாக்குதலில் பலியான மாணவர்களுக்கு வள்ளிபுனத்தில் அஞ்சலி செய்யப்பட்டது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இலங்கை இராணுவம் நடாத்திய கிபிர் விமான குண்டு தாக்குதலில் பலியான மாணவர்களுக்கு இன்று அஞ்சலி செய்யப்பட்டது
-
இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து கனடாவில் போராட்டம்!
பங்களாதேசில் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி கனடாவில் போராட்டம் முன்னெடுக்கபப்ட்டது. இந்த போராட்டத்தில் இந்து, யூதர்,கிறிஸ்தவர், புத்த மதத்தினர் இணைந்து பங்கேற்றுள்ளனர். கடந்த வாரத்தில் பங்களாதேசில் மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருந்தார். மாணவர்கள் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. இந்துக்களின் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், பங்களாதேசில் சிறுபான்மை மக்களாக வாழும் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என…
-
நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்ஷ சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று (14) முற்பகல் கட்டுப்பணம் செலுத்தினார். ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி வேட்பாளர்…
-
கனடாவில் குளிர்பானத்தில் நோய்க்கிருமிகள்: சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ள சமீபத்திய தகவல்
கனடாவில் பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பானத்தை அருந்திய 2 பேர் உயிரிழந்தார்கள். 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில், அந்த பானத்தை அருந்திய மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளதாக கனேடிய பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக், ஆல்பர்ட்டா மற்றும் நோவா ஸ்கொஷியா ஆகிய நான்கு மாகாணங்களில் தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட பானம் ஒன்றில் லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பானத்தை…
-
மன்னாரில் உண்ணாவிரதத்தில் குதித்த வைத்தியர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(13) காலை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். சிந்துஜாவின் மரணத்துடன்…