Author: Yalarasan
-
மன்னாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்: தண்டனைக்கு உறுதியளித்த எம். பி
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாயின் மரணத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகள் நீதியான முறையில் இடம்பெறுகின்றதா என்பது பற்றி அறிந்து கொள்வதற்காக நேற்று (3) மாலை மன்னார் பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். குறிப்பாக அண்மையில் வைத்தியசாலையில் இடம்பெற்ற பட்டதாரியான இளம் குடும்பப்…
-
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில். பிரதமர் தினேஷ் குணவர்தன நிலைப்பாட்டை அறிவித்தார்
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மஹாஜன எக்சத் பெரமுன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது. மஹரகம கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இக்கலந்துரையாடலில் மக்கள் ஐக்கிய முன்னணியின் உப தலைவர்கள், இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதாஞ்சன குணவர்தன, பிரதிச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் யதாமணி குணவர்தன, பிரதிச் செயலாளர்…
-
ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களுக்கு அதிரடியான நடவடிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இலங்கையில் நெருக்கடிகள் ஏற்படலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அச்சம் இருப்பதாக தெரிவித்தார். எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை பெற்றுக்கொள்வதில் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பிரச்சினையைக் கையாள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும. இவ்வாறான நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் 3 விசேட குழுக்களை ஜனாதிபதி நியமிதுள்ளதாகவும். இதன்படி, தேசிய பாதுகாப்பு தொடர்பான விசேட குழுவொன்றும், பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான குழுவொன்றும்…
-
லெபனானில் இருந்து விரைவில் வெளியேறுங்கள்; அவுஸ்திரேலியா அறிவிப்பு
அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவும் பிரிட்டனும் தங்கள் நாட்டு மக்களிடம் இதே கோரிக்கையை விடுத்துள்ளன. இந்நிலையில் சுமார் 15,000 அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 500,000 பேர் ஆஸ்திரேலியாவில் வசிப்பதாக தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.இது தொடர்பில் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு…
-
அதிரடி கைது வியாழேந்திரனின் செயலாளர்
வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் உதவியாளர்கள் இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்றையதினம் (01.08.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆற்று மணல் அகழ்வுக்கான உரிமத்தினை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
விளையாட்டால் ஒன்றிணைவோம்
விளையாட்டால் ஒன்றிணைவோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கனடா பிரிச்மவுன் ஸ்டேடியத்தில் எதிர் வரும் மூன்று எட்டு இரணடாயிரத்து நான்கு காலை பத்து மணி தொடக்கம் மாலை ஐந்து மணி வரை தமிழர் தடகள விளையாட்டு போட்டி நடைபெறும் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடா கிளையினர் தமிழர் தடகள விளையாட்டு போட்டிக்கு ஊடக அனுசரணையினை ஈழமுரசு கனடா திருவாளர் கண்ணன்
-
மகிந்த மொட்டு கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்திய ரணிலின் இரகசிய திட்டம்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிலையில், நாட்டின் அரசியல் களம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கின்றதை காணமுடிகிறது 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் அந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மீதான மக்களின் எதிர்பார்ப்பு எந்த அளவு உச்சத்தில் இருந்ததோ அதற்கு துளிகூட குறையாத வகையில் இவ்வருடம் நடத்தப்படவுள்ள ஜனாதிபதி…
-
மன்னாரில் பட்டதாரி இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு!
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவமானது நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா (27) என தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, இறந்த இளம் தாய்க்கு முதலாவது ஆண் குழந்தை மன்னார் மாவட்ட பொது…
-
முல்லைத்தீவில் ஒட்டிசுட்டானில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்ப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது இந்த சம்பவமானது, இன்று (29.07.2024) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணை நேற்று (28) இரவு தொடக்கம் காணவில்லை என வீட்டார் மற்றும் அயலவர்கள், கிராமத்தவர்கள் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். இருப்பினும், அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இன்று (29) காலை வீட்டு கிணற்றுக்குள் அவரின் சடலம் இருப்பதனை அவதானித்த குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து, பொலிஸாரால்…
-
சட்டவிரோத நில அபகரிப்புக்கு எதிராக. கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகைகுளத்தின் ஒரு பகுதி சட்டவிரோதமாக தனிநபர் ஒருவரால் மண் நிரப்பட்டு அடாத்தாக பிடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்களால் எதிர்ப்பு ஆா்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏ9 வீதியில் கனகாம்பிகைகுளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியில் இன்று ஒன்று கூடிய பொதுமக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர் கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தின் ஏ9 வீதியோடு அண்டியதாக சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு குளத்தை தனிநபர் ஒருவர் மண் நிரப்பி பிடித்து்ளள நிலையில் குறித்த குளத்தின்…