Author: Sixsidemedia Admin

  • உக்ரேன் மோதல்: இருளில் தெரியும் ஒளிக்கீற்று

    உக்ரேன் மோதல்: இருளில் தெரியும் ஒளிக்கீற்று

    பதவியேற்றதும் 24 மணி நேரத்தில் உக்ரேன் போர் முடிவுக்கு வரும் என அறிவித்த ட்ரம்பினால் 24 நாட்களில் கூட போரை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ரஷ்ய-உக்ரேன் மோதலில் ஒரு திருப்பமாக போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான திடமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்றான, ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் நிறுத்தமானது தான் எதிர்பார்த்ததைப் போன்று இலகுவான ஒரு விடயமல்ல என்பதை பதவியில்…

  • உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முடிவுகள் குறித்த ஒரு ஆய்வு!

    உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முடிவுகள் குறித்த ஒரு ஆய்வு!

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முடிவுகள்,அதிகாரப் பகிர்வு மற்றும் சமரசப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒரு சூழலை உருவாக்கக்கூடும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முடிவுகள் குறித்த ஒரு ஆய்வு! I.  2025 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், நாட்டின் அரசியல் களத்தில் முக்கியமான மாற்றங்களையும் போக்குகளையும் வெளிப்படுத்தியுள்ளன. இத்தேர்தல் முடிவுகள், தமிழ்…

  • கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?

    கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?

    இலங்கை தமிழ் அரசியல்  களத்தில்  தலைமைத்துவம் தொடர்பான அக்கறைகள் அண்மைக்காலமாக உத்வேகம் பெறும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் யார் எதிர்கால தமிழ் அரசியல் தலைவராக மேன்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார் என்பது உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு விவாதத்துக்குரிய ஒரு விடயமாக இருக்கும். வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு கட்டங்களில் செல்வாக்குமிக்க தலைவர்கள் வெளிக்கிளம்பி ஆதிக்கம் செய்த தோற்றப்பாடு இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றின்  எடுத்துக்காட்டான ஒரு அம்சமாகும். பொன்னம்பலம் சகோதரர்கள் இராமநாதனும் அருணாச்சலமும், அருணாச்சலம்…

  • புதிய திருத்தந்தை பதின்நான்காம் லியோ (14ம் சிங்கராயர்).

    புதிய திருத்தந்தை பதின்நான்காம் லியோ (14ம் சிங்கராயர்).

    புதிய திருத்தந்தை பதின்நான்காம் லியோ அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் பிறந்து அகஸ்தீன் சபையில் சேர்ந்து …தென்னமெரிக்க ஆயர்களுடைய தலைமை ஆயராக பணியாற்றி, 2023 செப்டம்பர் மாதம் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக தகுதி உயர்த்தப்பட்ட கருதினால் மேதகு ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் அவர்கள், திருத்தந்தை 14 ஆம் லியோ(14ம் சிங்கராயர்)என்ற பெயர் தேர்வோடு திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார் …புதிய திருத்தந்தைக்காக நாம் ஜெபிப்போம்.  

  • டொரண்டோவுக்கு வந்த விமானத்தில் தட்டம்மை நோயாளி

    டொரண்டோவுக்கு வந்த விமானத்தில் தட்டம்மை நோயாளி

    அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உடனடி மருத்துவ ஆலோசனை தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த வாரம் டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானத்தில் ஒரு தட்டம்மை நோயாளி கண்டறியப்பட்டதைக் கருத்தில் கொண்டு, பீல் பொது சுகாதாரத்துறை (PPH) விசாரணை நடத்தி வருகிறது. இதன் மூலம், இந்த ஆண்டில் அந்த பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி சீடலிலிருந்து டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானம் AC540-ல் பயணித்தவர்கள், அல்லது அதே நாளில்…

  • தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேருக்கு தடையுத்தரவு

    தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேருக்கு தடையுத்தரவு மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய சுதந்திர தினமான நாளை (4) ஆர்ப்பாட்டங்களை, சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழுபேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இதற்கான தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. இலங்கை குடியரசின் தேசிய தினம் 04-02-2025 அன்று கொண்டாடப்பட வேண்டியது என இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பில் 08ஆவது சரத்தில் கூறப்பட்டுள்ளது.…

  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களைத் தடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் முறையாகத் தலையிடத் தவறியதே இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

  • யோஷிதவின் விசாரணையில் அம்பலமான தகவல்கள்

    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பல தனிப்பட்ட தகவல்கள் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வெளிப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரத்மலானை சிறிமல் உயன பகுதியில் 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்கியது தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜனவரி 25 ஆம் திகதி பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்ட பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மேலும்,…

  • டிரம்பின் வரி மிரட்டலுக்கு பணிந்ததா கொலம்பியா?

    தென் அமெரிக்க நாடான கொலம்பியா இந்த நாடு கடத்தும் திட்டத்தை நிராகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணியர் வர தடை என, கெடுபிடிகளை விதித்தார். சட்டவிரோதமாக குடியேறிய கொலம்பியர்களை இரண்டு விமானங்களில் அமெரிக்க அரசு அனுப்பி வைத்தது. அந்த விமானங்கள் தரையிறங்க கொலம்பியா அனுமதிக்கவில்லை. இதனால், கொலம்பிய நாட்டு இறக்குமதிக்கான வரியை 25 சதவீதம் உயர்த்தினார் டிரம்ப். இது அடுத்த ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும்…

  • யோஷிதவை துரத்திச் சென்ற பொலிஸார்! நீதிமன்ற வாயிலில் வைத்து நாமல் கடும் சீற்றம்

    தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் நாமல் ராஜபக்சவின் சகோதரர் யோஷித ராஜபக்ச அண்மையில் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்னும் இரண்டு வாரத்தில் நாமல் கைது! வெளியான மகிந்த தரப்பு தகவல் இன்னும் இரண்டு வாரத்தில் நாமல் கைது! வெளியான மகிந்த தரப்பு தகவல் பழிவாங்க முயற்சிக்கும் அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம்…