Author: yalarasan canada
-
கிளிநொச்சி மருத்துவமனைக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்..!
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று(06) நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை நோயாளர் நலன்புரி சங்கத்தினர் வடக்கு மாகாண ஆளுநரை நேற்று வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் தேவைகள் மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை இயக்குமாறு கோரியிருந்தனர். இதன் பின்னர் பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு…
-

மாபியாக்களின் பிடிக்குள் ஆனையிறவு உப்பளம்..?
ஒரு ஏக்கர் விளைச்சல் நிலத்தில் வருடமொன்று சுமார் 400 மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி செய்யப்படும் ஆனையிறவு 1760 ஆம் ஆண்டு போர்த்துகேயர் காலம் தொட்டு இன்று வரை பேசப்படுகின்ற ஒரு பெயராகவே இருந்து வருகிறது. போரத்துகேயர், பிரித்தானியர், இலங்கை படையினர், விடுதலைப்புலிகள் என இராணுவ கேந்திர நிலையங்களாக பேசப்பட்டு வந்த பெயருக்குள் 1935 ஆம் ஆண்டு தொடக்கம் ஆனையிறவு உப்பளமும் இணைந்துகொண்டது. ஆனையிறவு உப்பளம் இலங்கையில் பிரசித்தி பெற்ற உப்பளமாகும், இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்புக்கு, இலங்கை…
-
சபாநாயகரை சந்தித்த இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர்!
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் இலங்கை – இஸ்ரேல் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் ரூவன் ஜேவியர் அசார் (Reuven Javier Azar), சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் தூதுவர் அசார் சபாநாயகரின் நியமனம் தொடர்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இஸ்ரேலிய சபாநாயகரின் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டார். சுற்றுலா, விவசாயம், விஞ்ஞானம், டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு மற்றும் மருத்துவத் துறைகள் உள்ளிட்ட பிரதான துறைகளில் இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு…
-
உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலை: அகற்றுமாறு கோரிக்கை..!
தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் ஆக்கிரமித்தலும் அண்மைக்காலமாக தொடர்கின்றது. தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் தொடரும் ஆக்கிரமிப்புகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீவன் தெரிவித்துள்ளார். அம்பாறை உகந்தை மலையிலுள்ள ஆலயம் அதனுடன் இணைந்த கடற்கரையிலுள்ள மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர் பாரம்பரிய…
-
அம்மாவின் ஆசையை நிறைவேற்ற பெலாரஸுக்குச் சென்ற தம்பிக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை : அண்ணனின் உருக்கமான வேண்டுகோள் !
கடந்த 2025.04.06 ஆம் திகதி எமக்கு ஓர் திடுக்கிடும் தகவல்! அவர் அங்கு தவறான முடிவெடுத்து உயிரிழந்தாக எனக்கு தகவல் கிடைத்திருந்தது. எனது தம்பி வெளிநாடு செல்ல வேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிறைவேற்றி, அம்மாவின் ஆத்மா ஈடேற வேண்டும் என்பதற்காகவும், எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் எனது தம்பி தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார். பெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற எனது தம்பியான விநாயகமூர்த்தி பகிரதனுக்கு என்ன நடந்தது என்பது…
-
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடையே மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திய புடின்: அதிர்ச்சியான அமெரிக்கா
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடையே ரஷ்யா, உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து, அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு,”அவர் (புடின்) முழு உக்ரைனையும் விரும்பினால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று எச்சரித்து உள்ளார். ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில் உள்ள மோரிஸ்டவுன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “புடினுடன் நான் மகிழ்ச்சியாக இல்லை” என்று கூறி புடினை விமர்சித்தார். “அவர் நிறைய பேரைக் கொல்கிறார். புடினுக்கு என்ன ஆயிற்று…
-
“கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி: தமிழ் டயஸ்பொறாவின் வரலாற்றுச் சாதனை”
டொராண்டோ, மே 2025 – கனடாவின் Toronto நகர சபையில், தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைப்பதற்கான முக்கியமான தீர்மானம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. “கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி: தமிழ் டயஸ்பொறாவின் வரலாற்றுச் சாதனை” டொராண்டோ, மே 2025 – கனடாவின் Toronto நகர சபையில், தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைப்பதற்கான முக்கியமான தீர்மானம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கனடிய அரசியல் வரலாற்றிலும், சர்வதேச தமிழர் உரிமைப் போராட்ட வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயமாக…
-
ஐரோப்பாவின் பாதுகாப்பு பரிதாபம், ரஷ்யாவின் தாக்குதல்கள்: உக்ரைனில் தீவிரமடையும் பதற்றம்!
ஐரோப்பா தனது பாதுகாப்பு பேச்சை தீவிரமான நடவடிக்கைகளுடன் விரைவாக இணைக்காவிட்டால், அதன் வாக்குறுதிகளுக்கும் உக்ரைனின் போர்க்கள நிலைமைக்கும் இடையிலான இடைவெளி மேலும் அகலும். ஐரோப்பாவின் பாதுகாப்பு பரிதாபம் மற்றும் ரஷ்யாவின் தாக்குதல்கள்: உக்ரைனில் தீவிரமடையும் பதற்றம் புதிய மோதல் கட்டம். உக்ரைனில் தொடரும் போர், இப்போது ஆபத்தான மோதல் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. ரஷ்யாவின் சமீபத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் இந்தப் போர் தொடங்கியதிலிருந்து மிகக் கொடூரமானவை எனக் கூறப்படுகிறது—கீவ் நகரில் 12 பேரைக் கொன்றது மற்றும்…
-

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்!
வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்தல் மற்றும் இலங்கைக்கு நன்மை பயக்கும் பிரதிபலன்களை பெற்றுக்கொள்ளல் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் இலங்கை தூதுக்குழு பங்கேற்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இதுவாகும். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் மற்றும் இலங்கையின் தொடர்புடைய அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற பல…
-

உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலை; சர்ச்சையை கிளப்பிய விவகாரம்!
அம்பாறை மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய கடற்கரை சூழலில் உள்ள குன்றில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள குன்றிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு பௌத்த கொடியை பறக்க விடப்பட்டுள்ளமையும் கடுமையான எதிர்ப்பலையை ஏற்படுத்தி உள்ளது. உகந்தைமலையில் நாங்கள் முருகன் சிலையொன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில்…