Author: Six Side Media

  • செல்லப்பிராணிகள் நன்கொடை: டென்மார்க் மிருகக்காட்சி சாலை வேண்டுகோள்

    செல்லப்பிராணிகள் நன்கொடை: டென்மார்க் மிருகக்காட்சி சாலை வேண்டுகோள்

    வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை எங்களுக்கு நன்கொடையாக கொடுங்கள் என்று டென்மார்க்கின் மிருகக்காட்சி சாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. டென்மார்க் நாட்டில் ஆல்போர்க் மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்குள்ள விலங்குகளுக்கு இயற்கை உணவு அளிப்பதை நோக்கமாக கொண்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள்,செல்லப்பிராணிகளை கருணை கொலை செய்வதாகவும், வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள், பல்வேறு காரணங்களுக்காக கொடுக்கப்பட வேண்டிய ஆரோக்கியமான பிராணிகள் இருந்தால் எங்களிடம் நன்கொடையாக வழங்கலாம் என்று மிருகக்காட்சி சாலை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது…

  • உலகின் பெரிய விமான போக்குவரத்து சந்தையில் இந்தியா 5வது இடம்!

    உலகின் பெரிய விமான போக்குவரத்து சந்தையில் இந்தியா 5வது இடம்!

    உலகின் 5வது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இந்தியா உயர்ந்துள்ளது என, ஐஏடிஏ எனப்படும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 350 விமான நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச விமான நிலைய போக்குவரத்து அமைப்பு , 2024ம் ஆண்டிற்கான உலக விமானப் போக்குவரத்து புள்ளிவிவரங்களின் சமீபத்திய அறிக்கையை இன்று வெளியிட்டது. மேலும் அவ்வறிக்கையில் ,மும்பை-டில்லி விமானச் சேவை 2024-ல் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலைய வழித்தடமாக இடம்பிடித்துள்ளது.  கடந்த ஆண்டு இந்தியா 21 கோடியே…

  • யாழில் ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் கைது!

    யாழில் ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் கைது!

    யாழ் – குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் (03.08.2025 ) கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 90 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளின்…

  • 600 ஆண்டுக்கு பின் வெடித்த எரிமலை; ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமா?

    600 ஆண்டுக்கு பின் வெடித்த எரிமலை; ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமா?

    ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள கிராஷென்னினிகோவ் எரிமலை, 600 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வெடித்துள்ளதாகவும், சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இது நிகழ்ந்திருக்கலாம் எனவும் அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் கடந்த மாதம் 30ம் திகதி, 8.8 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இதையொட்டி ஜப்பான், ஹவாய் தீவுகளில் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இந்நிலையில் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள கிராஷென்னினிகோவ் எரிமலையில் இருந்து தீப் பிழம்பு நேற்று எழுந்துள்ளது.…

  • இலங்கை கடற்கரையை அண்டிய கட்டடங்களுக்கு அபராதம்

    இலங்கை கடற்கரையை அண்டிய கட்டடங்களுக்கு அபராதம்

    இலங்கையின் கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றாமல் இருப்பதற்கு கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அத்தோடு,அந்தக் கட்டடங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் அறவிடத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் அபராதம் அறவிடுவதன் மூலம் ஆண்டுதோறும் அனுமதியை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதற்குத் தேவையான சட்ட விதிகளை தயாரிப்பதற்காக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார். கடலோரப் பகுதி என்பது சராசரி…

  • உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாகி இருப்பது சிறப்பான ஒன்று என்று இந்திய முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் 15வது உடலுறுப்பு தானம் தின நிகழ்ச்சியில், உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் ஜேபி நட்டா விருது வழங்கி கௌரவித்தார். இந்த நிலையில், உடலுறுப்பு தானம் செய்து பலரின் உயிர்களை வாழ வைத்தவர்களை நினைவு கூர்ந்து, எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்; டிரம்ப்

    ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்; டிரம்ப்

    ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயாராக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா – அமெரிக்கா இடையே மோதல் போக்கு உள்ளது. இந்த வார தொடக்கத்தில் டிரம்புக்கும், ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மெட்விதேவுக்கும் இடையிலான கருத்து…

  • சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார்

    சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார்

    தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த மதன் பாப் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 71. மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசையமைப்பாளராக தனது திரைவாழ்க்கையை தொடங்கிய இவர், ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மதன் பாப், பல மொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தேவர்மகன், சதி லீலாவதி, துள்ளாத மனமும்…

  • நுவரெலியா மாவட்டத்தில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் திறந்து வைப்பு

    நுவரெலியா மாவட்டத்தில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் திறந்து வைப்பு

    தற்போது நாட்டில் அதிகரிக்கும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்காக நுவரெலியாவில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் ஒன்றினை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் திறந்து வைத்தார். இதன்போது நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் (29)  மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போது, நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கிற…

  • ஜயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவர் நியமனம்

    ஜயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவர் நியமனம்

    ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவராக வைத்தியர் தமரா கலுபோவில நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம்  தலைவராக நியமித்துள்ளதையடுத்து, வைத்தியர் தமரா கலுபோவில இன்று (30) காலை ஸ்ரீஜெயவர்தனபுர வைத்தியசாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (29) புதிய தலைவருக்கான நியமனக் கடிதத்தை வைத்தியர் தமரா கலுபோவிலவிடம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் வழங்கி வைத்தார்.