Author: Six Side Media

  • சவூதியில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்தினருக்கு ரிஷாட் பதியுதீன் நேரில் சென்று ஆறுதல்..!

    சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று இரவு (18) கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது…

  • ஒருவேளை உணவுக்காக தெருவில் கையேந்தி நின்ற நான்கு வயது சிறுமி… இன்று ஸ்டெதஸ்கோப்பை ஏந்தி நூற்றுக்கணக்கான மனிதர்களின் உயிரைக் காக்கும் மருத்துவர்!

    இது ஏதோ ஒரு திரைப்படத்தின் கதை அல்ல… தர்மசாலாவின் தெருக்களில் பிறந்து வளர்ந்த பிங்கி ஹர்யன் என்ற பெண்ணின் நிஜ வாழ்க்கைக் கதை! 2004-ஆம் ஆண்டு ஒரு நாள், மெக்லியோட் கஞ்சில் உள்ள ‘சரண் காட்’ குடிசைப் பகுதியின் சாலையோரத்தில் பிச்சை கேட்டுக்கொண்டிருந்த சிறுமி பிங்கியை, லோப்சாங் ஜம்யாங் என்ற திபெத்திய புத்த துறவி பார்த்தார். ஒரு கணத்தில் அந்த மனிதரின் மனதில் ஏற்பட்ட இரக்கம், அந்தச் சிறுமியின் வாழ்க்கையையே மாற்றியது. பிங்கியின் பெற்றோரிடம் தொடர்ந்து பேசி…

  • ஈரான் போர் | இதுவரை ரூ.3.2 லட்சம் கோடி செலவு.. காலியாகும் அமெரிக்காவின் கஜானா!

    ஈரானுடன் அமெரிக்கா நடத்திவரும் போர் 7ஆவது மாதத்தைக் கடந்துள்ளது. இந்த, 200 நாட்களில் 3 லட்சத்து 20ஆயிரம் கோடி ரூபாயை அமெரிக்கா செலவிட்டுள்ளது. இதில் செயல்பாட்டுச்செலவுகள், எரிபொருள் செலவுகளுடன் ஏராளமான போர் விமானங்கள், ட்ரோன்கள் இழப்பும் அடங்கும். இது, அமெரிக்காவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-ஈரான் மோதல் 200 நாட்களைக் கடந்து 7-ஆவது மாதத்தில் அடிஎடுத்து வைத்துள்ளது. அமெரிக்கா இப்போருக்காகத் தினமும் சராசரியாகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவிட்டு வரும் நிலையில், இதுவரை…

  • பாகிஸ்தான் நாட்டில் புனித மசூதி ஒன்றில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள கோஹாட் என்ற பகுதியில், இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்காக மசூதி ஒன்று அமைந்துள்ளது. இந்த மசூதியில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில், பல்வேறு இஸ்லாமியர்கள் தொழுகைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், காவல்துறை தலைமையகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள அந்த மசூதிக்கு, வெள்ளிக்கிழமையான இன்று அதிக அளவிலான இஸ்லாமியர்கள் தொழுகைக்கு வந்துள்ளனர். அப்போது, வெடிமருந்துகள் முழுமையாக நிரப்பப்பட்ட கார் ஒன்றை ஒருவர் ஓட்டிவந்து, மசூதியின் நுழைவு வாயிலில் மோதியுள்ளார். இதன்காரணமாக, காரில் இருந்த…

  • நடிகர் தனுஷ் வெளியிட்ட ஒரேயொரு பதிவு, சமூக வலைதளங்களில் பெரும் பூகம்பத்தையே கிளப்பியிருக்கிறது.

    நடிகர்கள் நாடாள முடியுமா என்ற கேள்வி, தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் எப்போதும் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும் கேள்வி தான். ஆனால், இந்த கேள்விக்கு ஆம் என்று பதில் அளித்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலிதா, விஜய் ஆகியோர் தான். விஜயகாந்த் மட்டும், எதிர்கட்சி தலைவர் பதவி வரை உயர்ந்தார். மற்றபடி, சிவாஜி, சரத்குமார், பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் கட்சியை ஆரம்பித்து, பாதியிலேயே கலைத்துவிட்டு அரசியலில் இருந்து காணாமல் போனார்கள். அவ்வளவு ஏன், தமிழகத்தின் மிகுந்த ஆளுமையான நபர் என்று கூறப்பட்ட…

  • முன்னாள் அதிபருக்கு 25 ஆண்டு சிறை.. கொசோவோவை அதிரவைத்த நீதிமன்ற தீர்ப்பு!

    கொசோவோ நாட்டின் முன்னாள் அதிபர் ஹாசிம் தாசிக்கு (HashimThaci) போர்க்குற்ற வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நெதர்லாந்தின் தி ஹேக் (The Hague) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.1990களில் செர்பியாவிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக நடைபெற்றபோரின்போது அரசியல் எதிரிகள்,பொதுமக்கள் என 96 பேரை படுகொலைசெய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 1990-களின் இறுதியில் செர்பியாவிற்கு எதிராக நடந்த சுதந்திரப் போரின்போது, கொசோவோ விடுதலைப் படையின் (KLA) அரசியல் பிரிவின் தலைவராக ஹாசிம் தாசி செயல்பட்டார். KLA…

  • 35 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. ஆபத்தில் பூமியின் நன்னீர்.. உலக ஆறுகள் குறித்து WMO அதிர்ச்சி அறிக்கை!

    கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகின் ஆறுகளில் நீர்வரத்து மிகக் தீவிரமாகக் குறைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குடிநீர் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள ‘மாநில உலகளாவிய நீர் வளங்கள் 2025’ (State of Global…

  • நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மம்!

    நிலவை நாம் வானத்தில் பார்க்கும்போது, அதன் மேற்பரப்பு முழுவதும் ஏராளமான பள்ளங்களுடன் இருப்பதாகச் சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால், அந்த நிலவில் 141 அடி ஆழத்திற்கு பள்ளம் ஒன்று இருப்பதாகச் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படியொரு புதிய பள்ளத்தைத்தான் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA-வின் Lunar Reconnaissance Orbiter எனப்படும் LRO கண்டுபிடித்துள்ளது. பல ஆண்டுகளாக நிலவைச் சுற்றி வந்து அதன் மேற்பரப்பை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து வரும் இந்த விண்கலம், பழைய மற்றும்…

  • 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை

    இந்திய தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் பாகத்தை நாய்கள் கடித்துத் தின்ற அவலமும் நிகழ்ந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கொடூர குற்ற சம்பவம் டெல்லியில் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வரூப் நகரில் நடந்துள்ளது. பொலிஸார் உடலை கைப்பற்றிய போது இறந்தவரின் பாலினத்தை தடயவியல் நிபுணர்கள் அறிவதில் சிக்கல் இருந்தது. இந்த சூழலில் இந்த குற்ற பின்னணியை பொலிஸார்…

  • நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

    பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (18) முற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தபோது 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.