Author: Six Side Media

  • தமிழக முதல்வரின் லண்டன் பயணம் எதற்காக என்பதில் தெளிவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

    பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய தலைமைச் செயலகம் மற்றும் முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நடைபெறவுள்ள இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக வெற்றிபெறும். இதற்காக நாங்கள் முழு முயற்சியுடன் பாடுபடுவோம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வார். புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமே இல்லை. மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி, பள்ளி மற்றும்…

  • உலகளாவிய பொருளாதார அழுத்தம்: அதிரடி முடிவெடுத்த ஜப்பான் வங்கி!

    ஜப்பான் மத்திய வங்கி, தனது கொள்கை வட்டி விகிதத்தை 0.25 சதவீத புள்ளிகளால் அதிகரித்து, 1.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன்படி, ஜப்பானில் கடன் பெறுவதற்கான செலவு கடந்த 31 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மட்டத்தை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டில் நிலவும் பணவீக்கம், ஊதிய உயர்வு மற்றும் அமெரிக்காவிடமிருந்து ஏற்படும் பொருளாதார அழுத்தம் உள்ளிட்ட காரணிகள் வட்டி விகித உயர்வுக்கான பின்னணியாகக் குறிப்பிடப்படுகின்றன. ஜப்பான் மத்திய வங்கி இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம்…

  • வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை- அதிரடி நடவடிக்கைகள்

    கேகாலையின் -புலத்கோஹுபிட்டிய (Bulathkohupitiya) பகுதியிலுள்ள டெடுகல (Dedugala) கிராமத்தின் வீடு ஒன்றுக்குள் நுழைந்த முழு வளர்ச்சியடைந்த சிறுத்தை ஒன்று, எவ்விதப் பாதிப்புமின்றி மீட்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். புலத்கோஹுபிட்டிய அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, கால்நடை மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் அந்த சிறுத்தையை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த இடத்திலிருந்து சிறுத்தையை மீட்ட பிறகு, அதனை அதன் தாயுடன் மீண்டும் இணைக்க வனவிலங்கு அதிகாரிகள் முயற்சித்த போதிலும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதனைத்…

  • பிச்சை போட மறுத்த பெண்; மூக்கைக் கடித்து மூக்குத்தியைப் பறித்த யாசகர்; உத்தரப்பிரதேசத்தில் துணிகரம்

    மும்பை புறநகரில் உள்ள நவிமும்பை கோபர் கைர்னே என்ற இடத்தைச் சேர்ந்த மோனிகா ரெய்னா என்ற பெண் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோவர்தனில் கடந்த ஆறு மாதங்களாகத் தங்கி இருந்து மத சடங்குகளில் பங்கேற்று வருகிறார். மோனிகா மதுராவில் உள்ள ராதாகுண்ட் அருகே உள்ள கோவர்தன் பரிக்ரமா வழித்தடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒருவர் யாசகம் கேட்டார். ஆனால் மோனிகா யாசகம் கொடுக்க மறுத்தார். இதனால் யாசகம் கேட்டவர் அந்தப் பெண்ணை புதருக்குள்…

  • இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 18, 2026 வெள்ளி

    பஞ்சாங்கம் நாள் வெள்ளிக்கிழமை திதி சப்தமி பகல் 1.54 வரை பிறகு அஷ்டமி நட்சத்திரம் கேட்டை யோகம் மரணயோகம் ராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை எமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை நல்லநேரம் காலை 9.15 முதல் 10.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் பரணி சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் மேஷம் ராசி பலன்  மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய படைப்பாற்றல் மற்றும் திட்டமிடல்…

  • அமெரிக்கா – ஈரான் மோதல் : தீர்க்கமான கட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்: ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

    ஈரானுடன் நிலவிவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மீண்டும் ஒரு தீவிரமான தாக்குதல் தொடரை ஆரம்பிப்பது தொடர்பில் தான் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவைக்குக் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “எனக்கு விரைவில் ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டியுள்ளது. நான் உள்ளே நுழைந்து அவர்களை முழுமையாக அழிக்க வேண்டுமா இல்லையா? அது மிகப் பெரிய ஒரு முடிவு. என்னை வைத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.…

  • நாமல் ராஜபக்ச இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

    கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (18) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வளவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், கையூட்டலாக 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் வரவு…

  • சுவிட்சர்லாந்தில் விமான விபத்து ; 3 பேர் பலி

    சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் அமைக்கப்பட்ட சியான் விமான நிலையத்தில் இருந்து சிர்ரஸ் எஸ்.ஆர்.22டி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அது புறப்பட்ட 10 நிமிடங்களில் திடீரென ஸ்விஸ் மலைப்பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விமான விபத்தில், இங்கிலாந்து நாட்டினர் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.…

  • பியர்சன் விமான நிலைய கொள்ளைச் சம்பவ வழக்கிலிருந்து ஒருவர் விடுதலை

    பியர்சன் விமான நிலைய கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர் ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கனடா விமான நிலையமொன்றிலிருந்து 400 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் விலக்கிக்கொண்டுள்ளார்கள். 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டன. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தக்க ஆவணங்களுடன்…

  • அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்கும் அமெரிக்கா

    அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், பல்லாயிரக்கணக்கான, அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடை கொண்ட குண்டுகள் உட்பட 2.8 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்பை இஸ்ரேலுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளது. முக்கிய ஆயுத விற்பனைகளை மறுஆய்வு செய்யும் தொடர்புடைய நாடாளுமன்றக் குழுக்களுக்கு முறைசாரா முறையில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டமிடப்பட்ட தொகுப்பில், 20,000 எம்.கே-84 குண்டுகளும் 20,000 பி.எல்.யூ-117…