Author: Six Side Media
-

மட்டக்களப்பில் வயோதிபப் பெண்ணை மிரட்டி தாலிக் கொடி கொள்ளை! பொலிஸார் தீவிர விசாரணை
மட்டக்களப்பு- ஊறணி பகுதியில் வீடு ஒன்றில் உள்நுழைந்த கொள்ளையன் ஒருவர் வயோதிபப் பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் இருந்த 16 பவுண் தாலிக் கொடியை கொள்ளையடித்து கொண்டு தப்பியோடியுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று(28) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தெரியவருவதாவது, கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள ஓவசியர் வீதி சின்ன ஊறணி பகுதியிலுள்ளள வீடு ஒன்றில் தாதியர் உத்தியோகத்தர் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற 65 வயதுடைய வயோதிப பெண்ணும் கணவனும் வாழ்ந்து வருகின்றனர்.…
-

சாரதியால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து – சாமர்த்தியமாக காப்பாற்றப்பட்ட 30 பயணிகள்
பண்டாரவளை போக்குவரத்து சபை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பயணிகள் பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்து 30 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினர். நேற்று முன்தினம் மாலை, பதுளையில் இருந்து பத்தேவெல, தெமோதர வழியாக பல்லகெட்டுவ நகரத்திற்கு சென்ற பண்டாரவளை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த பயணிகள் பாரிய ஆபத்து ஒன்றை எதிர்கொண்டுள்ளனர். எனினும் பண்டாரவளை போக்குவரத்து சபையில் பணிபுரியும் ஓட்டுநர் சுமிந்த கருணாரத்ன மற்றும் பேருந்தின் நடத்துனர் ஜயவர்தன ஆகியோர் எடுத்த முயற்சியால் பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.…
-

முல்லைத்தீவு ஆலய வளாகத்தில் ஆணின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (28) இடம்பெற்றுள்ளது. குரவில் உடையார்கட்டு பகுதியை சேர்ந்த கந்தசாமி தர்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அவதானித்தவர்களால் பொலிஸாருக்கு…
-

ரணிலின் கைது காரணமாக உயிரிழந்த பல்கலைக்கழக வேந்தர்! எழுந்துள்ள சர்ச்சை
ரணில் விக்ரமசிங்கவின் கைது காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியினால் லோர்ட் போல் ஒஃப் மேரிலேபோன் திடீரென உயிரிழந்திருக்கலாம் என ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 1999 முதல் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றிய லோர்ட் போல் என் அழைக்கப்படும் ஸ்வராஜ் போலின் அழைப்பின் பேரில் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு பயணம் செய்ததாக திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார். இது ஒரு அபத்தமான வழக்கு. ஒரு ஜனாதிபதி பயணம் செய்ய உரிமை உண்டு, மேலும் அனைத்து செலவுகளும் கணக்காய்வாளர்…
-

சிறைக்கு அனுப்பப்பட்ட ரணில்.. ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள தகவல்
கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்திருப்பது தொடர்பில் கட்சி தீவிரமாக ஆராயும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு எதிரான வழக்கினை எதிர்த்து கட்சி போராடும் என்றும் ருவான் விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (22.08.2025) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர், நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது அவரை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
-

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்! சர்வதேச பத்திரிக்கையொன்றின் 5 ஊடகவியலாளர்கள் பலி
காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 சர்வதேச பத்திரிக்கையொன்றின் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. நேற்றையதினம்(10) அல் ஷிபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு அருகே நடந்த தாக்குதலில் அல் ஜசீரா அரபு நிருபர் அனஸ் அல் ஷெரீப், நிருபர் முகமது ரைக் மற்றும் கேமரா ஆபரேட்டர்கள் இப்ராஹிம் ஜாஹிர், முகமது நௌபால் மற்றும் மோமின் அலிவா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் முகவர்களுக்கு உதவ முயன்றபோது அல் ஷெரீஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் பத்திரிகையாளர்கள் கொலைக்கு…
-

NPP அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சின் முன்பாக இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். சுமார் அரை மணி நேரம் கல்வி அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகள் பின்னர் பேரணியாக சென்று பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொண்டிருந்த…
-
இலங்கையின் முதற்தர பணக்காரர் வரிசை மாற்றம்
தற்போதைய நிலையில் இஷார நாணயக்காரவே இலங்கையின் முதற்தர செல்வந்தராக இருப்பதாக கல்ப் நியூஸ் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையின் முதற்தர செல்வந்தராக இருந்த தம்மிக்க பெரேராவை மீறி இஷார நாணயக்கார முதலிடத்திற்கு வந்துள்ளதாக குறித்த செய்தியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனியின் உரிமையாளரான இஷார நாணயக்கார, பல்வேறு நாடுகளில் மைக்ரோ கடன் திட்டங்கள், தேயிலை உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்களில் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் தற்போதைக்கு அவர் 1.6 பில்லியன் அமெரிக்க…
-

யாழில் கருநிலம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
மன்னாரில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டலை கண்டித்து, இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் இன்று(10) மாலை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் உள்ளது. இந்த மணல், இல்மனைட் கனிமத்தை கொண்டிருப்பதால் உலகளவில் பெரும் கேள்வி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணல் அகழ முயற்சித்து வருகிறது. இந்த அகழ்வைத் தடுக்கவும், மக்களின் பூர்வீக…
-

அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தம்
பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை (11) முதல் செயல்படுத்தப்படவிருந்த நாடளாவிய பணிப்புறக்கணிப்பை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. வைத்தியர்களின் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததுடன், நாளை காலை 8.00 மணிக்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் அது நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி, சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கிடைத்த நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான பதில்களைக் கருத்தில் கொண்டு நாடளாவிய பணிப்புறக்கணிப்பை அரச வைத்திய அதிகாரிகள்…