Author: Six Side Media
-
நடிகர் தனுஷ் வெளியிட்ட ஒரேயொரு பதிவு, சமூக வலைதளங்களில் பெரும் பூகம்பத்தையே கிளப்பியிருக்கிறது.
நடிகர்கள் நாடாள முடியுமா என்ற கேள்வி, தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் எப்போதும் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும் கேள்வி தான். ஆனால், இந்த கேள்விக்கு ஆம் என்று பதில் அளித்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலிதா, விஜய் ஆகியோர் தான். விஜயகாந்த் மட்டும், எதிர்கட்சி தலைவர் பதவி வரை உயர்ந்தார். மற்றபடி, சிவாஜி, சரத்குமார், பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் கட்சியை ஆரம்பித்து, பாதியிலேயே கலைத்துவிட்டு அரசியலில் இருந்து காணாமல் போனார்கள். அவ்வளவு ஏன், தமிழகத்தின் மிகுந்த ஆளுமையான நபர் என்று கூறப்பட்ட…
-
முன்னாள் அதிபருக்கு 25 ஆண்டு சிறை.. கொசோவோவை அதிரவைத்த நீதிமன்ற தீர்ப்பு!
கொசோவோ நாட்டின் முன்னாள் அதிபர் ஹாசிம் தாசிக்கு (HashimThaci) போர்க்குற்ற வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நெதர்லாந்தின் தி ஹேக் (The Hague) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.1990களில் செர்பியாவிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக நடைபெற்றபோரின்போது அரசியல் எதிரிகள்,பொதுமக்கள் என 96 பேரை படுகொலைசெய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 1990-களின் இறுதியில் செர்பியாவிற்கு எதிராக நடந்த சுதந்திரப் போரின்போது, கொசோவோ விடுதலைப் படையின் (KLA) அரசியல் பிரிவின் தலைவராக ஹாசிம் தாசி செயல்பட்டார். KLA…
-
35 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. ஆபத்தில் பூமியின் நன்னீர்.. உலக ஆறுகள் குறித்து WMO அதிர்ச்சி அறிக்கை!
கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகின் ஆறுகளில் நீர்வரத்து மிகக் தீவிரமாகக் குறைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குடிநீர் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள ‘மாநில உலகளாவிய நீர் வளங்கள் 2025’ (State of Global…
-
நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மம்!
நிலவை நாம் வானத்தில் பார்க்கும்போது, அதன் மேற்பரப்பு முழுவதும் ஏராளமான பள்ளங்களுடன் இருப்பதாகச் சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால், அந்த நிலவில் 141 அடி ஆழத்திற்கு பள்ளம் ஒன்று இருப்பதாகச் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படியொரு புதிய பள்ளத்தைத்தான் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA-வின் Lunar Reconnaissance Orbiter எனப்படும் LRO கண்டுபிடித்துள்ளது. பல ஆண்டுகளாக நிலவைச் சுற்றி வந்து அதன் மேற்பரப்பை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து வரும் இந்த விண்கலம், பழைய மற்றும்…
-
17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை
இந்திய தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் பாகத்தை நாய்கள் கடித்துத் தின்ற அவலமும் நிகழ்ந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கொடூர குற்ற சம்பவம் டெல்லியில் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வரூப் நகரில் நடந்துள்ளது. பொலிஸார் உடலை கைப்பற்றிய போது இறந்தவரின் பாலினத்தை தடயவியல் நிபுணர்கள் அறிவதில் சிக்கல் இருந்தது. இந்த சூழலில் இந்த குற்ற பின்னணியை பொலிஸார்…
-
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (18) முற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தபோது 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
-
ஈரானில் அமெரிக்க தாக்குதல்கள்: போர்க்குற்றம் நிகழ்ந்திருக்கலாம் – ஐ.நா. தெரிவிப்பு
ஈரானில் அமெரிக்கா நடத்திய இருவேறு வான்வழித் தாக்குதல்களில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதுவதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சுயாதீன நிபுணர் குழு தெரிவித்துள்ளது. மினாப் நகரிலுள்ள பாடசாலை மீதான தாக்குதலில் 168 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. லாமர்ட் நகரில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஈரான் அரசுப் படைகள் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொண்ட வன்முறை மற்றும் ஒடுக்குமுறைகள் மனிதகுலத்துக்கு…
-
ட்ரம்பின் மகன்களுடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் ட்ரோன் ஒப்பந்தம்
அமெரிக்க ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Powerus, பாகிஸ்தான் இராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ட்ரோன் தொடர்பான ஆரம்பகட்ட ஓர்டரையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் மதிப்பு மற்றும் ட்ரோன்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. Powerus, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன்களான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ரம்ப் முதலீடு செய்துள்ள Aureus Greenway Holdings நிறுவனத்துடன் அக்டோபரில் இணையத் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் ட்ரோன் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் எதிர்காலத்தில் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து…
-
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு வீட்டுக் காவல் அனுமதி
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு, மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் வகையில் மன்னிப்பு வழங்க மலேசிய மன்னர் சுல்தான் இப்ராகிம் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமரின் சட்டத் துறை அறிவித்துள்ளது. 1MDB நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நஜீப் ரசாக்கிற்கு, முன்பு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை 2024ஆம் ஆண்டு ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. புதிய முடிவின்படி, அவரது தண்டனைக் காலம் 2028 ஓகஸ்ட் 23ஆம் திகதி வரை தொடரும்.…
-
தெற்கு பிலிப்பைன்ஸிலுள்ள பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – பலர் காயம்
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் இன்று (18) துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட மேலதிக விவரங்களை அதிகாரிகள் தற்போது சரிபார்த்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.