Author: Six Side Media
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவுக்கு அழைப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைய கனடாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைவதற்கு கனடாவுக்கு நேற்று (17) அந்த அமைப்பின் தலைவர் உருசுலா வொன் டெர் லெயன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வரும் கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, முதல் இணை உறுப்பினராக இணையுமாறு…
-
மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சி – சவூதிக்கு ஆதரவாக பாகிஸ்தான் உறுதி
இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, சவூதி அரேபியா மற்றும் துருக்கி உடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தக் கடமையை நிறைவேற்ற தயார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீது நேற்று (16) தாக்குதல் நடத்த ஏவப்பட்ட ட்ரோன்களை இடைமறித்து தகர்த்ததாகவும், இதற்கு யேமனின் ஹௌதி அமைப்பினர்கள்தான் காரணம் எனவும் சவூதி பாதுகாப்புப் படை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஹௌதி படை மறுப்பு…
-
முல்லைத்தீவில் காணிகளை விடுவிக்க களஆய்வு
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், வனவளத்திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியிருந்த நிலையில், வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் இணைந்த களஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம், வனவளத் திணைக்களம், பாராளுமன்ற உறுப்பினர் துரைரராசா ரவிகரன், காணிகளுக்குரிய மக்கள் ஆகியோர் இணைந்து குறித்த பகுதிக்கு நேரில் சென்று இணைந்த களஆய்வு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பில் மேலும்…
-
திலீபன் நினைவேந்தலை புறக்கணித்த தவிசாளர் உள்ளிட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்
வலி. வடக்கு பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில், பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது புறக்கணித்துள்ளனர். வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (17) சபா மண்டபத்தில் நடைபெறவிருந்த நிலையில், கீரிமலை பகுதிகளில் அனுமதியின்றி வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தவிசாளர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கண்டித்து பெரும்பாலான உறுப்பினர்கள் அமர்வை…
-
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கு : முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர்,கருத்திற்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை, முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவிட்டது. தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத…
-
பீஜியில் தீவிரமடையும் HIV தொற்று: தேசிய நெருக்கடியாக அறிவிப்பு
புதிய HIV தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பீஜி (Fiji ) நாட்டு அரசு HIV நிலைமையை தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ளது. பீஜி நாட்டு அரசாங்கத்தின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் 2,016 பேருக்கு புதிதாக HIV தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் வசிக்கும் 60 பேரில் ஒருவர் HIV தொற்றுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் HIV தொற்றுடன் 59 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அவர்களில் 18 பேர் ஒரு வயதை அடைவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாகவும் பீஜி…
-
500,000 போலி Gmail கணக்குகள் மூலம் குண்டு மிரட்டல்கள்: Googleஐ விசாரிக்கவிருக்கும் இந்தியக் காவல்துறை
இந்தியாவில் போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்ப 500,000க்கும் அதிகமான Gmail மின்னஞ்சல் கணக்குகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்பில் Google நிறுவனத்தை இந்தியக் காவல்துறை விசாரிக்கவிருக்கிறது. குஜராத் காவல்துறை இந்த வாரம் மின்னஞ்சல் கட்டமைப்பு ஒன்றை முறியடித்து இருவரைக் கைது செய்தது. அதிரடி நடவடிக்கையில் 513,847 Gmail கணக்குகளும் அவற்றின் கடவுச்சொற்களும் தெரியவந்தன. அவை 2022ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை காணாத அளவு போலி Gmail கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக குஜராத் இணையக் குற்றப்பிரிவின் மூத்த அதிகாரி ராய்ட்டர்ஸிடம்…
-
இரண்டே நாளில் வேறு பள்ளிக்கு மாறும் இளவரசர் ஹாரியின் பிள்ளைகள்
பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியின் பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்த இரண்டே நாளில் வேறு பள்ளிக்கு மாறுகின்றனர். பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் உள்ள பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக அவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. பள்ளியின் தரமோ அங்குப் பிள்ளைகள் நடத்தப்பட்ட விதமோ முடிவுக்குக் காரணம் இல்லை என்று குறிப்பிட்டப்பட்டது. வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையிலான தூரம், அந்த வட்டாரத்தில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிக் கவலை எழுந்துள்ளது. இளவரசர் ஹாரி – மேகன் மார்க்கல் தம்பதியின் பேச்சாளர்…
-
பல நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடரும்: இந்தியா
இந்தியா தொடர்ந்து பல்வேறு நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம், ரஷ்ய எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை வாங்கும் நாடுகள் மீது கடுமையான வரிவிதிக்கும் புதிய சட்டத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்தியா அவ்வாறு கூறியுள்ளது. 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தித் தேவையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு சொன்னது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கப்போவதாக அது வலியுறுத்தியது. தனது வர்த்தக, பொருளாதார நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக…
-
ஈரான், அமைதி உடன்பாட்டிற்கேற்ப செயல்படவேண்டும்: சீனா
ஈரான் சென்ற ஜுன் மாதம் அமெரிக்காவுடன் செய்துகொண்ட இடைக்கால அமைதி உடன்பாட்டின் விதிகளுக்கு ஏற்ப செயல்படவேண்டும் என்று சீனா கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சியிடம் (Abbas Aragchi) அவ்வாறு கூறியுள்ளார். ஈரானும் அமெரிக்காவும் அமைதி காத்து, அரசதந்திரப் பேச்சுகளைத் தொடரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க, எல்லாத் தரப்பும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் திரு வாங் யீ வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த…