Category: முக்கிய செய்தி
-
வரலாற்றை புரட்டிப்போட்ட பிரிட்டன் பொதுத் தேர்தல் ; புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர்!
2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் 14 ஆண்டுகளின் பின்னர் அந்நாட்டு தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer)பதவியேற்கவுள்ளார். 2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தொழிலாளர் கட்சி 386 இடங்களிலும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 94 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளமை இந்நிலையில் பிரிட்டனின் தோள்களில் இருந்த பெருஞ்சுமை…
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் தம்மிக்க!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.see
-
தேர்தலில் போட்டியிடுவது குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல் – செய்தி வெளியானது
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு பதவியேற்றதை தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தான் இந்த விடயத்தை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் தான் வேட்பாளராக களமிறங்காவிட்டாலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான…
-
தேசிய அரசாங்கத்துக்கு உடன்பாடு இல்லை என:தீர்மானம் சஜித் கட்சி
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவினால் இன்று (02) முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு கட்சியின் நாடாளுமன்றக் குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் நடத்தப்படவேண்டும் என்பது அரசியலமைப்பின் நியதியாகும். இருந்தபோதும், யார் போட்டியிட்டாலும் 51 வீத வாக்குகளை பெறமுடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அரசியலமைப்பில்…
-
நாடு முழுவதும் ஆயுதப்படைகளை களமிறக்க உத்தரவிட்டார் ஜனாதிபதி
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (02.07.2024) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என சபாநாயகர் கூறியுள்ளார். மேலும், பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி,…
-
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் அதன் கட்சிக்கு பேரிழப்பு
இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 9:10 மணியளவில் கொழும்பில் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இரா.சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார். இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வந்த இவர் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட இவர் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மொரட்டுவ புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி…
-
கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து போராட்டம்
தங்காலை பள்ளிக்குடா பகுதியிலில் கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தங்காலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களை உடனடியாகக் கரைக்குக் கொண்டு வருமாறு அதிகாரிகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (28) இரவு மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் கடலில் மிதந்த போத்தல்களைக் எடுத்து அவற்றை மதுபானம் என நினைத்துக் குடித்துள்ளனர். இதனால் கப்பலில் இருந்த 06 மீனவர்களும் பாரிய சுகவீனமடைந்துள்ளதுடன் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என்பது…
-
மாபெரும் இறுதிப் போட்டி இன்று!
2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெற உள்ளது. அதன்படி, இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ள நிலையில், போட்டி பார்படோஸில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 9வது ‘டி-20’ உலகக்கிண்ணத் தொடர் இடம்பெற்று வருகிறது. ‘நடப்பு சாம்பியன்’ இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட முன்னணி அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இன்று பார்படோஸின்…
-
இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் காணிகளின் விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பூர்வீக காணிகளில் ஒரு அங்குல காணி கூட உரிமை இல்லாத 24 லட்சம் குடும்பங்களுக்கு உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்டுவதால், இந்த நிலைமை ஏற்படவுள்ளதாக சந்தை தரப்பினர் கூறுகின்றனர். அரசுக்கு சொந்தமான பெருமளவிலான காணிகளை தனியாருக்கு மாற்றுவதன் ஊடாக இது நாட்டிலேயே மிகப்பெரிய தனியார்மயமாக்கல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். காணிகளின் உரிமை இதன்போது, காணிகள் அற்ற மக்களில் பெரும் பகுதியினர் காணிகளின்…
-

ஜே.வி.பியினரே எமக்கு ஆயுதங்களை வழங்கினார்கள்!
ஜே.வி.பி கட்சியினரே எமக்கு ஆயுதம் வழங்கினார்கள் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்புக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் செய்த ஜே.வி.பியின் தலைவர் மட்டக்களப்பில் பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக தெரிவித்தமை தொடர்பாக ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியமைக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகக்க தான் முதலில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள், பின்பு எங்களிடம் மக்களை சுடுவதற்கென ஆயுதம்…