Category: முக்கிய செய்தி
-
அடுத்து வரும் தேர்தலில் மொட்டு கட்சி போட்டியிடும் திட்ட வட்டம்
செய்வார் என்று நாங்கள் நம்பினோம். இரண்டு வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் போது, நாம் எதிர்பார்த்ததைச் செய்திருக்கிறார். இப்போது ரணில்தான் ஆள் என்ற கருத்து கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படியானால், அன்று நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று நினைக்கிறோம். கடற்படைச் சிப்பாயின் இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ள யாழ் கடற்றொழிலாளர்கள் கடற்படைச் சிப்பாயின் இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ள யாழ் கடற்றொழிலாளர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நாட்டுக்கு நல்ல செய்தியைக் கூறும்போது, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நம்பிக்கையுள்ள…
-

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியினை புனரமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்றைய தினம் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர். வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குறித்த வீதியினை பயன்படுத்தும் 5 கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டிருந்தனர். ஐந்து வருடங்களாக புனரமைக்கப்படாத இந்த வீதியால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற போதிலும் மிக மோசமான நிலையில் வீதி பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரவிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில்…
-

இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் , இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் படகொன்றில் அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளதை , அவதானித்து , அவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர். அதன் போது…
-

நெடுந்தீவு இளைஞனின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம்!
நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையின் பின் நேற்று இரவு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று இறுதி கிரிகைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் நல்லடக்கத்திற்காக சேமக்காலைககு எடுத்துச் செல்லும் போது மக்கள் சடலத்தையும் தோள்களில் சுமந்தவாறு நெடுந்தீவு…
-

யாழ். ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் ; கைதான மூவரும் பிணையில் விடுதலை!
யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது. இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ…
-

வவுனியாவில் நில அதிர்வு!
வவுனியாவை அண்மித்து நேற்றிரவு(18), 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவானது என புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. வவுனியாவின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-

யாழில், நான்கு தமிழக கடற்தொழிலாளர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
-

தாக்குதலாளிகளை கைது செய்ய தவறின் வீதியில் இறங்கி போராடுவோம்!
யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி , வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை விரைவாக முன்னெடுத்து உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்னதாக நிறுத்த அரசு தவறுமாயின் ஊடகவியலாளர்களாகிய நாம் வீதிகளில் இறங்கி போராட பின்னிற்கப்போவதில்லையென யாழ்.ஊடக அமையம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் வீட்டின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் சுதந்திர ஊடக அமைப்பு காவல்துறை அதிபருடன் கொழும்பில் நேரில் பேச்சுக்களை நடாத்தியுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு வருகை…
-

யாழில். மைதானத்திற்கு புகுந்து வாள் வெட்டு – தாக்குதலாளிகளை மடக்கி பிடித்து நயப்புடைத்த ஊரவர்கள்!
யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் , இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். மீசாலை பகுதியை சேர்ந்த சிவகுமார் ராகுலன் (வயது 25) எனும் இளைஞனே வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட 12 பேரை கொண்ட வன்முறை கும்பலில் நான்கு பேரை ஊரவர்கள் மடக்கி பிடித்து, நயப்புடைத்து , மின்…
-

யாழில். கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர், நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கற்கோவளம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இளைஞனை சில நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் , நேற்றைய தினம் வியாழக்கிழமை கஞ்சாவை விற்பனைக்காக எடுத்து சென்ற போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து…